LSG vs KKR LIVE Score: ஆல் அவுட் ஆன லக்னோ; 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா!
IPL 2024, LSG vs KKR LIVE Score: லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் லைவ் ஸ்கோரை இங்கே காணலாம்.
லக்னோ அணி 16.1ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
ஆட்டத்தின் 14வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட டர்னர் தனது விக்கெட்டினை கடைசி பந்தில் இழந்து வெளியேறினார்.
13 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்துள்ளது.
லக்னோ அணியின் பேட்ஸ்மேன் ஆயூஷ் பதோனி ஆட்டத்தின் 13வது ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 12 பந்தில் 15 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
நிக்கோலஸ் பூரன் தனது விக்கெட்டினை ரஸல் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 8 பந்தில் 10 ரன்கள் சேர்த்திருந்தார்.
லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 11 ஓவர்கள் முடிவில் 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் சேர்த்துள்ளது.
லக்னோ அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்டாய்னஸ் ஆட்டத்தின் 10வது ஓவரின் முதல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 21 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார்.
லக்னோ அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தீபக் ஹூடா தனது விக்கெட்டினை வருண் சக்ரவர்த்தி பந்தில் இழந்து வெளியேறினார்.
8 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
21 பந்தில் 25 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 7.3 ஓவரில் லக்னோ அணி 70 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 65 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 55 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆட்டத்தின் 4வது ஓவரில் ஸ்டாய்னஸ் மூன்று பவுண்டரி விளாசினார். இந்த ஓவரை ஸ்டார்க் வீசினார். 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 43 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மூன்று ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 30 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் குல்கர்னி தனது விக்கெட்டினை இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் இழந்து வெளியேறினார். இரண்டு ஓவர்களுக்கு லக்னோ அணி 20 ரன்கள் சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 235ரன்கள் சேர்த்தது. லக்னோ அணி சார்பில் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
19 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் 18வது ஓவரின் கடைசி பந்தில் ரிங்கு சிங் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 11 பந்தில் 16 ரன்கள் சேர்த்தார்.
கொல்கத்தா அணி 17 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அதிரடி ஆட்டக்காரர் ரஸல் தனது விக்கெட்டினை நவீன் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 8 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார்.
13 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
சுனில் நரைன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறிய பின்னர் கொல்கத்தா அணியின் சார்பில் ரஸல் களமிறங்கினார்.
39 பந்துகளில் 81 ரன்கள் குவித்த சுனில் நரைன் தனது விக்கெட்டினை ரவி பிஷ்னாய் பந்தில் இழந்து வெளியேறினார்.
லக்னோ அணியின் பவுலர் மோசின் கான் ஃபீல்டிங் செய்துகொண்டு இருந்தபோது காயம் அடைந்து வெளியேறினார்.
37 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றார் சுனில் நரைன்.
பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 70 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆதிரடியாக விளையாடி வந்த பிலிப் சால்ட் தனது விக்கெட்டினை ஆட்டத்தின் 5வது ஓவரை வீசிய நவின் உல்ஹக் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 14 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.
4 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றது. களத்தில் உள்ள சால்ட் மற்றும் நரைன் தலா 12 பந்துகளை எதிர்கொண்டு தலா 28 ரன்கள் குவித்துள்ளனர்.
3 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இதுவரை 9 பந்துகளை எதிர்கொண்டுள்ள சால்ட் அதில் 4 பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் பறக்கவிட்டுள்ளார்.
சுனில் நரைன் இதுவரை 5 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இரண்டு ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 18 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசிய சால்ட் மூன்றாவது ஓவரில் சிக்ஸர் விளாசி அசத்தினார்.
முதல் ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 10 ரன்கள் சேர்த்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிராக கொல்கத்தா அணி தனது பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது. ஆட்டத்தின் முதல் பந்தை சால்ட் பவுண்டரிக்கு விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார்.
Background
ஐபிஎல் சீசன் 17:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 53 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது லக்னோ அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. தொடக்க விரர் டி-காக் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறுவது லக்னோ அணியின் பலவீனமாக உள்ளது. கே,எல். ராகுல், ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். மோஷின் கான், யாஷ் தாக்கூர் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர். கொல்கத்தா அணியில் சால்ட், நரைன், ஸ்ரேயாஸ் அய்யர், ரசல் மற்றும் ரிங்கு சிங் என, அணியின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். மிட்செல் ஸ்டார்ட் ஃபார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. ஹர்ஷித் ராணா மற்றும் நரைன் ஆகியோரும் பந்துவீச்சில் அசத்தி வருகின்றனர்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் லக்னோ அணி 3 முறையும், கொல்கத்தா அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி அதிகபட்சமாக 210 ரன்களையும், குறைந்தபட்சமாக 161 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 208 ரன்களையும், குறைந்தபட்சமாக 101 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
டாஸ் வென்ற லக்னோ:
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்)
பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர் ), சுனில் நரேன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் அய்யர்(கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்)
கே.எல். ராகுல்(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் ), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆஷ்டன் டர்னர், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -