LSG vs MI LIVE Score: போராடித் தோற்ற மும்பை; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி!
IPL 2024 LSG vs MI LIVE Score Updates: மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபிநாடு தளத்தில் காணலாம்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது. 7 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
இறுதியில் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியைச் சந்தித்ததால் மும்பை அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பு சற்று குறைந்துள்ளது.
20வது ஓவரில் லக்னோ அணி 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகின்றது. 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக பவுண்டடி விளாசிய ஆயூஷ் பதோனி ரன் - அவுட் முறையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
18 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. லக்னோ அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்படுகின்றது.
லக்னோ அணிக்கு 16 பந்தில் 23 ரன்கள் தேவைப்படுகின்றது.
லக்னோ அணியின் டர்னர் தனது விக்கெட்டினை கோட்ஸீ பந்தில் க்ளீன் போல்ட் முறையில் இழந்து வெளியேறினார்.
15 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. வெற்றிக்கு இன்னும் 29 ரன்கள் தேவைப்படுகின்றது.
லக்னோ அணி 14 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. வெற்றிக்கு இன்னும் 6 ஓவர்களில் 42 ரன்கள் தேவைப்படுகின்றது.
லக்னோ அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்கஸ் ஸ்டாய்னஸ் தனது அரைசதத்தினை 39 பந்தில் எட்டி, சிறப்பாக விளையாடி வருகின்றார்.
மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய ஆட்டத்தின் 14வது ஓவரின் முதல் பந்தில் தீபக் ஹூடா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 18 பந்தில் 18 ரன்கள் சேர்த்தார்.
மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய ஆட்டத்தின் 14வது ஓவரின் முதல் பந்தில் தீபக் ஹூடா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 18 பந்தில் 18 ரன்கள் சேர்த்தார்.
12 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் தனது விக்கெட்டினை மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய 8வது ஓவரில் இழந்து வெளியேறினார். இவர் 22 பந்தில் 28 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
7 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 57 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 5.2 ஓவரில் 52 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 46 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
4 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 26 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. இந்த ஓவரில் மொத்தம் 15 ரன்களை லக்னோ அணி எடுத்துள்ளது.
மூன்று ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 11 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
லக்னோ அணியின் தொடக்க வீரர் குல்கர்னி தனது விக்கெட்டிஅனி துசாரா பந்தில் இழந்து வெளியேறினார். இவர் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
மும்பை அணி நிர்ணயித்த 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி தனது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் சேர்த்தது. இதனால் சிறப்பாக பந்து வீசிய லக்னோ அணிக்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முகமது நபி ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதிரடியாக விளையாடி வந்த நேஹல் வதேரா 46 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
17 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது.
நிதானமாக விளையாடி வந்த இஷான் கிஷன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 36 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் சேர்த்து மந்தமாகவே விளையாடி வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மும்பை அணியின் பேட்ஸ்மேன் நேஹல் வதேரா தனது முதல் பவுண்டரியை 7வது ஓவரின் 4வது பந்தில் விளாசினார்.
பவர்ப்ளே முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. பவர்ப்ளேவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது அந்த அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
பவர்ப்ளேவின் கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ஹர்திக் பாண்டியா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். ஹர்திக் பாண்டியா தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஃபார்ம் பேட்ஸ்மேன் திலக் வர்மாவை லக்னோ அணியின் ரவி பிஷ்னாய் ரன் அவுட் செய்தார். திலக் வர்மா 11 பந்தில் 7 ரன்கள் சேர்த்தார்.
5 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நான்கு ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 22 ரன்கள் சேர்த்து நெருக்கடியான நிலையில் விளையாடி வருகின்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டினை ஸ்டாய்ன்ஸ் பந்தில் இழந்து வெளியேறினார்.
மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது ஓவரின் முதல் பந்தினை சிக்ஸரை விளாசி, ஆட்டத்தின் சிக்ஸர் கணக்கைத் தொடங்கினார்.
ரோகித் சர்மா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறியதால் மும்பை அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கியுள்ளார்.
ரோகித் சர்மா தனது விக்கெட்டினை மோசின் கான் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் வெளியேறினார்.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தினை டீப் ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரி விளாசினார் ரோகித் சர்மா.
முதல் ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி இரண்டு ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. முதல் ஓவரை வீசிய ஸ்டாய்னஸ் கட்டுக்கோப்பாக பந்து வீசி சிறப்பான தொடக்கத்தை லக்னோ அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
லக்னோ அணியின் ரிவ்யூவை பரிசீலித்த மூன்றாவது நடுவர், அந்த பந்தை வைய்டு என அறிவித்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது பந்தினை நடுவர் வைய்டு என அறிவிக்க, பந்து பேட்டில் பட்ட சத்தம் கேட்டதாக லக்னோ அணி ரிவ்யூ செய்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியுள்ளது. ஆட்டத்தின் முதல் ஓவரை மார்கஸ் ஸ்டாய்னஸ் வீசவுள்ளார்.
போட்டியின் நடுவர்கள் களத்திற்கு வந்துள்ளனர். ஏற்கனவே லக்னோ அணியின் ப்ளேயிங் லெவன் களத்தில் உள்ளது. மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்): கே.எல்.ராகுல்(w/c), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆஷ்டன் டர்னர், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான், மயங்க் யாதவ்
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), நேஹால் வதேரா, டிம் டேவிட், முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
மார்ச் மாதம் 22ஆம் தேதியில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய 17வது ஐபிஎல் தொடரில் பாதி லீக் போட்டிகள் முடிவடைந்துவிட்டது. இதில் ஒரு சில அணிகள் தங்களது அடுத்தகட்ட வாய்ப்பினை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. அதேபோல் ஒரு சில அணிகள் அடுத்த கட்ட சுற்றுக்குத் தகுதி பெற தீவிரமாக விளையாடி வருகின்றது.
இந்நிலையில் இன்று அதாவது ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொள்ளவுள்ளது. இந்த போட்டி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் சொந்த மைதானமான ஏக்னா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ரோகித் சர்மா பிறந்தநாள்
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆஸ்தான பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இன்று தனது 38வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இந்நிலையில் இன்றைய போட்டியினை வென்று ரோகித் சர்மாவுக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கவேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மிகவும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டனர். இதனை இன்றைய ஆட்டத்திலும் எதிர்பார்க்கலாம்.
ஐபிஎல் வரலாற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை 4 போட்டிகளில் லக்னோ அணிகள் அதிகபட்சமாக 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. மும்பை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும்தான் இரு அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும், எனவே இரு அணிகளும் வெற்றிக்காக கடின உழைப்பினை களத்தில் செலுத்தும்.
உலகக்கோப்பை அணியில் 4 மும்பை வீரர்கள்
ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -