இந்தியன் பிரிமீயர் லீக் 2024ன் 39வது போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. 


இந்த சீசனில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் இடையேயான இரண்டாவது மோதல் இதுவாகும். இதற்கு முந்தைய போட்டி கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 


புள்ளிப்பட்டியலில் இரு அணிகளும் எந்த இடத்தில் உள்ளது..?


சென்னை மற்றும் லக்னோ இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் 4 வெற்றி பெற்றுள்ளன. நிகர ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி நான்காவது இடத்தில் உள்ளது. அதேசமயம் லக்னோ அணி 5வது இடத்தில் உள்ளது. 


இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 


ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் நடந்துள்ளன. இதன்போது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேசமயம் லக்னோ அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. 



சென்னை Vs லக்னோ நேருக்கு நேர்


மொத்தப் போட்டிகள்: 4
லக்னோ வெற்றி: 2
சென்னை வெற்றி: 1
முடிவு இல்லை: 1 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: 


குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்.


இம்பாக்ட் வீரர்: அர்ஷின் குல்கர்னி, கிருஷ்ணப்பா கௌதம், யுத்வீர் சிங், மணிமாறன் சித்தார்த், அர்ஷத் கான். 


சென்னை சூப்பர் கிங்ஸ்: 


ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான், மதிஷா பத்திரனா.


இம்பாக்ட் வீரர்: சமீர் ரிஸ்வி, ஷர்துல் தாக்கூர், ஷேக் ரஷித், நிஷாந்த் சிந்து, மிட்செல் சான்ட்னர்


இரு அணிகளின் முழு அணி விவரம்: 


சென்னை சூப்பர் கிங்ஸ்:


ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), அஜிங்க்யா ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, சமீர் ரிஸ்வி, மொயின் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா, ஷர்துல் ரஷேத், ஷர்துல் ரஷேத், ஷைஸ்த் தாகூர் , மிட்செல் சான்ட்னர், டேரில் மிட்செல், ஆரவெல்லி அவனிஷ், மகேஷ் தீக்ஷனா, ஆர்எஸ் ஹங்கர்கேகர், சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் ஜாதவ் மண்டல், ரிச்சர்ட் க்ளீசன்


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:


கே.எல். ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர், அர்ஷின் குல்கர்னி, கிருஷ்ணப்ப கவுதம், யுத்மவீர் சிங் சரக், சித்தார்த், அர்ஷத் கான், பிரேராக் மன்கட், அமித் மிஸ்ரா, கைல் மேயர்ஸ், ஷமர் ஜோசப், ஆஷ்டன் டர்னர், நவீன் உல் ஹக், தேவ்தத் படிக்கல், மயங்க் யாதவ்