KKR vs RR LIVE Score: வீணாய் போன நரைன் சதம்; சேஸிங்கில் சதம் விளாசி ராஜஸ்தானுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த பட்லர்!
IPL 2024 KKR vs RR LIVE Score Updates: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபிநாடு தளத்தில் காணலாம்.
பட்லர் தனது 7வது ஐபிஎல் சதத்தினை 101வது ஐபிஎல் போட்டியில் பூர்த்தி செய்துள்ளார். நடப்பு தொடரில் இரண்டாவது சதத்தையும் எட்டியுள்ளார் பட்லர்.
கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய பட்லர், அடுத்த மூன்று பந்துகளில் ரன் எதுவும் எடுக்கததால் ஆட்டத்தில் பரபரப்பு கூடியது, ஆனால் 5வது பந்தில் இரண்டு ரன்களும் கடைசி பந்தில் ஒரு ரன்னும் எடுத்து அணியை வெற்றி பெறவைத்தார்.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 9 ரன்கள் வெற்றிக்கு தேவைப்படுகின்றது. பட்லர் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
ராஜஸ்தான் அணி 18.1 ஓவரில் 200 ரன்களை எட்டியுள்ளது.
ராஜஸ்தான் அணி வெற்றி பெற 2 ஓவரில் 28 ரன்கள் தேவைப்படுகின்றது. 18வது ஓவரில் ராஜஸ்தான் அணி 18 ரன்கள் சேர்த்தது.
அதிரடியாக விளையாடி வந்த ரோமன் பவல் தனது விக்கெட்டினை சுனில் நரைன் பந்தில் இழந்து வெளியேறினார்.
ஆட்டத்தின் 17வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் விளாசி அமர்க்களப்படுத்தி வருகின்றார் பவல்.
ஆட்டத்தின் 16வது ஓவரில் பவல் மற்றும் பட்லர் மாறி மாறி சிக்ஸர்கள் விளாசி வருகின்றனர்.
15.1 ஓவரில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
வருண் சக்ரவர்த்தி வீசிய ஆட்டத்தின் 15வது ஓவரில் பட்லர் நான்கு பவுண்டரிகள் விளாசி அமர்க்களப்படுத்தியதுடன், தனது அரைசத்தையும் பூர்த்தி செய்தார் பட்லர்.
தொடக்க வீரராக களமிறங்கி 36 பந்தில் தனது அரைசதத்தினை விளாசியுள்ளார் ஜோஸ் படலர்.
ராஜஸ்தான் அணி வெற்றி பெற 7 ஓவரில் 99 ரன்கள் தேவைப்படுகின்றது.
ஹெட்ம்யர் தனது விக்கெட்டினை தான் எதிர்கொண்ட முதல் பந்தில் இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை வருண் சக்ரவர்த்தி கைப்பற்றினார்.
அஸ்வின் தனது விக்கெட்டினை 11 பந்தில் 8 ரன்கள் சேர்த்து , வருண்சக்ரவர்த்தி பந்தில் வெளியேறினார்.
ராஜஸ்தான் அணி வெற்றி பெற 8 ஓவரில் 103 ரன்கள் தேவைப்படுகின்றது.
12 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஏற்கனவே மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக்கொண்டு இருந்த ராஜஸ்தான் அணி தனது 4வது விக்கெட்டினை இழந்தது. அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜுரேல் சுனில் நரைன் பந்தில் வெளியேறினார்.
8.2 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று விக்கெட்டுகளை இழக்காமல், 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹர்சித் ராணா வீசிய 8வது ஓவரின் 5வது பந்தினை ரியான் பராக் வேகமாக தூக்கி அடிக்க, பந்து ஆகாயத்தை நோக்கு ஜெட் வேகத்தில் பறந்தது. ஆனால் அந்த பந்து ஆடுகளத்தை விட்டு வெளியே போகாமல், ரஸலிடம் கேட்ச் ஆனதால், ப்ராக் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
ராஜஸ்தான் அணிக்கு பட்லர் மற்றும் பராக் கூட்டணி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து வருகின்றது. இவர்கள் கூட்டணி 7.4 ஓவர்கள் முடிவில் 21 பந்தில் 50 ரன்கள் சேர்த்துள்ளது.
இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி 76 ரன்கள் குவித்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு விக்கெட்டினை இழந்து 53 ரன்கள் சேர்த்துள்ளது. 224 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் தங்களது விக்கெட்டினை பவர்ப்ளேவில் இழந்துள்ளனர்.
கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆட்டத்தின் 18வது ஓவரில் சுனில் நரைனும் 20வது ஓவரில் வெங்கடேஷ் ஐயரும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர்.
49 பந்தில் சுனில் நரைன் தனது சதத்தினை எட்டினார். இவர் 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் விளாசி சதத்தை எட்டினார்.
15 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
கொல்கத்தா நைர் ரைடர்ஸ் அணி 14.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஸ்ரேயஸ் ஐயர் தனது விக்கெட்டினை 11 ரன்களுக்கு சஹால் பந்தில் வெளியேறினார்.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து வருகின்றார்.
கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 100 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
தொடக்க வீரராக களமிறங்கி 29 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
தொடக்க வீரராக களமிறங்கி 29 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
தொடக்க வீரராக களமிறங்கி 29 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
9.3 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 91 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 89 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 74 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளேவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்திருந்தாலும், 6 ஓவர்கள் முடிவில் 56 ரன்கள் குவித்து, பவர்ப்ளேவில் சிறப்பான ரன்குவிப்பில் ஈடுப்பட்டுள்ளது.
5.5 ஓவரில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 52 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 40 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் பிலிப் சால்ட் தனது விக்கெட்டினை ஆவேஷ் கான் பந்தில் இழந்து வெளியேறினார்.
3 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இரண்டு ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 12 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
முதல் ஓவர் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி மூன்று ரன்கள் சேர்த்து நிதான ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
கொல்கத்தா அணி தனது ரன் கணக்கை பிலிப் சால்ட் அடித்த இரண்டு ரன்களுடன் தொடங்கியுள்ளது.
ஆட்டத்தின் இரண்டாவது பந்தினை பில்ப் சால்ட் அடித்த பந்தை ரியான் ப்ராக் தவறவிட்டார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கைத் தொடங்கியது கொல்கத்தா.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 31வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இந்த சீசனில் இரு அணிகளும் தற்போது அற்புதமான பார்மில் உள்ளன. புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதலிடத்தில் உள்ளன. இந்தநிலையில், ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்றைய போட்டியும் அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு எதிராக கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, கேகேஆர் 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து ஆர்ஆர் 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த சீசனில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியபோது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை 28 முறை மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக கொல்கத்தா 14 வெற்றிகளுடனும், ராஜஸ்தான் 13 வெற்றிகளுடனும் உள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது.
கொல்கத்தாவில் இரு அணிகளும் மோதியதில்...
இன்றைய வானிலை எப்படி..?
யார் அதிக ஆதிக்கம்..?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சஞ்சு சாம்சன் 388 ரன்களுடனும், அஜிங்க்யா ரஹானே 338 ரன்களுடனும் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் சிவம் மாவி அதிகபட்சமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சுனில் நரைன் 12 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுனில் நரைன், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ராமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஆண்ட்ரே ரசல், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), அவேஷ் கான், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல், கேசவ் மகாராஜ், டிரெண்ட் போல்ட்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -