IPL 2024 LSG vs RR LIVE Score: லக்னோவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

IPL 2024 RR Vs LSG LIVE Score Updates: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

Continues below advertisement

LIVE

Background

RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடர் 2024:

இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 42 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி,  இரண்டாவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்  மற்றும் கே. எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.

ராஜஸ்தான் - லக்னோ மோதல்:

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ராஜஸ்தான் அணி  இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்விகண்டு, 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியிலும் ராஜஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால், இன்றைய போட்டியிலும் வென்று பிளே-ஆஃப் சுற்றுக்கான தனது வாய்ப்பை இறுதி செய்ய தீவிரம் காட்டுகிறது. லக்னோ அணியோ 8 போட்டிகளில் விளையாடிம் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. அதேநேரம், நடப்பு தொடரில் ஏற்கனவே பெற்ற தோல்விக்கு பழிவாங்க, லக்னோ இன்று களம் காண்கிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

பலம், பலவீனங்கள்:

ராஜஸ்தான் அணியில் பட்லர், ஜெய்ஷ்வால், சாம்சன் மற்றும் ரியன் பராக் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர்.  பந்துவீச்சில் போல்ட், சந்திப் சர்மா,  சாஹல் மற்றும் அஷ்வின் ஆகியோர் எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். மறுமுனையில் உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது லக்னோ அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. மேலும், கே.எல். ராகுல்,  படோனி, பூரான்,மற்றும் ஸ்டோய்னிஷ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் ரன் குவித்து வருகின்றனர். ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் பந்துவீச்சில் நம்பிக்கை அளிக்கின்றனர்.

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 4 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி மூன்று முறையும், லக்னோ அணி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.  லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 193 ரன்களையும், குறைந்தபட்சமாக 144 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி அதிகபட்சமாக 173 ரன்களையும், குறைந்தபட்சமாக 154 ரன்களையும் பதிவு செய்துள்ளது.

லக்னோ மைதானம் எப்படி?

லக்னோ மைதானம் கடந்த ஆண்ட போல ஸ்லோ பிட்சாக இல்லை. போட்டியின் 40 ஓவர்களுக்கும் ஒரே மாதிரியான சூழலை தொடர்கிறது. நடப்பு தொடரில் இந்த மைதானத்தில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 2 முறையும், சேஸிங் செய்த அணிகள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. டாஸ் வெல்லும் அணி சேஸிங்கையே பெரும்பாலும் விரும்பும்.

உத்தேச அணி விவரங்கள்:

ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மன் பவல், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்

லக்னோ: குயின்டன் டி காக், கே.எல். ராகுல் (கே.எல். ராகுல்), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருணால் பாண்ட்யா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்

Continues below advertisement
23:19 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: வென்று கொடுத்த சாம்சன் - துருவ் ஜுரேல் கூட்டணி!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜுரேல் என இருவரும் அரைசதம் விளாசி ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினர். 

23:12 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: லக்னோவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

19 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

22:51 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: 150 ரன்களைக் கடந்த ராஜஸ்தான்!

16 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை நெருங்கி வருகின்றது. 

22:46 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் சேர்த்துள்ளது. 

22:42 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: இலக்கை வேகமாக துரத்தும் ராஜஸ்தான்!

14 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

22:40 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: மிரட்டும் துருவ் ஜுரேல்!

ஆட்டத்தின் 14வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி சிறப்பாக விளையாடி வருகின்றார் துருவ் ஜுரேல். 

22:32 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: 100 ரன்களை எட்டிய ராஜஸ்தான்!

12 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்து இலக்கைத் துரத்தி வருகின்றது. 

22:22 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான்!

10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் 81 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. வெற்றிக்கு இன்னும் 10 ஓவர்களில் 116 ரன்கள் தேவைப்படுகின்றது. 

22:17 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: பராக் அவுட்!

லக்னோ அணியின் இம்பாக்ட் ப்ளேயர் அமித் மிஸ்ராவின் பந்தில் ராஜஸ்தான் அணியின் இம்பேக்ட் ப்ளேயர் ரியான் பராக் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

22:05 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: இரண்டாவது விக்கெட்டினை கைப்பற்றிய லக்னோ!

7வது ஓவரின் முதல் பந்தில் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

22:03 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 60 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

22:02 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: முதல் விக்கெட்டினை இழந்த ராஜஸ்தான்!

5.5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பட்லர் தனது விக்கெட்டினை இழந்தார். 

21:55 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: இலக்கைத் துரத்தும் ராஜஸ்தான்!

லக்னோ நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் ராஜஸ்தான் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

21:20 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: லக்னோ நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை எட்டுமா ராஜஸ்தான்?

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள்  சேர்த்துள்ளது. 

21:11 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: 19 ஓவர்கள் முடிந்தது!

19 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

21:04 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: கே.எல். ராகுல் அவுட்!

லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் தனது விக்கெட்டினை 48 பந்தில் 76 ரன்கள் சேர்த்த நிலையில், அவேஷ்கான் பந்தில் இழந்து வெளியேறினார். 

20:53 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: பூரன் அவுட்!

சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் தனது விக்கெட்டினை சந்தீப் சர்மா பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 11 பந்தில் 11 ரன்கள் சேர்த்தார். 

20:50 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: 150 ரன்களை எட்டிய லக்னோ!

15 ஓவர்கள் முடிவில் லக்னோ 3 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

20:36 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: தீபக் ஹூடா அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த தீபக் ஹூடா 50 ரன்களில் விக்கெட்டானார்.

20:28 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: 11 ஓவர்கள் முடிந்தது!

11 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ அணி 112 ரன்கள் குவித்துள்ளது.

20:22 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: 10 ஓவர்கள் முடிந்தது!

10 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ அணி 94 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

20:17 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 81 ரன்கள் எடுத்துள்ளது.

20:11 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: 75 ரன்களை எட்டிய லக்னோ!

8 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்துள்ளது. 

20:05 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: 50 ரன்களைக் கடந்த லக்னோ!

லக்னோ அணி 7 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.

20:02 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

19:56 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: 5 ஓவர்களில் லக்னோ!

லக்னோ அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

19:46 PM (IST)  •  27 Apr 2024

IPL 2024 LSG vs RR LIVE Score: தத்தளிக்கும் லக்னோ!

2.4 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

19:36 PM (IST)  •  27 Apr 2024

DC vs MI LIVE Score: திலக் வர்மா அவுட்!

திலக் வர்மா தனது விக்கெட்டினை கடைசி ஓவரின் முதல் பந்தில் இழந்து வெளியேறினார்.