ஐபிஎல் 2024ல் 36வது போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. 


இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம், கொல்கத்தா மீண்டும் ஐபிஎல் 2024 புள்ளிகள் அட்டவணையில் முதல் 2 இடங்களுக்குள் நுழைய முயற்சிக்கும். அதே நேரத்தில் பெங்களூரு எப்படியாவது இந்த போட்டியில் வெற்றிபெற முயற்சிக்கும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இந்த சீசனில் விளையாடிய 7 போட்டிகளில் 6ல் தோல்வியடைந்துள்ளது. 


கடந்த மார்ச் 25ம் தேதி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில்தான் பெங்களூரு அணிக்கு முதல் மற்றும் கடைசி வெற்றி கிடைத்தது. 


பிட்ச் ரிப்போர்ட்: 


கொல்கத்தாவில் ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் பிற்பகலில் நடைபெறும் ஐபிஎல் 2024ன் இரண்டாவது போட்டி இதுவாகும். கொல்கத்தாவில் தற்போது வெப்பம் நிலவி வருவதால், ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு ரன் எடுக்க தடுமாறுவார்கள். எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது. 


ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகளின் புள்ளிவிவரங்கள்: 


மொத்த ஐபிஎல் போட்டிகள் - 84
கொல்கத்தா அணியின் வெற்றி - 49
மற்ற அணிகளின் வெற்றி - 35
பெங்களூரு அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் வெற்றி - 7 போட்டிகள் 
பெங்களூரு அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் தோல்வி - 4 போட்டிகள் 
முதலில் பேட்டிங் செய்த அணி பெற்ற வெற்றி - 36
இரண்டாவது பேட்டிங் செய்த அணி பெற்ற வெற்றி - 53
அதிகபட்ச ஸ்கோர் - 235/4
குறைந்தபட்ச ஸ்கோர் - 49க்கு ஆல் அவுட் 


இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை ஐபிஎல்லில் மொத்தம் 33 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக 19 போட்டிகளில் வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த மூன்று போட்டிகளில் பெங்களூரு அணிக்கு எதிரான கொல்கத்தா ஹாட்ரிக் வெற்றிபெற்றது. 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 


ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), விராட் கோலி, வில் ஜாக், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர், மஹிபால் லோம்ரோர், லாக்கி பெர்குசன், முகமது சிராஜ், கர்ன் சர்மா, ஆகாஷ் தீப்.


முழு அணிகளின் விவரம்: 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), கே.எஸ்.பாரத், ரஹ்மானுல்லா குர்பாஸ், ரின்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், மணீஷ் பாண்டே, ஆண்ட்ரே ரசல், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், அனுகுல் ராயர், ராமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நாராயண், வைபவ் அரோரா, சேத்தன் சகாரியா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் சர்மா, மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, சாகி ஹுசைன் மற்றும் முஜீப் உர் ரஹ்மான்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக், மஹிபால் லோம்ரோர், கர்ண் சர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டகர், விஜய்குமார் விஷாக், ஆகாஷ் தீப். முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு ஷர்மா, ராஜன் குமார், கேமரூன் கிரீன், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் குர்ரன், லாக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், சவுரவ் சவுகான்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:


 பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.