PBKS vs RR LIVE Score: ஒரு பந்தை மீதம் வைத்து பஞ்சாப் அணியை வென்ற ராஜஸ்தான்!
IPL 2024 PBKS vs RR LIVE Score Updates: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
ராஜஸ்தான் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். களத்தின் ஹெட்மயர் இருந்தார். முதல் இரண்டு பந்துகளை டாட் பாலாக வீசி அர்ஷ்தீப் சிங் அசத்த, மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு விளாசினார் ஹெட்மயர். நான்கவது பந்தில் இரண்டு ரன்களும், ஐந்தாவது பந்தில் சிக்ஸரும் விளாசி ராஜஸ்தான் அணியை வெற்றி பெறவைத்தார்.
ராஜஸ்தான் அணி ஆட்டத்தின் 17வது ஓவரில் ரியான் பிராக் விக்கெட்டினை இழந்து வெளியேறியது. இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.
15 ஓவர்களில் ராஜஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டினை 14 பந்தில் 18 ரன்கள் சேர்த்து 14வது ஓவரில் ரபாடா பந்தில் வெளியேறினார்.
ராஜஸ்தான் அணி தனது இரண்டாவது விக்கெட்டினை இழந்துள்ளது. போட்டியின் 12வது ஓவரின் 4வது பந்தில் ஜெய்ஸ்வால் இழந்து வெளியேறினார்.
11 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 79 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 58 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் தனுஷ் கோடியன் தனது விக்கெட்டினை லிவிங்ஸ்டன் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 56 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் கோடியன் 7.1 ஓவரில் 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர்.
7 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்துள்ளது.
நான்கு ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் சேர்த்து நிதானமாகவே ரன்கள் சேர்த்து வருகின்றது.
நிதான ஆட்டத்தினால் 3 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் சேர்த்துள்ளது.
148 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸை தௌசந்த் கோடியன் மற்றும் ஜெய்ஸ்வால் தொடங்கியுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்தது.
ராஜஸ்தான் அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
8வது ஓவரின் கடைசிப் பந்தில் பேரிஸ்டோவ் தனது விக்கெட்டினை கேசவ் மஹராஜ் பந்தில் இழந்து வெளியேறினார். 8 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ப்ரப்சிம்ரன் தனது விக்கெட்டினை 15 பந்தில் 10 ரன்கள் சேர்த்து, சஹால் பந்தில் இழந்து வெளியேறினார்.
பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 38 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 31 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நான்கு ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 28 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பஞ்சாப் அணியின் அதர்வா தனது விக்கெட்டினை ஆவேஷ் கான் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 12 பந்தில் 15 ரன்கள் சேர்த்திருந்தார்.
மூன்று ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர்.
இரண்டாவது ஓவரில் பஞ்சாப் அணி 13 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. இரண்டு ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் இரண்டாவது ஓவரின் முதல் இரண்டு பந்தில் அதர்வா இரண்டு பவுண்டரிகள் விளாசி அதிரடி ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.
பஞ்சாப் அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் எதையும் இழக்காமல் 4 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை பேரிஸ்டோவ் மற்றும் அதர்வா தொடங்கியுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ஜானி பேர்ஸ்டோவ், அதர்வா டைடே, பிரப்சிம்ரன் சிங், சாம் கர்ரன்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா
ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்): சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்/கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மன் பவல், தனுஷ் கோட்டியான், கேசவ் மகராஜ், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல்
பேட்டிங் செய்ய களமிறங்கும் பஞ்சாப் அணி. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
17வது ஐபிஎல் லீக் தொடரின் 27வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள முல்லன்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெறுகின்றது.
இரு அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் கடைசி பந்தில் வெற்றி வாய்ப்பினை இழந்ததால், இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகளில் 5 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகளைப் பெற்று, ஒரு தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் கெத்தாக உள்ளது. அதேப்போல், பஞ்சாப் அணியும் 5 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தும், இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றும் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி 15 முறையும், பஞ்சாப் அணி 11 வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 223 ரன்களையும், குறைந்தபட்சமாக 124 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 223 ரன்களையும், குறைந்தபட்சமாக 112 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
இரு அணிகளின் கடைசி லீக் போட்டி
ராஜஸ்தான் அணி குஜராத் அணிக்கு எதிரான போட்டியை தனது சொந்த மைதானத்தில் களமிறங்கி விளையாடியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் இலக்கைத் துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 20வது ஓவரின் கடைசி பந்தில் தனது வெற்றியை உறுதி செய்தது. இது நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணியின் முதல் தோல்வியாக பதிவாகியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், 183 ரன்கள் இலக்கைத் துரத்தியது. கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் பஞ்சாப் அணி 26 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹைதராபாத் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -