RCB vs LSG LIVE Score: 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி; தொடர் தோல்வியில் பெங்களூரு தவிப்பு!
IPL 2024 RCB vs LSG LIVE Score Updates: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் உடனுக்குடன் காணலாம்.
பெங்களூரு அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
13 பந்தில் 33 ரன்கள் குவித்த மகிமால் லம்ரோர் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதன் மூலம் பெங்களூரு அணியின் தோல்வி உறுதியாகியுள்ளது.
பெங்களூரு அணியின் மயங்க் டாகர் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
தினேஷ் கார்த்திக் தனது விக்கெட்டினை 8 பந்தில் 4 ரன்கள் எடுத்த நிலையில் நவீன் உல்-ஹக் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பெங்களூரு அணி 16 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. பெங்களூரு அணியின் வெற்றிக்கு அடுத்த 24 பந்துகளில் 59 ரன்கள் தேவைப்படுகின்றது.
போட்டியின் 16வது ஓவரில் மகிமால் லோம்ரோர் இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசி பெங்களூரு அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகின்றார். இவருக்கு துணையாக களத்தில் தினேஷ் கார்த்திக் உள்ளார்.
15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் அடுத்த 30 பந்துகளில் 78 ரன்கள் வெற்றிக்கு தேவைப்படுகின்றது.
மயாங்க் யாதவ் பந்தில் ரஜித் படிதார் தனது விக்கெட்டினை 21 பந்தில் 29 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
13.3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எட்டியுள்ளது.
பெங்களூரு அணி 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பெங்களூரு அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வந்த அனுஜ் ராவத் தனது விக்கெட்டினை போட்டியின் 14வது ஓவரில் ஸ்டாய்னிஸ் பந்தில் இழந்து வெளியேறினார்.
12வது ஓவரில் ரஜித் படிதார் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி அசத்தினார். இந்த ஓவர் முடிவில் பெங்களூரு அணி 85 ரன்கள் சேர்த்துள்ளது.
11 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் அனுஜ் ராவத் மற்றும் ரஜித் படிதார் உள்ளனர்.
போட்டியின் 8வது ஓவரில் கேமரூன் க்ரீன் தனது விக்கெட்டினை மயாங்க் யாதவ் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 9 பந்துகளுக்கு 9 ரன்கள் சேர்த்தார்.
7 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 54 ரன்களை எட்டியுள்ளது.
6.2 ஓவரில் பெங்களூரு அணி 51 ரன்களை எட்டி விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் 6வது ஓவரில் மேக்ஸ் வெல் தனது விக்கெட்டினை டக் அவுட் முறையில் இழந்துள்ளார்.
ஃபாஃப் டு பிளெசிஸ் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த வகையில் 13 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 19 ரன்கள் எடுத்தார்.
ஃபாஃப் டு பிளெசிஸ் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த வகையில் 13 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 19 ரன்கள் எடுத்தார்.
அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி லக்னோ வீரர் சித்தார்த் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த வகையில் 16 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 22 ரன்கள் எடுத்தார்.
4 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
3 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதல் பவுண்டரியை பதிவு செய்துள்ளார் விராட் கோலி.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணி 1 ஓவர் முடிவில் 3 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 181 ரன்கள் சேர்த்துள்ளது.
19 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
19வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தியுள்ளார் நிக்கோலஸ் பூரன்.
லக்னோ அணி 19வது ஓவரின் மூன்றாவது பந்தில் 150 ரன்களைக் கடந்துள்ளது.
லக்னோ அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆயூஷ் பதோனி 18வது ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
17 ஓவர்கள் முடிவில் லக்னோ 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் சேர்த்துள்ளது.
56 பந்துகளில் 81 ரன்கள் குவித்த குயிண்டன் டி காக் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 8 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசினார்.
16 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
15 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் சேர்த்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் சேர்த்துள்ளது.
15 பந்தில் 24 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டாய்னஸ் தனது விக்கெட்டினை மேக்ஸ் வெல் பந்தில் இழந்து வெளியேறினார்.
28 பந்தில் டி காக் மற்றும் ஸ்டாய்னஸ் கூட்டணி 55 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றது.
லக்னோ அணி 13வது ஓவரில் இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி 19 ரன்கள் குவித்தது. 13 ஓவர்கள் முடிவில் 121 ரன்கள் குவித்துள்ளது.
லக்னோ அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 102 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
36 பந்தில் 52 ரன்கள் சேர்த்து தனது அரைசதத்தினை டி காக் விளாசியுள்ளார்.
லக்னோ அணி 11 ஓவர்களில் 2 விக்கெட்டினை இழந்து 90 ரன்கள் சேர்த்தனர்.
10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டினை இழந்து 73 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 9வது ஓவரின் 5வது பந்தில் தனது விக்கெட்டினை சிராஜ் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 11 பந்தில் 6 ரன்கள் சேர்த்தார்.
முகமது சிராஜ் போட்டியின் 9வது ஓவரில் ஹாட்ரிக் வொய்டு வீசியுள்ளார்.
8 ஓவர்கள் முடிவில் லக்னீ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 62 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 59 ரன்கள் சேர்த்துள்ளது.
டி காக் தனது 99 வது ஐபிஎல் போட்டியில் 3000 ரன்களை எட்டியுள்ளார். 3000 ரன்களை எட்டிய மூன்றாவது தென்னாப்பிரிக்க வீரர் இவர்.
டி காக் கொடுத்த கேட்ச் வாய்ப்பினை பெங்களூரு அணியின் மேக்ஸ் வெல் வீணடித்தார்.
முதல் 6 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 54 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அதிரடி சிக்ஸர்களை விளாசிய கே.எல். ராகுல் தனது விக்கெட்டினை மேக்ஸ் வெல் ஓவரில், 14 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
லக்னோ அணி பவர்ப்ளேவின் கடைசி ஓவரின் இரண்டாவது பந்தின் போது விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5வது ஓவரில் கே.எல். ராகுல் தனது முதல் சிக்ஸரை விளாசினார்.
போட்டியின் 4வது ஓவரை வீசிய மேக்ஸ் வெல் 4 ரன்கள் மட்டும் கொடுத்து ஓவரை முடித்தார். இதனால் 4 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 36 ரன்கள் சேர்த்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 250 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளது.
3 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மூன்றாவது ஓவரின் 4வது மற்றும் ஐந்தாவது பந்தில் டி காக் அடுத்தடுத்து சிக்ஸர் விளாசி அசத்தினார்.
போட்டியின் முதல் சிக்ஸரை டி காக் மூன்றாவது ஓவரின் 4வது பந்தில் விளாசினார்.
இரண்டு ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
முதல் ஓவரில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் சேர்த்துள்ளது.
பெங்களூரு அணிக்கு எதிராக லக்னோ அணியின் இன்னிங்ஸினை கே.எல். ராகுல் மற்றும் டி காக் தொடங்கியுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), ரீஸ் டாப்லி, மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல்(கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ்
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
17வது ஐபிஎல் தொடரில் 14வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி இன்று அதாவது ஏப்ரல் இரண்டாம் தேதி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் மோதவுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தனது நான்காவது லீக் போட்டியில் விளையாடவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகளில் பெங்களூரு அணி இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இதுமட்டும் இல்லாமல் பெங்களூரு அணி நடப்பு தொடரில் தனது சொந்த மைதானத்தில் மூன்றாவது போட்டியில் தொடர்ந்து விளையாடவுள்ளது. கடந்த போட்டியில் பெங்களூரு அணி கொல்கத்தா அணியிடம் மிகவும் மோசமான முறையில் தோல்வியைச் சந்தித்தது. அதாவது அந்த போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இன்று களமிறங்குகின்றது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியைப் பொறுத்தவரை தெளிவான கேம் ப்ளானுடன் கடந்த போட்டியில் விளையாடினர். குறிப்பாக அணியின் வெற்றிக்காக என்ன முடிவு வேண்டுமானலும் எடுக்கலாம், எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ற மனநிலையில் விளையாடியது மட்டும் இல்லாமல், இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகின்றனர். புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள லக்னோ அணி கடந்த போட்டியில் பஞ்சாப் அணியை 21 ரன்னில் வீழ்த்தியது. இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இரு அணிகளும் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. இரு அணிகளும் பஞ்சாப் அணியை வீழ்த்தி தங்களது வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று பஞ்சாப் அணியை வீழ்த்திய அணிகள் மோதிக்கொள்வதால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இரு அணிகளிலும் உள்ள பிரச்னை என்றால் பந்து வீச்சைக் கூறலாம். இதில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -