KKR vs SRH LIVE Score: கடைசி 3 பந்தில் மாறிய ஆட்டம்; த்ரில் வெற்றியைப் பெற்ற கொல்கத்தா!
IPL 2024 KKR vs SRH LIVE Score : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி 27 பந்துகளாக ஹைதராபாத் அணி பவுண்டரி விளாசவில்லை.
13 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்துள்ளது. ஹைதராபாத் வெற்றிக்கு 98 ரன்கள் தேவைப்படுகின்றது.
19 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் த்ரிப்பாதி தனது விக்கெட்டினை இழந்தார். 12.5 ஓவர்களில் 111 ரன்களில் ஹைதராபாத் அணி தனது 4வது விக்கெட்டினை இழந்துள்ளது.
ஹைதராபாத் அணி வெற்றி பெற 8 ஒவர்களில் 101 ரன்கள் தேவை என்ற நிலையில் விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் சேர்த்துள்ளது.
13 பந்தில் 18 ரன்கள் சேர்த்து விளையாடி வந்த மார்க்கரம் தனது விக்கெட்டினை வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஹைதராபாத் அணி மூன்றாவது விக்கெட்டினை இழந்துள்ளது.
ஹைதராபாத் அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 105 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணி வெற்றி பெற 10 ஓவர்களில் 110 ரன்கள் தேவைப் படுகின்றது.
ஹைதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 99 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டினை இழந்து 77 ரன்கள் சேர்த்துள்ளது.
ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை ரஸல் பந்தில் இழந்து வெளியேறினார்.
7 ஓவர்களில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 67 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
6 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 65 ரன்கள் சேர்த்துள்ளது.
ஹைதராபாத் அணி 4.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எட்டியுள்ளது.
4 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்துள்ளது.
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தார் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்துள்ளது. ரஸல் 64 ரன்கள் சேர்த்தார். நடராஜன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் தனது விக்கெட்டினை நடராஜன் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 15 பந்தில் 23 ரன்கள் சேர்த்துள்ளார்.
19 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் சேர்த்துள்ளது.
ரஸல் 20 பந்துகளில் 6 சிக்ஸர் 2 பவுண்டரி விளாசி அரைசதம் விளாசினார்.
கொல்கத்தா அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் சேர்த்து வருகின்றது.
கொல்கத்தா அணி 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
கொல்கத்தா அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணி 14 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 119 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பிலிப் சால்ட் தனது விக்கெட்டினை மார்கண்டே பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 40 பந்தில் 54 ரன்கள் சேர்த்தார்.
தொடக்க வீரராக களமிறங்கி 38 பந்தில் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.
13 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ரமந்தீப் 17 பந்தில் 35 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்தில் இழந்து வெளியேறினார்.
கொல்கத்தா அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணியின் ஷாபாஷ் இந்த ஐபிஎல் தொடரின் முதல் நோ-பாலை வீசியுள்ளார்.
கொல்கத்தா அணி 100 ரன்களை நெருங்கி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் சேர்த்துள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல்-இல் மட்டும் கொல்கத்தா அணி பவர்ப்ளேவில் 29 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
கொல்கத்தா அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 66 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
4 விக்கெட்டுகளை கொல்கத்தா இழந்த நிலையில் ரமன் தீப் களமிறங்கியுள்ளார்.
நிதானமாக ஆடிவந்த நிதிஷ் ராணா தனது விக்கெட்டினை 11 பந்தில் 9 ரன்கள் சேர்த்து மார்கண்டேயா பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார்.
கொல்கத்தா அணி 7.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை எட்டியது.
7 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெடுகளை இழந்து 49 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் சேர்த்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டினை இழந்து 40 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நான்கு ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 32 ரன்கள் சேர்த்துள்ளது.
3 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 27 ரன்கள் சேர்த்துள்ளது. இரண்டாவது ஓவரில் சுனில் நரேன் ரன் அவுட் ஆனார்.
போட்டியின் இரண்டாவது ஓவரில் பிலிப் சால்ட் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தியுள்ளார். இந்த ஓவரை மார்கோ யான்சென் வீசினார்.
போட்டியின் முதல் சிக்ஸரை சால்ட் போட்டியின் இரண்டாவது ஓவரில் விளாசினார்.
கொல்கத்தா அணி முதல் ஓவரில் விக்கெட் இழக்காமல் மூன்று ரன்கள் சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நேற்று அதாவது மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவில் இந்த ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் தொடருக்கு முதற்கட்ட லீக் போட்டிகள் அட்டவணை வெளியிடப்பட்டது.அதன்படி நேற்று முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 23ஆம் தேதி இரண்டு லீக் போட்டிகள் அட்டவணைப் படுத்தப்பட்டது. அதில் முதல் போட்டியில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் நடைபெறுகின்றது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகின்றது.
இந்த போட்டி 17வது சீசனில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி என்பதால் வெற்றியைப் பெற இரு அணிகளும் தீவிரமாக செயல்படும் என எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் கொல்கத்தா அணி மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூபாய் 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதேபோல் ஹைதராபாத் அணி பேட் கம்மின்ஸை ரூபாய். 20.50 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் மோதிக்கொள்வதால் இந்த போட்டியின்மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதுவரை 25 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 முறை வெற்றிபெற்றுள்ளது. இன்றைய போட்டியும் கொல்கத்தா மைதானத்தில் நடைபெறுவதால் கொல்கத்தா அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.
கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ள நட்சத்திர பேட்ஸ்மேன்கள் என்றால் அவர்களில் ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா மற்றும் ரின்கு சிங் உள்ளிட்ட வீரர்கள் பெயர் கட்டாயம் இருக்கும். இவர்கள் ப்ளேயிங் லெவனிலும் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் உலகக் கோப்பை இறுதிப் போட்டி சதம் விளாசிய டிராவிஸ் ஹெட், சன்ரைசர்ஸ் அணிக்கு தென்னாப்பிரிக்கா டி20 லீக் கிரிக்கெட்டில் இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்த ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் போன்ற உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ளது.
இந்த போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளையும் சுவாரஸ்யமான தகவல்களையும் இங்கு உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -