LSG vs GT LIVE Score:மிரட்டல் பவுலிங்கால் அபார வெற்றி பெற்ற லக்னோ
IPL 2024 LSG vs GT: லக்னோ - குஜராத் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.
பவுலிங்கில் மிரட்டிய லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குஜராத் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து பறிபோகி வருகிறது. ஆல் ரவுண்டர் ரஷீத்கான் டக் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார்.
குஜராத் அணிக்காக ஆடிக்கொண்டிருந்த விஜய் சங்கர் 17 ரன்களில் அவுட்டானார்.
குஜராத் அணிக்காக விஜய் சங்கர் - ராகுல் திவேதியா ஜோடி இணைந்து ஆடி வருகிறது. 6 ஓவர்களில் 72 ரன்கள் தேவைப்படுகிறது.
குஜராத் அணியின் நல்கண்டே 12 ரன்களுக்கு அவுட்டானார். இதனால், குஜராத் அணி 5வது விக்கெட்டை இழந்துள்ளது.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
அதிரடியாக விளையாடி சாய் சுதர்சன் 31 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு குஜராத் அணி 58 ரன்கள் எடுத்துள்ளது.
5 பந்துகள் களத்தில் நின்று 1 ரன் மட்டுமே எடுத்து கேன் வில்லியம்சன் விக்கெட்டை பறிகொடுத்தார்.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய சுப்மன் கில் அதிரடியாக விளையாடினார். இச்சூழலில் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். அந்த வகையில் மொத்தம் 19 ரன்கள் எடுத்துள்ளார்.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி குஜராத் அணி 32 ரன்கள் எடுத்துள்ளது.
3 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்துள்ளது குஜராத் அணி.
முதல் ஓவர் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 ரன்கள் எடுத்துள்ளது. அந்த வகையில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் விளையாடி வருகின்றனர்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.
19 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.
ஆயுஷ் படோனி 20 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
18 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
18 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
17 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு லக்னோ அணி 121 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.
அதிரடியாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை பறிகொடுத்தார். 43 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரி உட்பட58 ரன்கள் எடுத்து விக்கெட்டானார்.
லக்னோ அணிக்காக அபாரமாக ஆடி வரும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 31 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
லக்னோ அணிக்காக ரன்களை குவிக்க கே.எல்.ராகுலும் - ஸ்டோய்னிசும் போராடினாலும் குஜராத் அணி பந்துவீச்சில் கலக்கி வருகிறது.
12 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 10 ஓவர்கள் முடிவில் 74 ரன்களை எடுத்துள்ளது.
லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் - ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஆட முயற்சித்து வரும் நிலையில், குஜராத் வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி வருகின்றனர்.
பவர்ப்ளேவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களை எடுத்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
நான்கு ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
மூன்று ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
லக்னோ அணி வீரர் தேவ்தட் படிக்கல் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். உமேஷ் யாதவ் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து 7 ரன்களுடன் நடையைக்கட்டினார்.
இரண்டு ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் கே.எல்.முதல் பவுண்டரியை விளாசியுள்ளார்.
முதல் ஓவர் முடிந்த நிலையில் லக்னோ அணி 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரின் 4 வது பந்தில் குயின் டன் டி காக் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். அந்த வகையில் அவர் 6 ரன்கள் எடுத்தார்.
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் குயின்டன் டி காக் களம் இறங்கி உள்ளனர்.
Background
17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் கடந்த ஆண்டைப் போல் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றது. இந்நிலையில் வார இறுதி நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் இரு அணிகளும் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் குஜராத் அணி களமிறங்கிய முதல் ஆண்டே கோப்பையைத் தட்டிச் சென்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பான்மையான அணிகள் அசுர பலத்துடன் உள்ளன. அவற்றில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று அதாவது ஏப்ரல் 7ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இரவும் 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஏக்னா மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை நான்கு முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் நான்கு போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சீசனில் இரு அணிகளும் மோதும் முதல் போட்டி இது என்பதால் இந்த போட்டி மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாகியுள்ளது.
நேருக்கு நேர்
குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் நான்கு புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் லக்னோ அணி 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -