RCB vs RR LIVE Score: குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான்; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB தோல்வி!
IPL 2024 Eliminator RCB vs RR LIVE Score Updates: பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் எலிமினேட்டர் சுற்று குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் உடனுக்குடன் காணலாம்.
ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதனால் ராஜஸ்தான் அணி சென்னையில் நடைபெறவுள்ள குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணி பெற்றதால் நடப்புத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
ஹெட்மயர் தனது விக்கெட்டினை 18வது ஓவரின் கடைசி பந்தில் இழந்து வெளியேறினார்.
ஆட்டத்தின் 18வது ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த ரியான் ப்ராக் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவரது விக்கெட்டினை முகமது சிராஜ் கைப்பற்றினார்.
15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. ராஜஸ்தான் அணிக்கு கடைசி 5 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்படுகின்றது.
மிகவும் நெருக்கடியான நிலையில் துருவ் ஜுரேல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரை விராட் கோலி மற்றும் கேமரூன் க்ரீன் ரன் அவுட் செய்தனர்.
12 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்துள்ளது. அடுத்த 8 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்தால் ராஜஸ்தான் வெற்றி பெறும்.
11.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ராஜஸ்தான் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டினை ஸ்டம்பிங் முறையில் இழந்து வெளியேறினார்.
10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 85 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. ராஜஸ்தான் அணி அடுத்த 10 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது.
ஆட்டத்தின் 10வது ஓவரில் ஜெய்ஸ்வால் 30 பந்தில் 45 ரன்கள் சேர்த்து கேமரூன் க்ரீன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
9 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை மட்டும் இழந்து 80 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 74 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 12 ஓவர்களில் 99 ரன்கள் தேவைப்படுகின்றது.
7 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 64 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றது.
6.1 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 53 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 47 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் 6வது ஓவரில் டாம் ஹோக்லர் ஃபர்குசன் ஓவரில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. கடைசி மூன்று ஓவர்களில் மட்டும் 39 ரன்கள் குவித்துள்ளனர்.
4 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் சேர்த்தது.
ஆட்டத்தின் 19வது ஓவரில் லோம்ரோர் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 17 பந்தில் 32 ரன்னில் வெளியேறினார்.
19வது ஓவரின் இரண்டாவது பந்தில் தினேஷ் கார்த்திக் தனது விக்கெட்ட்டினை இழந்து வெளியேறினார். இவர் 13 பந்தில் 11 ரன்கள் சேர்த்தார்.
18 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
17.2 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்து விளையாடி வருகின்றது.
17 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
16 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. களத்தில் லோம்ரோர் மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளனர்.
15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
22 பந்தில் 34 ரன்கள் சேர்த்த நிலையில் படிதார் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை ஆவேஷ் கான் கைப்பற்றினார்.
14 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13.1 ஓவரில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13வது ஓவரில் பெங்களூரு அணியின் க்ரீன் மற்றும் மேக்ஸ்வெல் தங்களது விக்கெட்டினை அஸ்வின் பந்தில் இழந்து வெளியேறினர்.
கேமரூன் க்ரீன் 21 பந்தில் 27 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இவரது விக்கெட்டினை அஸ்வின் கைப்பற்றினார்.
பெங்களூரு அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது. 11வது ஓவரில் படிதார் கொடுத்த கேட்ச் வாய்ப்பினை ராஜஸ்தான் வீணடித்தது.
10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் சேர்த்துள்ளது.
விராட் கோலி தனது விக்கெட்டினை 24 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்த நிலையில் சஹால் பந்தில் வெளியேறினார்.
7 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 56 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
பவர்ப்ளேவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 50 ரன்கள் சேர்த்திருந்தது.
ஐபிஎல் தொடரில் விராட் கோலி 8000 ஆயிரம் ரன்களைக் குவித்துள்ளார். போல்ட் பவர்ப்ளேவில் மூன்று ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
5 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 37 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த டூ ப்ளெசிஸ் தனது விக்கெட்டினை ஆட்டத்தின் 5வது ஓவரில் இழந்து வெளியேறினார்.
பெங்களூரு அணி 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. இந்த ஓவரில் பெங்களூரு 17 ரன்கள் சேர்த்தது.
ஆட்டத்தின் 4வது ஓவரை வீசிக்கொண்டு இருக்கும் ஆவேஷ் கானை அவர் வீசிய முதல் பந்தினை விராட் கோலி சிக்ஸருக்கு விளாசினார்.
மூன்று ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி அணியின் ஸ்கோரை 14 ரன்களாக உயர்த்தியது பெங்களூரு.
ஆட்டத்தின் முதல் பவுணரியை இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் விரட்டினார் விராட் கோலி.
முதல் ஒவரை அட்டகாசமாக வீசிய போல்ட் அந்த ஓவரில் இரண்டு ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.
பெங்களூரு அணியின் இன்னிங்ஸை வழக்கம்போல் விராட் கோலி மற்றும் டூ ப்ளெசிஸ் தொடங்கியுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோலர்-காட்மோர், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, யாஷ் தயாள், முகமது சிராஜ், லாக்கி பெர்குசன்
எலிமினேட்டர் சுற்றில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் செய்யவுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் அணியும் அகமதபாத் மைதானத்தில் மோதவுள்ளது.
Background
நடப்பு ஐபிஎல் 2024 சீசனானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சீசனின் எலிமினேட்டர் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத இருக்கிறது. இந்த போட்டிய்ல் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி வரும் வெள்ளிக்கிழமை குவாலிஃபையர் 2ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கும். தோற்கும் அணி நடப்பு ஐபிஎல்லில் இருந்து வெளியேறும்.
இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஸ்டேடியம் இரு அணிக்கும் சொந்த ஸ்டேடியம் இல்லை. நடுநிலையான ஸ்டேடியமாக உள்ளது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் முடிவு இல்லாமல் போயுள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தின் ஆடுகளம் பேட்டிற்கு சாதகமான பிட்சாக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஐபிஎல் சீசன்களில் இங்கு அதிக ஸ்கோர்கள் குவிக்கப்பட்டுள்ளன. எனவே, இன்றைய ஆர்சிபி - ஆர்ஆர் இடையிலான எலிமினேட்டர் சுற்றில் 180க்கும் அதிகமான ரன்கள் பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் சீசனில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அதிகபட்சமாக 231 ரன்கள் குவித்துள்ளனர். இந்த ஆடுகளத்தில் சராசரி ஸ்கோர் 173 ரன்கள் ஆகும். மேலும், இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களும் விக்கெட்களை வீழ்த்தவும் வாய்ப்புள்ளது.
டாஸ் வெல்லும் அணி என்ன தேர்வு செய்ய வேண்டும் முதலில்..?
ஐபிஎல் 2024ன் மொத்தம் 6 போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றுள்ளது. இதில், 6 போட்டிகளில் இலக்கை விரட்டிய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்ய வந்த அந்த அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், முதல் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், யாஷ் தயாள், கர்ண் சர்மா, லாக்கி பெர்குசன், முகமது சிராஜ்.
இம்பாக்ட் பிளேயர் - ஸ்வப்னில் சிங்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர்-காட்மோர், ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
இம்பாக்ட் பிளேயர் - டி. ஃபெரீரா.
புள்ளிப்பட்டியலில் இரு அணிகளும் எந்த இடத்தில்..?
ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4வது இடத்திலும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3வது இடத்தில் இருக்கிறது. எனவே, இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது என்று பார்ப்போம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -