RCB vs PBKS LIVE Score: இமாலய வெற்றி பெற்ற பெங்களூரு; ப்ளேஆஃப் வாய்ப்பினை இழந்த பஞ்சாப்!
IPL 2024 RCB vs PBKS LIVE Score Updates: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
பஞ்சாப் அணியால் 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுக்கவே முடிந்தது. இதனால் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திலேயே நீடித்தாலும், - 0.049ஆக இருந்த ரன்ரேட்டினை +0.217ஆக உயர்த்தியது.
பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் அஷுதோஷ் சர்மா தனது விக்கெட்டினை 8 ரன்களில் இழந்து வெளியேறினார்.
ஷஷாங் சிங் தனது விக்கெட்டினை 19 பந்தில் 37 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
13.3 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்தது.
13 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் சேர்த்துள்ளது.
பஞ்சாப் அணியின் இம்பேக்ட் ப்ளேயர் ஜிதேஷ் சர்மா தனது விக்கெட்டினை கரண் சர்மா பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 4 பந்தில் 5 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் சேர்த்துள்ளது.
27 பந்துகளில் 61 ரன்கள் குவித்திருந்த ரோசோவ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். தனது விக்கெட்டினை பறிகொடுத்த பந்துக்கு முன்னர் சந்தித்த பந்தினால் அவர் காயம் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓவரை கரண் சர்மா வீசினார்.
8.2 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி தனது 100 ரன்களைக் கடந்தது.
8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் சேர்த்துள்ளது.
21 பந்துகளை மட்டும் எதிர் கொண்டு 8 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசி ரோசோவ் தனது அரைசதத்தினை எட்டினார்.
பஞ்சாப் அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களை எட்டினர்.
பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அதிரடியாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 16 பந்தில் 27 ரன்கள் சேர்த்திருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் சேர்த்தது.
20வது ஓவரில் ஹர்சல் பட்டேல் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி நடப்புத் தொடரில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற தொப்பியை கைப்பற்றினார்.
18 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் சேர்த்தது.
47 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்த நிலையில் விராட் கோலி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரு, எழுந்து நின்று கைகள் தட்டி அவரை ஆரவாரத்துடன் பெவிலியனுக்கு வரவேற்றனர்.
46 பந்துகளில் விராட் கோலி 92 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றார்.
17 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எட்டியுள்ளது.
16 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 41 பந்தில் 80 ரன்களை எட்டினார்.
15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்துள்ளது. களத்தில் விராட் கோலி 38 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றார். க்ரீன் 15 பந்தில் 19 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார்.
14 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 153 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் உள்ள விராட் கோலி 35 பந்தில் 58 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
13.3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 150 ரன்களை எட்டி சிறப்பாக விளையாடி வருகின்றது.
13வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார். பெங்களூரு அணி 13 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் சேர்த்தது.
விராட் கோலி 32 பந்துகளை எதிர்கொண்டு தனது அரைசதத்தினை எட்டி அதிரடியாக விளையாடி வருகின்றார்.
12 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மழைக்கு பின்னர் ஆட்டம் தொடங்கியது. 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை பெங்களூரு எட்டியுள்ளது.
தரம்சாலாவில் நடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.
பெங்களூரு அணி அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது மழை குறிக்கிட்டுள்ளது.
10 ஒவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. அதன்படி 10 ஓவரின் கடைசி பந்தில் ரஜத் படிதார் அவுட் ஆகியுள்ளார்.
கடைசி 5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 74 ரன்கள் எடுத்துள்ளது
9 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூரு 94 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜத் பட்டிதர் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி வருகிறார் சாஹர் பந்தில்.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
பவர்ப்ளே முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பஞ்சாப் அணி 5 ஓவர்களுக்குள் மூன்று கேட்ச் வாய்ப்புகளை வீணடித்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அதிரடியாக பவுண்டரிகளை விளாசி வந்த வில் ஜாக்ஸ் தனது விக்கெட்டினை கவீரப்பா பந்தில் இழந்து வெளியேறினார். டூ ப்ளெசிஸ் தனது விக்கெட்டினை கவீரப்பா பந்தில் இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டூ ப்ளெசிஸ் தனது விக்கெட்டினை இழந்திருந்தாலும் கோலி மற்றும் வில் ஜாக்ஸ் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி வருகின்றனர். 4 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 36 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்றாவது ஓவரில் டூ ப்ளெசிஸ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். மூன்று ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 20 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை ப்ளெசிஸ் பவுண்டரிக்கு விளாசி அசத்தினார். முதல் ஓவர் முடிவில் பெங்களூரு அணி 11 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் கோலி கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பினை பஞ்சாப் அணியின் அஷுதோஸ் சர்மா வீணடித்தார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
Background
ஐபிஎல் 2024 இன் 58வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இதுவரை, மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியே சென்றது. மற்ற 9 அணிகளுக்கும் இடையே டாப்-4-ல் நீடிப்பதற்கான போர் இன்னும் நடந்து வருகிறது. இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் புள்ளிகள் பட்டியலில் முறையே 7வது மற்றும் 8வது இடத்தில் உள்ளன. மேலும், இரு அணிகளும் தற்போது தலா எட்டு புள்ளிகளுடன் உள்ளனர். இரு அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க இந்த மோதல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தோற்ற அணி வெளியே..?
ஐபிஎல் 2024ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி இரு அணிகளும் தலா 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற, அடுத்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் கட்டாய வெற்றியினை பதிவு செய்ய வேண்டும். ஆனால் இன்றைய போட்டியில் எந்த அணி தோற்கிறதோ அந்த அணி வெளியேற்றப்பட உள்ளது. ஏனெனில் இன்று தோல்வியடைந்த அணி அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 12 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிஅக்ள் தற்போது 12 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், லக்னோ மற்றும் டெல்லி இடையே இன்னும் ஒரு போட்டி உள்ளது. இதன் காரணமாக அவற்றில் ஒன்று நிச்சயமாக 14 புள்ளிகளை எட்டி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்கும்.
ஹாட்ரிக் வெற்றியுடன் களமிறங்கும் ஆர்சிபி:
ஐபிஎல் 2024 தொடங்கப்பட்டபோது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்தது. ஆனால், அதன்பிறகு ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி படை கடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றிகளை குவித்துள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்ற நம்பிக்கையை அந்த அணி தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். கடந்த 3 ஆட்டங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஒரு முறையும், குஜராத் டைட்டன்ஸ் அணியை இரண்டு முறையும் தோற்கடித்துள்ளது.
வெளியேறிய மும்பை அணி:
ஐபிஎல் 2024 தற்போதைய சீசனில் இருந்து வெளியேறிய முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது, இதன் காரணமாக அந்த அணி தற்போது 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளில் மும்பை வெற்றி பெற்றாலும் 12 புள்ளிகளைப் பெற முடியும். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால், லக்னோவின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பாதிக்கலாம். எது எப்படியோ! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இன்று மற்றொரு பெயர் மும்பையுடன் இணையும், பிளே ஆஃப் வாய்ப்புக்கான பட்டியலில் இருந்து வெளியேறும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -