கடந்த இரண்டு மாத போராட்டத்திற்கு பிறகு, இன்று ஐ.பி.எல். 2024 இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. முதலில் டாஸ் வென்ற பேட்டிங்கை தேர்வு செய்தார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ். ஆனால், இதுதான் அனைத்திலும் தவறாக போனது.
113 ரன்களுக்கு ஆல் அவுட்:
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாகவே கேப்டன் பாட் கம்மின்ஸ் 24 ரன்களும், மார்க்ரம் 20 ரன்களும் மட்டுமே எடுத்திருந்தனர்.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரசல் 3 விக்கெட்களும், ஸ்டார்க் மற்றும் ஹர்திச் ராணா தலா 2 விக்கெட்களும் எடுத்திருந்தனர். இதுபோக, வைபவ், சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி என மூவரும் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.
ஐ.பி.எல். வரலாற்றிலே குறைவான ஸ்கோர்:
கொல்கத்தாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது மூலம், இதுவரை நடந்த 17 ஐபிஎல் போட்டிகளில் இதுவே இறுதிப்போட்டியில் பதிவான குறைந்தபட்ச ஸ்கோராக பதிவானது.
ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மிகக் குறைந்த ஸ்கோர்:
- 113 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை 2024 *
- 125/9 சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா 2013
- 128/6 ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஹைதராபாத் 2017
- 129/8 மும்பை இந்தியன்ஸ் vs ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் -ஹைதராபாத் 2017
ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் குறைந்தபட்ச முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள்:
ஆண்டு | அணிகள் | எதிரணி | ஸ்கோர் | வெற்றி பெற்ற அணி |
---|---|---|---|---|
2024 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 113 | இனிமேல்தான் முடிவு |
2017 | மும்பை இந்தியன்ஸ் | ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் | 129/8 | மும்பை வெற்றி |
2022 | ராஜஸ்தான் ராயல்ஸ் | குஜராத் டைட்டன்ஸ் | 130/9 | குஜராத் வெற்றி |
2009 | டெக்கான் சார்ஜர்ஸ் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 143/6 | டெக்கான் வெற்றி |
2013 | மும்பை இந்தியன்ஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ் | 148/9 | மும்பை வெற்றி |
2019 | மும்பை இந்தியன்ஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ் | 149/8 | மும்பை வெற்றி |
2020 | டெல்லி கேப்பிடல்ஸ் | மும்பை இந்தியன்ஸ் | 156/7 | மும்பை வெற்றி |
2008 | சென்னை சூப்பர் கிங்ஸ் | ராஜஸ்தான் ராயல்ஸ் | 163/5 | ராஜஸ்தான் வெற்றி |
2010 | சென்னை சூப்பர் கிங்ஸ் | மும்பை இந்தியன்ஸ் | 168/5 | சென்னை வெற்றி |
2018 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | சென்னை சூப்பர் கிங்ஸ் | 178/6 | சென்னை வெற்றி |
2012 | சென்னை சூப்பர் கிங்ஸ் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 190/3 | கொல்கத்தா வெற்றி |
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் 2024ல் சீசனில் 287 ரன்களை அடித்த அதிகபட்ச ஸ்கோரையும், 113 ரன்களை அடித்து குறைந்தபட்ச ஸ்கோரையும் பதிவு செய்துள்ளது.