MI vs RCB LIVE Score: சரணடைந்த பெங்களூரு.. இமாலய வெற்றியை பதிவு செய்த மும்பை!
IPL 2024 MI vs RCB LIVE Score Updates: மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
மும்பை அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் அரைசதம் விளாசி நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது அதிவேக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.
10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 111 ரன்கள் சேர்த்துள்ளது. மும்பை வெற்றி பெற அடுத்த 10 ஓவர்களில் 86 ரன்கள் தேவைப்படுகின்றது.
அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் தனது விக்கெட்டினை ஆகாஷ் தீப் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 35 பந்தில் 69 ரன்கள் குவித்தார்.
மும்பை அணி 8.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மும்பை இந்தியன்ஸ் அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ரோகித் சர்மா வான்கடே மைதானத்தில் மட்டும் 100 சிக்ஸர்கள் விளாசி அட்டகாசப்படுத்தி வருகின்றார்.
பவர்ப்ளே முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
23 பந்தில் இஷான் கிஷன் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் சேர்த்தது.
17 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பும்ரா வீசிய 17வது ஓவரில் மகிபால் லம்ரோர் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
பொறுப்பாக ஆடி வந்த டூ ப்ளெசி தனது விக்கெட்டினை 40 பந்தில் 61 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா பந்தில் வெளியேறினார்.
16.1 ஓவரில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தினை எட்டினார் டூ ப்ளெசி. இவர் 33 பந்தில் தனது அரைசத்தினை எட்டினார்.
13 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் 13வது ஓவரில் மேக்ஸ் வெல் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினார்.
பெங்களூரு அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அரைசதம் கடந்ததும் அடுத்த பந்தில் ரஜத் படிதார் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
அதிரடியாக விளையாடி வரும் ரஜத் படிதார் 25 பந்தில் மூன்று பவுண்டரி நான்கு சிக்ஸருடன் அரைசதத்தினை எட்டினார்.
11 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
முதல் 10 ஓவர்களில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டினை இழந்து 67 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
6 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆகாஷ் மத்வால் வீசிய 6வது ஓவரில் டூ ப்ளெசி அடித்த பந்து இன் - சைடு எட்ஜ் ஆகி, டூ பிளெசியின் இடுப்புப் பகுதியில் பலமாக பட்டதில் களத்தில் வலியால் அவதிப்பட்டு வருகின்றார். அவருக்கு முதல் உதவி செய்யப்பட்டு வருகின்றது.
ஐந்து ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
4 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் சேர்த்துள்ளது.
பெங்களூரு அணியின் வில் ஜாக்ஸ் தனது விக்கெட்டினை 8 ரன்னில் இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை ஆகாஷ் மத்வால் கைப்பற்றினார்.
மூன்று ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 18 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தினை பவுண்டரிக்கு விளாசி தனது முதல் ஐபிஎல் போட்டியில் ரன் கணக்கைத் தொடங்கியுள்ளார்.
பெங்களூரு அணியின் விராட் கோலி தனது விக்கெட்டினை பும்ரா பந்தில் 3 ரன்களில் இழந்து வெளியேறினார்.
இரண்டாவது ஓவரின் கடைசிப் பந்தில் டூ ப்ளெசிஸ் சிக்ஸர் விளாசினார். இரண்டாவது ஓவர் முடிவில் பெங்களூரு 14 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவரில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த ஓவரின் கடைசி பந்தில் டூ பிளெசிஸ் முதல் பவுண்டரி விளாசினார்.
மும்பை அணி சார்பாக ஆட்டத்தின் முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி வீசுகின்றார்.
மும்பை அணிக்கு எதிராக பெங்களூரு அணி களமிறங்கியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், ரீஸ் டாப்லி, விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, ஷ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால்
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
பெங்களூரு அணிக்காக தனது முதல் ஐபிஎல் போட்டியில் வில் ஜேக்ஸ் இன்று களமிறங்குகின்றார்.
மும்பை மற்றும் பெங்களூரு அணி இதுவரை மொத்தம் 32 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 முறை வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி 14 முறை வெற்றியை தனதாக்கியுள்ளது.
வான்கடே மைதானத்தில் இதுவரை மொத்தம் 111 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் இரண்டாவது பேட்டிங் செய்து இலக்கை துரத்திய அணி 60 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் முதலில் பேட்டிங் செய்த அணி 51 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் மும்பை அணியும் பெங்களூரு அணியும் மோதவுள்ளது.
Background
ஐபிஎல் தொடரின் 17வது சீசனின் 25வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் எட்டாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளையும் சுவாரஸ்யமான தகவல்களையும் இங்கு உடனுக்குடன் காணலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை மொத்தம் 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 முறை வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் 14 முறை வெற்றியை தனதாக்கியுள்ளது. பெங்களூரு அணி பஞ்சாப் அணிக்கு எதிராக தனது சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் சொந்த மைதானத்தில் சொந்த மைதானத்தில் இரண்டு போட்டிகளிலும் வெளிமைதானத்தில் ஒரு போட்டியிலும் விளையாடி மூன்று போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை நான்கு லீக் போட்டிகளில் விளையாடி, முதல் மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து நான்காவது போட்டியில் வெற்றி பெற்று தனது வெற்றிக்கணக்கை நடப்பு ஐபிஎல் தொடரில் தொடங்கியுள்ளது. இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது சொந்த மைதானம் என்பதுதான். மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக தனது சொந்த மைதானத்தில் களமிறங்கவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள சூர்யகுமார் யாதவ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி என்றால், மற்ற போட்டிகளைக் காட்டிலும் அதிரடியாக விளையாடுவார். கடந்த நடைபெற்ற லீக் போட்டியில் 35 பந்தில் 83 ரன்கள் குவித்து, 200 ரன்கள் இலக்கை 16.3 ஓவரில் மும்பை அணி எட்டுவதற்கு காரணமாக இருந்தார். இதனால் இந்த போட்டியில் ரசிகர்கள் சூர்யகுமார் யாதவ் மீது அதிக நம்பிக்கையுடனே இருப்பார்கள் எனலாம். சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. அதேபோல் நான்காவது போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தான் எதிர்கொண்ட முதல் பந்தை தூக்கி அடிக்க முயன்று டக் அவுட் ஆகி வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆகியிருந்தாலும், தான் எதிர்கொண்ட முதல் பந்தை பேட்டில் விளாசி கேட்ச் ஆகி வெளியேறியதால், சூர்யகுமார் யாதவ் களத்தில் எவ்வளவு நேரம் இருக்கின்றாரோ அந்த அளவிற்கு ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது தெளிவாகியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -