கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முன்னதா இந்த சீசனின் ப்ளேஆப் தகுதிச் சுற்றில் இருந்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்டுவிட்டன.  அந்தவகையில் மீதி இருக்கும் 8 அணிகள் ப்ளேஆப் சுற்றுக்கு உள்ளே போக போராட உள்ளது.


ஐ.பி.எல் சீசன் 17:


இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 59 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இன்றைய போட்டியில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளனர். 


சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்:






சாய் சுதர்சன் இன்றைய போட்டியில் 32 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதோடு கடந்த 17 சீசன்களாக எந்த ஒரு இந்திய பேட்ஸ்மேன்களும் செய்யாத சாதனையையும் செய்துள்ளார். அதாவது ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.


மேலும், சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்தார். இதற்கு முன்னதாக 31 இன்னிங்ஸ்கள் விளையாடி சச்சின் டெண்டுல்கர் 1000 ரன்களை கடந்தார். ஆனால் சாய் சுதர்சன் 25 இன்னிங்ஸ்களிலேயே அந்த சாதனையை செய்து சச்சின் சாதனையை முறியடித்துவிட்டார்.