இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கடைசியாக 2022ம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றை எட்டியது. நேற்று நடைபெற்ற கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில், பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
முன்னதாக, கடந்த 2023ம் ஆண்டு கூட பெங்களூரு அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. அதேபோல், இந்தாண்டும் பெங்களூரு அணியில் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நடப்பு சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் வெறும் 2 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இனி மீதமுள்ள 6 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றாலும், பெங்களூரு அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பது தெரியவில்லை.
ஆண்டுகள் மாறினாலும் நிலைமை என்னவோ..!
ஐபிஎல் 2024ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த 25ம் தேதி தனது முதல் மற்றும் கடைசி போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தது. அதன்பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா அணியிடம் இரண்டு முறையிம், ஹைதராபாத், லக்னோ, ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக தலா ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் 2029ம் ஆண்டிலும் பெங்களூரு அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோல்வியடைந்தது. இப்போது மீண்டும் அந்த அணி அந்த மோசமான சாதனையை சமன் செய்யும் நிலைக்கு வந்துள்ளது. ஏனெனில் இந்த சீசனில் பெங்களூரு அணி இதுவரை தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இங்கிருந்து மீதமுள்ள 6 போட்டிகளிலும் ஆர்சிபி வெற்றி பெற்றால் 14 புள்ளிகளைப் பெற முடியும். புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முயற்சித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பிளேஆஃப் சுற்றுக்கு செல்லும் பெங்களூருவின் கனவு மற்றும் நம்பிக்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.
குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளும் இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்த அணிகள் வரும் போட்டிகளில் வெற்றிபெற்ற பிளேஆஃப் சுற்றுக்கான பந்தயத்தில் எப்படியோ தங்களைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்யும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அடுத்ததாக ஹைதராபாத் மற்றும் சென்னைக்கு எதிராக நேருக்கு நேர் மோதுகிறது. இந்த இரண்டு அணிகள் அற்புதமாக செயல்பட்டு புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. பெங்களூரு, ஐபிஎல் 2024 இல் தொடர்ச்சியாக 5 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் தோல்வியடைந்த எந்த அணியும் இல்லை.
பெங்களூரு அணி எத்தனை முறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது?
ஐபிஎல்லில் 10 அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐபிஎல்லில் இதுவரை மூன்று முறை இறுதிப் போட்டிகளிலில் விளையாடி, 3லிலும் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ், 2011ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் களமிறங்கி தோல்வியை சந்தித்தது.