Yuzvendra Chahal: ஐபிஎல் வரலாற்றில் முதல் நபர் - 200 விக்கெட்டுகளை தட்டி தூக்கி யுஸ்வேந்திர சாஹல் சாதனை

Yuzvendra Chahal: ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய, முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை யுஸ்வேந்திர சாஹல் படைத்துள்ளார்.

Continues below advertisement

Yuzvendra Chahal: ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் சாஹல், நேற்றையை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Continues below advertisement

சரித்திரம் படைத்த சாஹல்:

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பேட்ஸ்மேன்கள் மற்றும் அணி வாரியாக பல்வேறு புதுப்புது சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், பந்துவீச்சாளர்களுக்கு கடினமானதாக கருதப்படும் ஐபிஎல் தொடரில், சில தரமான பந்துவீச்சாளர்களும் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில், மும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை யுஸ்வேந்திர சாஹல் பெற்றுள்ளார்.

200வது விக்கெட்டை வீழ்த்திய சாஹல்:

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டி நேற்று ஜெய்பூரில் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய, முகம்மது நபியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சாஹல் 200 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார். 17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை பூர்த்தி செய்த முதல் வீரர் இவராவார்.

ஐபிஎல் தொடரில் சாஹல்:

வலது கை லெக் ஸ்பின்னரான சாஹல், கடந்த 2013ம் ஆண்டு மும்பை அணிக்காக விளையாடி ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அதைதொடர்ந்து 2014 முதல் 2021ம் ஆண்டு வரை பெங்களூர் அணிக்காக, 113 போட்டிகளில் விளையாடி 139 விக்கெட்டுகளை சாய்த்தார். அந்த அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் பட்டியலில் சாஹல் தற்போதும் முதலிடத்தில் உள்ளார்.  இறுதியாக தற்போது 6.5 கோடி ரூபாய் எனும் ஆண்டு ஊதியத்தில் கடந்த 2022 முதல் ராஜஸ்தான் அணிக்காக சாஹல் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு த்வெயின் பிராவோவை (183 விக்கெட்டுகள்) பின்னுக்கு தள்ளி, ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 152 போட்டிகளில் பந்துவீசியுள்ள சாஹல், ஒரு போட்டியில் 40 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்:

1. யுஸ்வேந்திர சாஹல் - 200 விக்கெட்டுகள்

2. த்வெயின் பிராவோ - 183 விக்கெட்டுகள்

3. பியுஷ் சாவ்லா - 181 விக்கெட்டுகள்

4. புவனேஷ்வர் குமார் - 174 விக்கெட்டுகள்

5. அமித் மிஸ்ரா - 173 விக்கெட்டுகள்

6. சுனில் நரைன் - 172 விக்கெட்டுகள்

7. ரவிச்சந்திரன் அஷ்வின் - 172 விக்கெட்டுகள்

8.  லசித் மலிங்கா - 170 விக்கெட்டுகள்

9. ஜஸ்பிரித் பும்ரா - 158 விக்கெட்டுகள்

10. ஜடேஜா - 156 விக்கெட்டுகள்

Continues below advertisement