RCB vs PBKS LIVE Score: இறுதியில் பஞ்சரான பஞ்சாப் பவுலிங்; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி!
IPL 2024 RCB vs PBKS LIVE Score Updates:
பெங்களூரு அணி 19.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 178 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 100 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளது.
18 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பெங்களூரு அணி 17.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 153 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
17 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அனுஜ் ராவத் தனது விக்கெட்டினை போட்டியின் 17வது ஓவரில் சாம் கரன் பந்தில் இழந்து வெளியேறினார்.
விராட் கோலி தனது விக்கெட்டினை ஹர்ஷல் பட்டேல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 49 பந்தில் 77 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
பெங்களூரு அணி 5 ஓவர்களில் 59 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடி வருகின்றது. 15 ஓவர்களில் 4 விக்கெட்டினை இழந்து 118 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
14 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் தனது விக்கெட்டினை 3 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்ப்ரீத் பிரார் பந்தில் இழந்து ஆட்டமிழந்தார்.
12 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்த ஐபிஎல் தொடரில் மேக்ஸ் வெல் தனது முதல் ரன்னை எடுத்துள்ளார். இவர் கடந்த போட்டியில் டக் அவுட் ஆகியிருந்தார்.
18 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் ரஜித் படிதார் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் சேர்த்து விளையாடி வருக்ன்றது.
பெங்களூரு அணி 9 ஓவர்களில் 2 விக்கெட்டினை இழந்து 77 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட்டினை இழந்து 61 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பெங்களூரு அணி 6 ஓவர்களில் 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
கேமரூன் க்ரீன் தனது விக்கெட்டினை 5 பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் இழந்து வெளியேறினார்.
பெங்களூரு அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 41 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மூன்று ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 28 ரன்கள் சேர்த்துள்ளார்.
ராபாடா வீசிய போட்டியின் மூன்றாவது ஓவரில் பெங்களூரு கேப்டன் டூ பிளெசிஸ் தனது விக்கெட்டினை 3 ரன்களில் இழந்து வெளியேறினார்.
2 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 21ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
போட்டியின் முதல் ஓவரில் விராட் கோலி அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசி ஹாட்ரிக் பவுண்டரி விளாசியுள்ளார்.
177 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்கி விளையாடி வருகின்றது.
பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்துள்ளது. பெங்களூரு அணிக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
19 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பஞ்சாப் அணி தனது 6வது விக்கெட்டாக ஜிதேஷ் சர்மாவை இழந்துள்ளது. ஜிதேஷ் சர்மா 20 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார்.
அதிரடியாக விளையாடி வந்த சாம் கரன் தனது விக்கெட்டினை யாஷ் தயாள் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 17 பந்தில் 23 ரன்கள் சேர்த்தார்.
பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எட்டியுள்ளது.
17 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்துள்ளது.
14 ஓவர்கள் முடிந்த நிலையில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்களில் விக்கெட்டு பறிகொடுத்துள்ளார்.
லியாம் லிவிங்ஸ்டன் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.
11 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறாது.
10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
அதிரடியாக விளையாடி வந்த பஞ்சாப் அணி வீரர் பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டை பறிகொடுத்தார். 17 பந்துகளில் 27 ரன்களை அவர் விளாசினார்.
8 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 61 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஷிகர் தவான் போட்டியின் 8வது ஓவரில் இமாலய சிக்ஸரை விளாசி தனது சிக்ஸர் கணக்கைத் தொடங்கியுள்ளார்.
7 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் முதல் சிக்ஸரை பிரப்சிம்ரன் 7வது ஓவரில் சிறப்பாக விளாசினார்.
பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 40 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. களத்தில் ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் உள்ளனர்.
5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 34 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி வருகின்றார். குறிப்பாக இதுவரை 3 பவுண்டரி விளாசியுள்ளார்.
மூன்று ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 21 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் பேர்ஸ்டோவ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
மூன்றாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி விளாசி அசத்தினார்.
போட்டியின் இரண்டாவது ஓவரை வீசிய யாஷ் தயாள் அந்த ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பாக வீசினார். பஞ்சாப் அணி 9 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவர் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் முதல் பந்தை ஷிகர் தவான் பவுண்டரிக்கு விரட்டியுள்ளார்.
பெங்களூரு அணி சார்பில் முதல் ஓவரை முகமது சிராஜ் வீசவுள்ளார்.
பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் அணி களமிறங்கியுள்ளது. பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ஜானி பேரிஸ்டோவ் தொடங்க களமிறன்கியுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ஷிகர் தவான்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர் ), அல்ஜாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்
பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
எப்போதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இம்முறையும் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் ஒவ்வொரு நாளும் போட்டிக்கு போட்டி மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 25ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இரு அணிகளும் சிறப்பாக தங்களை தயார் செய்து வருகின்றது. இரு அணிகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இரு அணிகளும் ஐபிஎல் தொடங்கிய 2008ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகின்றன. ஆனால் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.
நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சென்னை அணிக்கு எதிராக தோல்வியும், பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் தனது சொந்த மைதானத்தில் களமிறங்கும் பெங்களூரு அணி முதல் வெற்றியைப் பெற போராடும் என எதிர்ப்பார்க்கலாம். அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது வெற்றிப் பயணத்தை தொடர தீவிரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
இரு அணிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பஞ்சாப் அணியின் கரங்கள் பந்து வீச்சிலும் பெங்களூரு அணியின் கரங்கள் பேட்டிங்கிலும் உயர்ந்துள்ளது. இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச முடிவு செய்வதே வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்கான வழி. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினால் இந்த போட்டி ஹை-ஸ்கோரிங் போட்டிகளில் ஒன்றாக அமைய அதிக வாய்ப்புள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளது. அதில், பஞ்சாப் அணி 17 போட்டிகளிலும், பெங்களூரு அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பெங்களூரு அணி அதிகபட்சமாக 226 ரன்களையும், குறைந்தபட்சமாக 84 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பெங்களூரு அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 232 ரன்களையும், குறைந்தபட்சமாக 88 ரன்களையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு ப்ளேயிங் லெவன்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், க்ளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அல்சாரி ஜோசப், மயங்க் டாகர், கர்ன் ஷர்மா, முகமது சிராஜ்
இம்பேக்ட் ப்ளேயர்: தினேஷ் கார்த்திக் - யாஷ் தயாள்
பஞ்சாப் ப்ளேயிங் லெவன்: ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர்
இம்பேக்ட் ப்ளேயர்: பிரப்சிம்ரன் சிங் - அர்ஷ்தீப் சிங்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -