MI vs DC LIVE Score: இறுதிவரை போராடிய டெல்லி தோல்வி! முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை!
IPL 2024 MI vs DC: டெல்லி கேபிடல்ஸ் - மும்பை அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் மும்பை அணி பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும்.
டெல்லி கேப்டன் ரிஷப்பண்ட் 1 ரன்னில் அவுட்டானார். இதனால், டெல்லி அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
டெல்லி அணிக்காக ஸ்டப்ஸ் அதிரடியாக ஆடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு அபிஷேக் போரல் ஒத்துழைப்பு அளிக்கிறார்.
டெல்லி அணிக்கு எதிராக அபாரமாக ஆடி வந்த பிரித்விஷா பும்ரா வீசிய யார்க்கர் பந்தில் போல்டானார். 40 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பிரித்வி ஷா - போரல் ஜோடி அபாரமாக ஆடி வருகிறது.
10 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்து டெல்லி அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
10 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்து டெல்லி அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அபாரமாக ஆடி வரும் பிரித்வி ஷா அபார அரைசதம் அடித்து அசத்தினார்.
டெல்லி அணிக்காக தொடக்க வீரரா களமிறங்கிய பிரித்விஷாவின் அபார பேட்டிங்கால் டெல்லி அணி 8 ஓவர்களில் 69 ரன்களை எடுத்துள்ளது.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது டெல்லி அணி.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி அணி 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
6 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 1 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 1 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய டேவிட் வார்னர் 10 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
3 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி அணி 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
2 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் ஓவர் முடிந்த நிலையில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணிக்காக களமிறங்கிய பிரித்வி ஷா சிக்ஸர் அடித்து அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்துள்ள 235 ரன்கள் இலக்கை நோக்கி வார்னர் - பிரித்வி ஷா களமிறங்கியுள்ளனர்.
கடைசி ஓவரில் ஷெப்பர்ட் காட்டிய அதிரடியால் மும்பை அணி 234 ரன்களை எடுத்தது. இதனால், டெல்லிக்கு 235 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிம் டேவிட் அதிரடியால் மும்பை அணி 200 ரன்களை கடந்துள்ளது. இதனால், மும்பை ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வரும் டிம் டேவிட் அதிரடியாக ஆடி வருகிறார். அவருக்கு ஹர்திக் பாண்ட்யாவும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.
மும்பை அணி 153 ரன்களை எட்டியுள்ளது. டிம் டேவிட்டும், ஹர்திக் பாண்ட்யாவும் அபாரமாக ஆடி வருகின்றனர்.
15 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 138 ரன்களை எடுத்துள்ளது.
மும்பை அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா 6 ரன்களில் அவுட்டானார். தற்போது ஹர்திக் பாண்ட்யா - டிம்டேவிட் ஜோடி ஆடி வருகிறது.
மும்பை அணிக்காக தொடர்ந்து அதிரடியாக ஆடிய இஷன் கிஷனை அக்ஷர் படேல் ஆட்டமிழக்கச் செய்தார். அவர் 42 ரன்களில் அவுட்டானார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓவர்களில் 105 ரன்களை கடந்தது. இஷன் கிஷன் - ஹர்திக் ஜோடி அதிரடியாக ஆடி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித்சர்மா, சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து அவுட்டாகிய நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா - இஷன் கிஷனுடன் ஜோடி சேர்ந்து அசத்தலாக ஆடி வருகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டானார். இதனால், மும்பை ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
மும்பை அணிக்காக அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 49 ரன்களில் அவுட்டானார்.
பவர்ப்ளேவிலே மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓவர்களில் 75 ரன்களை எட்டி அசத்தியுள்ளது.
மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித்சர்மா பவுண்ரி, சிக்ஸர் என விளாசுவதால் மும்பை அணி 5வது ஓவரிலே 50 ரன்களை எட்டியுள்ளது.
மும்பை அணி 4 ஓவர்கள் முடிவில் 46 ரன்களை எடுத்துள்ளது. டெல்லி அணி விக்கெட் வீழ்த்த தீவிரமாக பந்துவீசி வருகின்றனர்.
மும்பை அணிக்காக இஷான் கிஷன் - ரோகித் சர்மா அதிரடியாக ஆடி வருவதால் அந்த அணி 3 ஓவர்களில் 33 ரன்களை எட்டியுள்ளது.
மும்பை அணிக்காக இஷான் கிஷன் - ரோகித் சர்மா அதிரடியாக ஆடி வருவதால் அந்த அணி 3 ஓவர்களில் 33 ரன்களை எட்டியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித்சர்மாவும் - இஷான் கிஷனும் பவுண்டரிகளாக விளாசி வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் - இஷான்கிஷன் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் - இஷான்கிஷன் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் இன்று மீண்டும் களமிறங்கியிருப்பது அணிக்கு பெரும் பலத்தை ஏற்படுத்தியுள்ளது. அது இன்றைய போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Background
நடப்பு ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன. 20வது போட்டியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி மும்பை அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியில் கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் மும்பை அணி களமிறங்கியுள்ளது.
இந்த தொடரில் இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ள மும்பை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரின் முதல் வெற்றியை பெற ஆர்வத்துடன் உள்ளது. அதேசமயம், தொடரில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுள்ள டெல்லி அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற ஆவலுடன் உள்ளது. வான்கடேவில் நடைபெற உள்ள இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இதன்படி, மும்பை அணி பேட்டிங்கைத் தொடங்க உள்ளது. மும்பை அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், முகமது நபி, ஷெபர்ட், பியூஷ்சாவ்லா. கோட்ஸி, பும்ரா ஆகியோர் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்குகின்றனர். டெல்லி அணியில் ரிஷப்பண்ட் தலைமையில் வார்னர், பிரித்விஷா, அபிஷேக் போரல், ஸ்டப்ஸ், அக்ஷர் படேல், லலித் யாதவ், ரிச்சர்ட்சன், நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -