ஐபிஎல் 2024ல் பேட்ஸ்மேன்கள் முதல் பந்திலேயே பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்து பறக்கவிட்டு வருகிறார்கள். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனை இந்த சீசனில் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பேட்டிங் செய்தாலும், கடைசி ஓவரில் பந்துவீச்சாளர்கள் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி ரன் வேட்டையை தடுத்து நிறுத்துகின்றனர். இந்தநிலையில், ஐபிஎல் டெத் ஓவர்களில் பேட்டிங் செய்யும்போது அதிக டாட் பந்துகளை விளையாடிய பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று இந்த பட்டியலில் பார்க்கலாம். (கடைசி 16 ஓவர் முதல் 20வது ஓவர் வரை விளையாடுவதையே டெத் ஓவர்கள் என்பார்கள்)


இந்த பட்டியலில் நம்பர் 1 யார் இருக்கிறார் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 


10- அம்பதி ராயுடு


அம்பதி ராடு கடந்த சீசன் அதாவது ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு பிறகு அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அம்பதி ராயுடு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் டெத் ஓவரில் பேட்டிங் செய்யும்போது அம்பதி ராயுடு 125 டாட் பந்துகளை விளையாடியுள்ளார். 


9- ஏபி டி வில்லியர்ஸ் 


ஐபிஎல் டெத் ஓவர்களில் அதிக டாட் பந்துகளை விளையாடிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸின் பெயர் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. டெத் ஓவரில் பேட்டிங் செய்யும் போது டி வில்லியர்ஸ் 133 டாட் பந்துகளை விளையாடியுள்ளார். 


8- டேவிட் மில்லர்


இந்த பட்டியலில் தற்போதைய குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ​​டேவிட் மில்லரின் பெயர் எட்டாவது இடத்தில் உள்ளது. இவர், ஐபிஎல் டெத் ஓவர்களில் மில்லர் 135 டாட் பந்துகளை விளையாடியுள்ளார். 


7- ரோஹித் சர்மா


ஐபிஎல் டெத் ஓவர்களில் அதிக டாட் பந்துகளை விளையாடிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஏழாவது இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா இதுவரை 151 டாட் பந்துகளை விளையாடியுள்ளார். 


6- ஹர்திக் பாண்டியா 


இந்த பட்டியலில் தற்போதையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பெயர் ஆறாவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் டெத் ஓவர்களில் பேட்டிங் செய்யும்போது ஹர்திக் பாண்டியா 163 டாட் பந்துகளை விளையாடியுள்ளார். 


5- ஆண்ட்ரே ரஸ்ஸல்


ஐபிஎல் டெத் ஓவர்களில் அதிக டாட் பந்துகளை விளையாடிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில், தனது வெடிக்கும் பேட்டிங்கிற்கு புகழ்பெற்ற ஆண்ட்ரே ரசல், முதலிடத்தில் உள்ளார். ரஸ்ஸல் 177 டாட் பந்துகளை விளையாடியுள்ளார். 


4- ரவீந்திர ஜடேஜா 


பெரும்பாலும் மிடில் ஆர்டருக்கு பின் வரிசையில் பேட் செய்யும் ரவீந்திர ஜடேஜா, ஐபிஎல் டெத் ஓவர்களில் அதிக டாட் பந்துகளை விளையாடிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். ஜடேஜா இதுவரை 212 டாட் பந்துகளை விளையாடியுள்ளார். 


3- தினேஷ் கார்த்திக் 


ஐபிஎல் டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக் 217 டாட் பந்துகளை விளையாடியுள்ளார். இதையடுத்து, இந்த பட்டியலில் தினேஷ் கார்த்திக் மூன்றாவது இடத்தில் உள்ளார். 


2- கீரன் பொல்லார்ட்


அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்ற கீரன் பொல்லார்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் டெத் ஓவர்களில் அதிக டாட் பந்துகளை விளையாடிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் பொல்லார்டு இரண்டாவது இடத்தில் உள்ளார். பொல்லார்ட் இதுவரை கடைசி ஓவரில் 291 டாட் பந்துகளை விளையாடி உள்ளார். 


1- எம்எஸ் தோனி


ஐபிஎல் டெத் ஓவர்களில் அதிக டாட் பந்துகளை விளையாடிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் எம்எஸ் தோனி முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் டெத் ஓவரில் தோனி 371 டாட் பந்துகளை விளையாடியுள்ளார்.