ஐ.பி.எல் திருவிழா:


 


சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளதுசென்னை சூப்பர் கிங்ஸ்டெல்லி கேப்பிட்டல்ஸ்குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ்லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்மும்பை இந்தியன்ஸ்பஞ்சாப் கிங்ஸ்ராஜஸ்தான் ராயல்ஸ்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடும்  17வது சீசன் நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சேப்பாக்கத்தில் இரு அணிகளும் விளையாட போட்டிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்:


 


சேப்பாக்கத்தில் சென்னை அணியின் ஆதிக்கம்:


கடந்த 2008 ஆம் இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய ராகுல் ட்ராவிட் தலைமையிலான பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்படி, சென்னை அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி.


 


பின்னர், 2010, 2011,2011,2012,2013,2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகள் நடைபெற்ற போட்டிகளில் சேப்பாக்கத்தில் இரு அணிகளும் விளையாடின. இதில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய பெங்களூரு அணி 123 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் சென்னை அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வாற சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றிவாகை சூடியுள்ளது. இச்சூழலில் தான் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோத உள்ளதால் ரசிகர்கள் போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


 


மேலும் படிக்க: Chris Gayle IPL Record: IPL-ல் அதிக சிக்ஸர்...யாரும் நெருங்க முடியாத கிறிஸ் கெய்லின் சாதனை!


 


மேலும் படிக்க: CSK IPL 2024 Schedule: 9வது முறையாக தொடக்கப் போட்டியில் களமிறங்கும் சி.எஸ்.கே! சென்னையில் எத்தனை போட்டிகள்?