நடப்பு ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்தது. இதன் அடிப்படையில் குஜராத் அணி களமிறங்கியது.
குஜராத் அணியின் இன்னிங்ஸை கேப்டன் கில் மற்றும் சாய் சுதர்சன் கூட்டணி சிறப்பாக விளையாடி சென்னை அணியின் பந்து வீச்சினை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தது. இருவரும் அதிரடியாகவும் அட்டகாசமாகவும் விளையாடி தங்களது சதத்தினை எட்டினர். இருவரும் தலா 50 பந்துகளில் தங்களது சதத்தினை பூர்த்தி செய்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு இருவரும் 17.2 ஓவர்களில் 210 ரன்கள் குவித்தனர். அதன் பின்னர் சாய் சுதர்சன் தனது விக்கெடினை இழந்து வெளியேறினார்.