GT vs DC LIVE Score: குஜராத்தை ஊதித்தள்ளிய டெல்லி; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
IPL 2024 GT vs DC LIVE Score Updates: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
டெல்லி அணி 8.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருந்த டெல்லி அணி தற்போது 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
8 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் சேர்த்துள்ளது.
டெல்லி அணி 5.4 ஓவரில் ஷாய் கோப் விக்கெட்டினை இழந்துள்ளது. ரஷித் கான் பந்தில் ஷாய் கோப் தனது விக்கெட்டினை இழந்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் சேர்த்துள்ளது.
போரல் தனது விக்கெட்டினை க்ளீன் போல்ட் முறையில் இழந்து வெளியேறினார்.
இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் டெல்லி அணி அதிரடியாக விளையாடி 4.3 ஓவரில் 58 ரன்கள் சேர்த்துள்ளது. டெல்லி அணி வெற்றி பெற இன்னும் 32 ரன்கள் தேவைப்படுகின்றது.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா தனது விக்கெட்டினை ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் இழந்து வெளியேறினார்.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் மெக்கர்க் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி தனது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.
குஜராத் அணி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 100 ரன்களுக்கு கீழ் எடுப்பது இதுவே முதல்முறை ஆகும். ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணியின் மிகக் குறைந்த ஸ்கோராக பதிவாகியுள்ளது.
குஜராத் அணி தனது சொந்த மண்ணில் 17.3 ஓவரில் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டெல்லியின் முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ரஷித் கான் தனது விக்கெட்டினை ஆட்டத்தின் 18வது ஓவரின் முதல் பந்தில் இழந்து வெளியேறினார். அணியின் ஸ்கோர் 88 ஆக உள்ளது.
குஜராத் அணியின் 8வது விக்கெட்டாக மோகித் சர்மாவை இழந்துள்ளது.
குஜராத் அணி 14 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டினை இழந்து 75 ரன்கள் சேர்த்துள்ளார்.
14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
குஜராத் அணி தனது 7வது விக்கெட்டாக ராகுல் திவேதியாவை இழந்துள்ளது. அப்போது அணியின் ஸ்கோர் 11.2 ஓவரில் 67 ரன்கள்.
10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய ஷாரூக் கான் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினார்.
குஜராத் அணியின் இம்பேக்ட் ப்ளேயராக ஷாருக்கான் களமிறக்கப்பட்டுள்ளார்.
குஜராத் அணியின் அபினவ் தனது விக்கெட்டினை 8 ரன்களுக்கு இழந்து வெளியேறினார். குஜராத் அணி ஐந்தாவது விக்கெட்டினை 8.3வது ஓவரில் இழந்து வெளியேறினார்.
பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் மெய்டன் ஓவரை கலீல் அகமது வீசியுள்ளார்.
5.1 ஓவர்கள் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி தத்தளித்து வருகின்றது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சுதர்சன் - சாஹா ஜோடி 3 ஓவர்கள் முடிவில் 23 ரன்களை எடுத்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் - சஹா தொடக்க வீரர்களாக களமிறங்கினார். கில் 8 ரன்களில் அவுட்டானார்.
Background
2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மிகவும் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெற மிகவும் தீவிரமாக ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி வருகின்றது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் கடைசி ஓவர் வரை சென்ற போட்டிகளின் எண்ணிக்கை குறைவு, ஆனால் நடப்பு தொடரில் கடைசி ஓவர் த்ரில்லர்கள் மிகவும் அதிகமாகவே நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்று அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளும் இதுவரை மூன்று போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த மூன்று போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு போட்டிகளிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் டெல்லி அணிக்கு எதிராக குஜராத் அணி அதிகபட்சமாக 171 ரன்கள் சேர்த்துள்ளது. அதேபோல் குஜராத் அணிக்கு எதிராக டெல்லி அணி 162 ரன்கள் அதிகபட்சமாக எடுத்துள்ளது.
போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் இதுவரை மொத்த, 30 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 14 போட்டிகளிலும், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 173 ஆக உள்ளது.
இரு அணிகள் நடப்பு சீசனில் இதுவரை
முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி அதில், மூன்று போட்டிகளில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.
அதேபோல் பெரும் விபத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் நடப்பு சீசனில் விளையாடுவது மட்டும் இல்லாமல் அணியை வழிநடத்தி வருகின்றார். இவரது தலைமையில் டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி, இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றும் நான்கு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தும் உள்ளது. இதனால் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று மோதிக்கொள்கின்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -