RCB vs CSK LIVE Score: இறுதிவரை போராடிய சென்னை; 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB

IPL 2024 RCB vs CSK LIVE Score Updates: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 19 May 2024 12:17 AM
RCB vs CSK LIVE Score: இறுதிவரை போராடிய சென்னை; 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB

கடைசி ஓவரில் சென்னை அணி 17 ரன்கள் எடுத்தால் ப்ளேஆஃப் வாய்ப்பினைப் பெறும் என்ற நிலை இருந்தது. யாஷ் தயாள் வீசிய முதல் பந்தினை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டு இமாலய சிக்ஸர் விளாசினார் தோனி. அடுத்த பந்தையும் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டினை இழந்தார். அடுத்து வந்த ஷர்துல் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க, கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த ஜடேஜாவால் அந்த இரண்டு பந்துகளையும் தொடக்கூட முடியவில்லை. இதனால் இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் 191 சேர்த்தது. இதனால் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

RCB vs CSK LIVE Score: தோனி அவுட்!

20வது ஓவரில் தோனி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 13 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். 

RCB vs CSK LIVE Score: சென்னைக்கு 17 ரன்கள் தேவை!

சென்னை அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற கடைசி ஓவரில் வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்படுகின்றது. 

RCB vs CSK LIVE Score: மிரட்டும் தல - தளபதி!

17வது ஓவரில் தோனி மற்றும் ரவீந்திரா இணைந்து 13 ரன்கள் சேர்த்தனர். சென்னை அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இன்னும் 3 ஓவர்களில் 50 ரன்கள் தேவைப்படுகின்றது. 

RCB vs CSK LIVE Score: 150 ரன்களில் சென்னை!

16.5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs CSK LIVE Score: நெருக்கடியில் சென்னை; களத்தில் தல - தளபதி; ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!

16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: சான்ட்னர் அவுட் - அட்டகாசமாக கேட்ச் பிடித்த டூ ப்ளெசிஸ்!

ஆட்டத்தின் 15வது ஓவரின் கடைசிப் பந்தில் சான்ட்னர் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பினை டூ ப்ளெசிஸ் அட்டகாசமாக பிடித்து அசத்தினார். 

RCB vs CSK LIVE Score: துபே அவுட்!

சென்னை அணியின் நம்பிக்கை நாயகன், இம்பேக்ட் ப்ளேயர் சிவம் துபே தனது விக்கெட்டினை ஆட்டத்தின் 14வது ஓவரில் இழந்து வெளியேறினார். இவர் 15 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்திருந்தார். இவரது விக்கெட்டினை கேமரூன் க்ரீன் கைப்பற்றினார். 

RCB vs CSK LIVE Score: ரச்சின் ரவீந்திரா ரன் அவுட்!

சிறப்பாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரா 13வது ஓவரின் கடைசிப் பந்தில் தனது விக்கெட்டினை ரன் அவுட் முறையில் இழந்து வெளியேறினார். இவர் 37 பந்தில் 61 ரன்கள் சேர்த்திருந்தார். 

RCB vs CSK LIVE Score: துபே கேட்ச் மிஸ்!

ஆட்டத்தின் 13வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா கொடுத்த கேட்ச் வாய்ப்பினை சிராஜ் தவறவிட்டார். 

RCB vs CSK LIVE Score: 100 ரன்களைக் கடந்த சென்னை!

12 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்து இலக்கை நோக்கி முன்னேறி வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: அரைசதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா!

தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் ரச்சின் ரவீந்திரா 31 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டினார். 

RCB vs CSK LIVE Score: கெத்து காட்டிய ஃபர்குசன்!

பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர் ஃபர்குசன் ஆட்டத்தின் 10வது ஓவரை வீசி, அதில் இரண்டு ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தது மட்டும் இல்லாமல், ஒரு விக்கெட்டினை கைப்பற்றியும் அசத்தினார். 

RCB vs CSK LIVE Score: களமிறங்கிய துபே!

சென்னை அணியின் இம்பேக்ட் ப்ளேயராக சிவம் துபே களமிறங்கியுள்ளார். 

RCB vs CSK LIVE Score: ரஹானே அவுட்!

22 பந்தில் 33 ரன்கள் சேர்த்த நிலையில் ரஹானே தனது விக்கெட்டினை ஃபர்குசன் பந்தில் இழந்து வெளியேறினார். அணியின் ஸ்கோர் 9.1 ஓவரில் 85ஆக உள்ளது. 

RCB vs CSK LIVE Score: 66 ரன்கள் பார்ட்னர்ஷிப்!

ரஹானே மற்றும் ரவீந்திரா கூட்டணி 40 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: 9 ஓவர்களில் சென்னை!

9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: 8 ஓவர்களில் சென்னை!

8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்தது. 

RCB vs CSK LIVE Score: 7 ஓவர்கள் முடிந்தது!

7 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. களத்தில் ரச்சின் ரவீந்திராவும் அஜிங்கியா ராகானேவும் உள்ளனர். 

RCB vs CSK LIVE Score: பவர்ப்ளே முடிவில் சென்னை!

சென்னை அணி பவர்ப்ளே முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: 50 ரன்களில் சென்னை!

5.3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: 40 ரன்களில் சென்னை!

4.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 40 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

4 ஓவர்கள் முடிவில் 39 ரன்கள்! பவர்ப்ளேவிற்கு பிறகு ஆட்டம் காட்டப்போவது யார்?

219 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வரும் சென்னை அணி 4 ஓவர்கள் முடிவில் 39 ரன்கள் எடுத்துள்ளது.

யஷ் தயாள் பந்தில் அதிரடி வீரர் டேரில் மிட்செல் அவுட்

சி.எஸ்.கே. அணியின் முக்கிய வீரர் டேரில் மிட்செல் யஷ் தயாள் பந்தில் 4 ரன்களுக்கு அவுட்டானார்.

முதல் பந்திலே விக்கெட்! கோல்டன் டக் அவுட்டாகிய ருதுராஜ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மேக்ஸ்வெல் வீசிய முதல் பந்திலே அவுட்டானார்.

RCB vs CSK LIVE Score: சூறாவளியாக சுழன்ற RCB பேட்ஸ்மேன்கள்; CSK-வுக்கு 219 ரன்கள் இலக்கு!

20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்துள்ளது. 

RCB vs CSK LIVE Score: மேக்ஸ் வெல் அவுட்!

19.5 ஓவரில் மேக்ஸ் வெல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 5 பந்தில் 16 ரன்கள் குவித்தார். 

RCB vs CSK LIVE Score: 19 ஓவர்களில் RCB

19 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: தினேஷ் கார்த்திக் அவுட்!

தினேஷ் கார்த்திக் 6 பந்தில் 14 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்தார். 

RCB vs CSK LIVE Score: 200 ரன்களைக் கடந்த தினேஷ் கார்த்திக்!

ஆட்டத்தின் 19வது ஓவரின் 4வது பந்தில் பெங்களூரு அணி 201 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: 18 ஓவர்கள் முடிந்தது!

18 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: பட்டய கிளப்பிய படிதார் அவுட்!

23 பந்துகளில் 41 ரன்கள் குவித்த நிலையில் படிதார் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் இரண்டு பவுண்டரியும் 4 சிக்ஸரும் பறக்க விட்டிருந்தார். 

RCB vs CSK LIVE Score: அடுத்தடுத்து சிக்ஸர் விளாசும் கேமரூன் க்ரீன்!

ஆட்டத்தின் 18வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸருக்கு விளாசி அமர்க்களப்படுத்தி வருகின்றார். 

RCB vs CSK LIVE Score: 17 ஓவர்கள் முடிந்தது!

17 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. படிதார் 22 பந்தில் 41 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி வருகின்றார். 

RCB vs CSK LIVE Score: மிரட்டும் படிதார்!

17வது ஓவரின் முதல் பந்தினை படிதார் சிக்ஸருக்கு விளாசி மிரட்டியுள்ளார். 

RCB vs CSK LIVE Score: 150 ரன்களை எட்டிய பெங்களூரு!

16 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டினை இழந்து 155 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: 14 ஓவர்களில் பெங்களூரு!

14 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. களத்தில் படிதார் மற்றும் கேமரூன் க்ரீன் உள்ளனர். 

RCB vs CSK LIVE Score: டூ ப்ளெசிஸ் அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த டூ ப்ளெசிஸ் தனது விக்கெட்டினை எதிர்பாராத விதமாக இழந்து வெளியேறினார். 

RCB vs CSK LIVE Score: அரைசதம் விளாசிய டூ ப்ளெசிஸ் - 100 ரன்களை எட்டிய RCB !

தொடக்க வீரராக களமிறங்கி 35 பந்துகளில் டூ ப்ளெசிஸ் அரைசதம் விளாசினார். இதுமட்டும் இல்லாமல் ஆட்டத்தின் 11.2 ஓவர்களில் பெங்களூரு அணி 100 ரன்களை எட்டியது. 

RCB vs CSK LIVE Score: 100 ரன்களை நெருங்கும் பெங்களூரு!

11 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 98 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: பாதி ஆட்டம் முடிந்தது!

10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 80 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: மிரட்டி வந்த விராட் கோலி அவுட்!

மழைக்குப் பின்னர் மைதானத்தின் தன்மை முற்றிலும் பேட்டிங்கிற்கு சவாலாக மாறிய பின்னரும் அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி 29 பந்தில் 47 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

RCB vs CSK LIVE Score: 70 ரன்களில் பெங்களூரு அணி!

9 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 70 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. விராட் கோலி 40 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றார். 

RCB vs CSK LIVE Score: 8 ஓவர்கள் முடிந்தது!

8 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 60 ரன்கள் எடுத்துள்ளது.

RCB vs CSK LIVE Score: 7 ஓவர்கள் முடிந்தது!

7 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆர்சிபி 52 ரன்கள் எடுத்துள்ளது.

RCB vs CSK LIVE Score: 6 ஓவர்கள் முடிந்தது!

6 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது.

RCB vs CSK LIVE Score: 5 ஓவர்கள் முடிந்தது!

5 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது.

RCB vs CSK LIVE Score: 4 ஓவர்கள் முடிந்தது!

மழைக்கு பின்  4 வது ஓவரை தீக்‌ஷனா வீசினார். அதன்படி 4 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது.

RCB vs CSK LIVE Score: மீண்டும் தொடங்கிய போட்டி!

மழைக்குப் பின் மீண்டும் போட்டி தொடங்கியது.

RCB vs CSK LIVE Score: நின்ற மழை!

பெங்களூருவில் மழை நின்றது. இதனால் ரசிகர்கள் ஆரவாரத்தில் உள்ளனர். மைதானத்தில் உள்ள நீரினை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: மூன்று ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூருவில் கனமழை; வழிவிடுவாரா வருண பகவான்?

3 ஓவர்கள் முடிந்த நிலையில் கனமழை தொடங்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மூன்று ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 31 ரன்கள் சேர்த்துள்ளது. மழை விரைவில் நின்று ஆட்டம் தொடங்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளனர். 

RCB vs CSK LIVE Score: மூன்று ஓவர்கள் முடிந்தது!

மூன்று ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: சின்னச்சாமி மைதானத்தில் 3000 ரன்களைக் கடந்த விராட் கோலி!

பெங்களூரு சின்னச் சாமி மைதானத்தில் விராட் கோலி 3000* ரன்களைக் கடந்து அட்டகாசமாக விளையாடி வருகின்றார். 

RCB vs CSK LIVE Score: இரண்டு ஓவர்கள் முடிந்தது!

இரண்டு ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs CSK LIVE Score: விராட் கோலி 700 பவுண்டரிகள்!

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் இருந்து விளையாடி வரும் விராட் கோலி இதுவரை 700 பவுண்டரிகளை விளாசியுள்ளார். 

RCB vs CSK LIVE Score: களமிறங்கிய கிங் கோலி; தொடங்கியது ஆட்டம்; எடுபடுமா CSK-வின் மாஸ்டர் ப்ளான்?

முதல் ஓவர் முடிவில் பெங்களூரு அணி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகின்றது. 

RCB vs CSK LIVE Score: அசத்திய பெங்களூரு!

கடந்த மார்ச் 18ஆம் தேதி நடைபெற்ற WPL இறுதிப் போட்டியில் RCBW அணி கோப்பையை வென்று அசத்தியது.





RCB vs CSK LIVE Score: ஆர்.சி.பி.க்கு ஆதரவளிக்க தயாரான கேப்டன் மந்தனா

RCB- க்கு சப்போர்ட் செய்ய தயாரான RCBW கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வீராங்கனை ஜெமிமா





RCB vs CSK LIVE Score: ருதுராஜ் டாஸ் வென்றபோது ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்றபோது, ரசிகர்கள் ஆரவாரத்தில் துள்ளிக் குதித்தனர். 





RCB vs CSK LIVE Score: புள்ளிப்பட்டியலில் இரு அணிகள்!

புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 7வது இடத்திலும், சென்னை அணி 4வது இடத்திலும் உள்ளது. 

RCB vs CSK LIVE Score: ஆரஞ்சு தொப்பி நாயகன்!

விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 5 அரைசதங்கள் உட்பட மொத்தம் 661 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 

RCB vs CSK LIVE Score: சென்னை அணியின் ப்ளேயிங் லெவன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், மகேஷ் தீக்‌ஷனா

RCB vs CSK LIVE Score: பெங்களூரு அணியின் ப்ளேயிங் லெவன்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கர்ண் ஷர்மா, யாஷ் தயாள், லாக்கி பெர்குசன், முகமது சிராஜ்

RCB vs CSK LIVE Score: டாஸ் வென்ற சென்னை - பவுலிங் தேர்வு!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று, பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். 

RCB vs CSK LIVE Score: பெங்களூருக்கு ஆதரவு தெரிவிக்கும் கிறிஸ் கெயில்!

பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் இன்றைய ஆட்டத்தில் தனது ஆதரவை பெங்களூரு அணிக்கு வழங்குவதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 





RCB vs CSK LIVE Score: பெங்களூரில் தூறல் மழை; டாஸ் போடுவார்களா? ஏக்கத்தில் ரசிகர்கள்!

பெங்களூரு - சென்னை இடையிலான போட்டி நடைபெறவுள்ள சின்னச்சாமி மைதானத்தில் தூறல் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்படுமோ என்ற எண்ணத்தில் ரசிகர்கள் காத்துக்கொண்டு உள்ளனர். 

Background

CSK Vs RCB, IPL 2024: சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மழை குறுக்கிட்டடு, ஓவர்கள் குறைக்கப்பட்டால் பெங்களூர் அணிக்கான வெற்றி வரம்புகள் என்ன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


சென்னை - பெங்களூர் மோதல்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 67 லீக் போட்டிகளின் முடிவில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை மற்றும் பெங்களூர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் நான்காவது அணி யார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் இன்று மோத உள்ளன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


மழை குறுக்கிட வாய்ப்பு:


சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். அதேநேரம், பெங்களூர் அணி குறிப்பிட்ட வரம்புகளுடன் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒருவேளை பெங்களூர் அணி வெற்றி பெற்றும், அந்த வரம்புகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டால், சென்னை அணி தான் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதனிட்டையே, இன்று போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பொழிய அதிகப்படியான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அப்படி போட்டி கைவிடப்பட்டாலும், சென்னை அணி தான் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெற்றால், பெங்களூர் அணி எப்படி வெற்றி பெற வேண்டும் என சில வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அப்படி நடந்தால் மட்டுமே பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அந்த வரம்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தால்?



  • போட்டி 20 ஓவர்கள் நடைபெற்று முதலில் பேட்டிங் செய்யும் பெங்களூர் அணி 200 ரன்களை குவித்தால், சென்னை அணியை 182 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.

  • மழையால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தால்,  170 ரன்களை சேர்த்து சென்னை அணியை 152 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.

  • மழையால் போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டு பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தால்,  130 ரன்களை சேர்த்து சென்னை அணியை 112 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.

  • மழையால் போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தால்,  80 ரன்களை சேர்த்து சென்னை அணியை 62 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.


சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தால்?



  • போட்டி 20 ஓவர்கள் நடைபெற்று சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தால், பெங்களூர் அணி அதனை 18.1 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும்

  • மழையால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து,  171 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் பெங்களூர் அணி அதனை 13.1 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும்.

  • மழையால் போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டு சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து,  131 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் பெங்களூர் அணி அதனை 8.1 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும்.

  • மழையால் போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து,  81 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் பெங்களூர் அணி அதனை 3.1 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும்.


தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?


இன்று பெங்களூரு வானிலை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் பெங்களூருவில் மழை பொழிய 90 சதவிகிதம் வாய்ப்புள்ளது. சின்னசுவாமி மைதானத்தின் வடிகால் வசதிகள், போட்டி நடைபெறுவதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.