RCB vs GT LIVE Score: பெங்களூரு அணியை மீண்டும் காப்பாற்றிய தினேஷ் கார்த்திக்; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

IPL GT vs RCB LIVE Score Updates: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை இங்கு காணலாம்.

Continues below advertisement

LIVE

Background

GT Vs RCB, IPL 2024: குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடர் 2024:

இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 51 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் ரேஸ் வேகமெடுத்துள்ளது. மும்பை அணி நடப்பு தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறி உள்ளது. மீதமுள்ள 9 அணிகளும் 4 இடங்களுக்காக முட்டி மோதி வருகின்றன. அந்த வகையில் இன்றைய போட்டியில்,  சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்  மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோத உள்ளன.

குஜராத் - பெங்களூர் மோதல்:

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. குஜராத் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் நான்கில் வென்று,  புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் பெங்களூர் அணியிடம் படுதோல்வியை சந்தித்தது.  இதனால், இன்றைய போட்டியில் வென்று பழிதீர்ப்பதோடு,  பிளே-ஆஃப் சுற்றுக்கான தனது வாய்ப்பை தக்க வைக்கவும் குஜராத் அணி  தீவிரம் காட்டுகிறது. பெங்களூர் அணியோ 10 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேநேரம், பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க மீதமுள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் பெங்களூர் அணி வெற்றி பெற வேண்டியது அவசியம். எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

பலம், பலவீனங்கள்:

உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது பெங்களூர் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருந்த பெங்களூர் அணி, கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் வென்று வலுவான கம்பேக் கொடுத்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும், கடந்த இரண்டு போட்டிகளில் செயல்பட்டதை போன்றே,  செயல்பட்டால் இன்றைய போட்டியிலும் பெங்களூர் அணியால் வாகை சூட முடியும்.

குஜராத் அணியில் பேட்டிங்கில் பெரும் அதிரடி பட்டாளமே உள்ளது. ஆனாலும், கேப்டன் சுப்மன் கில், டேவிட் மில்லர், விருதிமான் சாஹா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாது அணிக்கு பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சிலும் ரஷித் கானை தவிர மற்ற விரர்கள் யாரும் நடப்பு தொடரில் குஜராத் அணியில் பெரிதாக சோபிக்கவில்லை. மோகித் சர்மா பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளார். 

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் குஜராத் அணி இரண்டு முறையும், பெங்களூர் அணி இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூர் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் குஜராத் அணி அதிகபட்சமாக 200 ரன்களையும், குறைந்தபட்சமாக 168 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், குஜராத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பெங்களூர் அணி அதிகபட்சமாக 206 ரன்களையும், குறைந்தபட்சமாக 170 ரன்களையும் பதிவு செய்துள்ளது.

பெங்களூர் மைதானம் எப்படி?

பெங்களூர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பது அனைவரும் அறிந்தே. இன்றைய போட்டியிலும் அதில் எந்த மாற்றமும் இருக்காது. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும். மைதானத்தின் சிறிய பவுண்டரி எல்லைகள், 200 ரன்கள் விளாசப்படுவதை மிகவும் எளிதாக்குகிறது.

உத்தேச அணி விவரங்கள்:

குஜராத்: விருத்திமான் சாஹா , ஷுப்மான் கில், கேன் வில்லியம்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, சந்தீப் வாரியர், மோகித் சர்மா 

பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கரண் ஷர்மா, லாக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது சிராஜ் 

Continues below advertisement
22:53 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 7வது இடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்னர் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் அதாவது 10வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

22:51 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: பெங்களூரு அணியை மீண்டும் காப்பாற்றிய தினேஷ் கார்த்திக்; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

பெங்களூரு அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

22:31 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: விராட் கோலி அவுட்!

பெங்களூரு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த விராட் கோலி தனது விக்கெட்டினை 11வது ஓவரை வீசிய நூர் அகமது பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். விராட் கோலி 27 பந்தில் 42 ரன்கள் சேர்த்திருந்தார். 

22:27 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 10 ஓவர்கள் முடிந்தது!

10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் சேர்த்துள்ளது. 

22:26 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 5வது விக்கெட்டினை இழந்த பெங்களூ - கேமரூன் க்ரீன் அவுட்!

ஆட்டத்தின் 10வது ஓவரில் கேமரூன் க்ரீன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை ஜோஸ்வா லிட்டில் கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் இவர் கைப்பற்றும் 4வது விக்கெட் இது. பெங்களூரு அணி 9.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்துள்ளது. 

22:22 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 40 ரன்கள் தேவைப்படுகின்றது. 

22:20 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: மேக்ஸ் வெல் அவுட்!

8வது ஓவரின் கடைசி பந்தில் மேக்ஸ் வெல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 4 ரன்கள் சேர்த்தார். இவரது விக்கெட்டினை ஜோஸ்வா லிட்டில் கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் ஜோஸ்வா லிட்டில் கைப்பற்றும் மூன்றவது விக்கெட் இது. 8வது ஓவரில் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

22:15 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: மூன்றாவது விக்கெட்டினை இழந்த பெங்களூரு!

பெங்களூரு அணி 8வது ஓவரில் தனது மூன்றாவது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 3 பந்துகளில் இரண்டு ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

22:12 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 100 ரன்களை எட்டிய ஆர்.சி.பி

7 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எட்டியுள்ளது. வெற்றிக்கு இன்னும் 48 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றது. 

22:11 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: இரண்டாவது விக்கெட்டினை இழந்த ஆர்.சி.பி!

பெங்களூரு அணியின் வில் ஜேக்ஸ் ஆட்டத்தின் 7வது ஓவரில் தனது விக்கெட்டினை இழந்தார். இவர் 3 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் எடுத்து வெளியேறினார். 

22:06 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 92 ரன்கள் குவித்து இலக்கைத் துரத்தி வருகின்றது. 

22:05 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: டூ ப்ளெசிஸ் அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த டூ ப்ளெசிஸ் தனது விக்கெட்டினை பவர்ப்ளேவின் கடைசி ஓவரின் 5வது பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். இவர் 23 பந்தில் 64 ரன்கள் குவித்தார். 

22:00 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: அரைசதத்தை எட்டிய டூ ப்ளெசிஸ்!

அதிரடியாக விளையாடி வரும் டூ ப்ளெசிஸ் 18 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். 

21:57 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 4 ஓவர்கள் முடிந்தது!

4 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

21:52 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 50 ரன்களை எட்டிய ஆர்.சி.பி!

3.1 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

21:50 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 46 ரன்களில் பெங்களூரு!

3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றது. 

21:48 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: இரண்டு ஓவர்கள் முடிந்தது!

இரண்டு ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் குவித்துள்ளது. 

21:43 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: அதிரடியாக இலக்கைத் துரத்தும் பெங்களூரு; சிக்ஸர் விருந்து படைக்கும் விராட் கோலி!

1.3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 28 ரன்கள் குவித்துள்ளது. 

21:26 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: ஆல் அவுட் ஆன குஜராத் - டீம் ஹாட்ரிக் எடுத்த பெங்களூரு!

20வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் குஜராத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதில் பெங்களூரு அணி டீம் ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றியது. குஜராத் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

21:18 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 8வது விக்கெட்டினை இழந்த குஜராத்!

குஜராத் அணியின் சுதர் தனது விக்கெட்டினை 20வது ஓவரின் முதல் பந்தில் இழந்து வெளியேறினார். 

 

21:17 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 150 ரன்களை நெருங்கும் குஜராத்!

19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

21:12 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: ராகுல் திவேதியா அவுட்!

குஜ்ராத் அணியின் ராகுல் திவேதியா தனது விக்கெட்டினை ஆட்டத்தின் 18வது ஓவரின் கடைசி பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 21 பந்தில் 35 ரன்கள் சேர்த்து, யாஷ் தயாள் பந்தில் ஆட்டமிழந்தார். 

21:09 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: ரஷித் கான் அவுட்!

ரஷித் கான் தனது விக்கெட்டினை யாஷ் தயால் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி இழந்தார். இவர் 14 பந்தில் 18 ரன்கள் சேர்த்தார். 

21:01 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 16 ஓவர்கள் முடிந்தது!

16 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 121 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

20:53 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 102 ரன்கள் எடுத்துள்ளது.

20:49 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 14 ஓவர்கள் முடிந்தது!

14 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.

20:44 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 13 ஓவர்கள் முடிந்தது!

13 ஓவர்கள் முடிந்த நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது குஜராத் அணி.

20:42 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: ஷாருக்கான் அவுட்!

27 பந்துகள் களத்தில் நின்ற ஷாருக்கான் 37 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

20:19 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 8 ஓவர்கள் முடிந்தது!

8 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் மட்டும் எடுத்து நிதானமாக விளையாடி வருகின்றது. 

20:10 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: மூன்றாவது பவுண்டரியை விளாசிய ஷாரூக் கான்!

ஷாரூக் கான் ஆட்டத்தின் 7வது ஓவரின் கடைசி பந்தில் தனது மூன்றாவது பவுண்டரியை விளாசினார். குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் சேர்த்துள்ளது. 

20:02 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் மோசமாக விளையாடி வருகின்றது. 

20:00 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: சுதர்சன் அவுட் - கலக்கிய கிரீன்!

குஜராத் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுதர்சன் தனது விக்கெட்டினை பவர்ப்ளேவின் கடைசி ஓவரை வீசிய கிரீனின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். சுதர்சன் 14 பந்தில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

19:57 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 5 ஓவர்கள் முடிந்தது!

5 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 18 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

19:52 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: 4 ஓவர்கள் முடிந்தது!

4 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் எடுத்து தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது. 

19:51 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: இரண்டாவது விக்கெட்டினை இழந்த குஜராத் - கில் அவுட்!

ஆட்டத்தின் 4வது ஓவரில் கில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 7 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவரது விக்கெட்டினை சிராஜ் கைப்பற்றினார். 

19:46 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: மூன்று ஓவர்களில் 7 ரன்கள் - அசத்தும் பெங்களூரு பவுலிங்!

மூன்று ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 7 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

19:41 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: பந்து வீச்சில் கெத்து காட்டும் பெங்களூரு; தடுமாற்றமான தொடக்கத்தில் குஜராத்!

இரண்டு ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 3 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

19:37 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: சாஹா அவுட்!

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் சாஹா தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 

19:34 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: முதல் ஓவரில் ஒரு ரன்.!

பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி ஒரு ரன் மட்டுமே சேர்த்துள்ளது. 

19:31 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: தொடங்கிய ஆட்டம்!

பெங்களூரு அணிக்கு எதிராக குஜராத் அணி களமிறங்கியுள்ளது. 

19:18 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: குஜராத் அணியின் ப்ளேயிங் லெவன்

குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்): விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில்(கேப்டன்), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மானவ் சுதர், நூர் அகமது, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில்

19:17 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: பெங்களூரு அணியின் ப்ளேடியிங் லெவன்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), வில் ஜாக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), கர்ண் சர்மா, ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ், யாஷ் தயாள், விஜய்குமார் வைஷாக்

19:15 PM (IST)  •  04 May 2024

RCB vs GT LIVE Score: மீண்டும் அசத்துமா குஜராத் படை; டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங் தேர்வு!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.