RR Vs MI Live score: ஜெய்ஸ்வால் - பட்லர் ஜோடி அதிரடி ஆட்டம்; குறிக்கிட்ட மழை..போட்டி நிறுத்தம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மழை பெய்து வருகிறது.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் எடுத்துள்ளது.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்துள்ளது.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் அணி 35 ரன்கள் எடுத்துள்ளது.
3 ஓவர்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பை அணி வீரர் ஜெரால்ட் கோட்ஸி ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதிரடியாக விளையாடி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் திலக் வர்மா அவுட். மொத்தம் 45 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 65 ரன்கள் எடுத்தார்.
19 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை அணி 176 ரன்கள் எடுத்துள்ளது.
10 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவுட்.
17 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடி வந்த நேஹால் வதேரா 29 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடி வரும் திலக் வர்மா அரைசதம் விளாசி இருக்கிறார்.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது.
14 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை அணி 120 ரன்கள் எடுத்துள்ளது.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.
12 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
11 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 82 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை அணி 72 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி 66 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 9 வது ஓவரை அஷ்வின் வீசினார்.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் முகமது நபியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 200 வது விக்கெட்டை பதிவு செய்திருக்கிறார் யுஸ்வேந்திர சாஹல் .
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அதிவேக 200 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
7 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. 7 வது ஓவர் வீசிய அஸ்வின் 5 ரன்களை விட்டுக்கொடுத்திருக்கிறார்.
ட்ரெண்ட் போல்ட் 3 ஓவர்கள் வீசி 22 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்துள்ளார்.
சந்தீப் சர்மா 2 ஓவர்கள் வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்த 2 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.
ஆவேஷ் கார்ன் 1 ஓவர், 18 ரன்களை விட்டுக்கொடுத்து இருக்கிறார். விக்கெட் எடுக்கவில்லை.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்துள்ளது.
சந்தீப் சர்மா வீசிய பந்தில் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை பறிகொடுத்தார். 8 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார் சூர்யகுமார் யாதவ்.
3 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் தான் வீசிய முதல் ஓவரில் இதுவரை 26 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்து இருக்கிறார்.
ட்ரெண்ட் போல்ட் மூன்றாவது ஓவர் வீச வந்திருக்கிறார்.
2 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 9 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா நிற்கின்றனர்.
சந்தீப் சர்மா வீசிய இரண்டாவது ஓவரில் இஷான் கிஷன் விக்கெட்டை பறிகொடுத்தார். 3 பந்துகள் களத்தில் நின்ற அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.
தான் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்தி இருக்கிறார் ட்ரெண்ட் போல்ட்.
முதல் ஓவர் முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 1விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்துள்ளது.
ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் 5 வது பந்தில் ரோகித் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். 5 பந்துகள் களத்தில் நின்ற ரோகித் சர்மா 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா இன்று தன்னுடைய 100 வது போட்டியில் களம் இறங்க உள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(w/c), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
இஷான் கிஷன்(w), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டிம் டேவிட், நேஹால் வதேரா, முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா
Background
ஐ.பி.எல் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகளும் தலா ஒருமுறை நேருக்கு நேர் சந்தித்து, தொடரின் பாதி போட்டிகள் முடிந்துள்ளன. தற்போது இரண்டாவது சுற்று லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடுகின்றன.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. முன்னதாக இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 7 போட்டிகள் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டியிலும் தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
ராஜஸ்தான் - மும்பை:
இன்றைய போட்டியிலும் வென்று முதலிடத்தில் நீடிக்க அந்த அணி முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 4 தோல்வி என புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே, உள்ளூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தானிடம் மும்பை அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் அந்த தோல்விக்கு பழிவாங்க மும்பை அணி தீவிரம்காட்டி வருகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.
உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பலமாக உள்ளது. சாம்சன், பட்லர், பராக் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் பேட்டிங்கில் அதகளம் செய்கின்றனர். போல்ட், சாஹல் மற்றும் அஸ்வின் ஆகியோர் பந்துவீச்சில் வலு சேர்க்கின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர் என இரண்டு போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மறுபுறம் மும்பை அணியில் ரோகித் சர்மா நடப்பாண்டில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஒரு போட்டியில் அடித்தால் மற்றொரு போட்டியில் சொதப்புகின்றனர். பந்துவீச்சிலும் பும்ராவை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குகின்றனர். இதனால், வலுவான ராஜஸ்தான் அணியை வீழ்த்த மும்பை அணி கடுமையாக போராட வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -