டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்த சீசனின் முதல் வெற்றியைப் பெற்றது.


12 லட்சம் ரூபாய் அபராதம்:


டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


விசாகப்பட்டினத்தின் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ.-வி.டி.சி.ஏ. கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்த சீசனின் முதல் வெற்றியைப் பெற்றது.


இந்தநிலையில், நேற்று ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காததால், அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 






ரிஷப் பண்ட்க்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து ஐபிஎல் நிர்வாகம் தெரிவிக்கையில், "மார்ச் மாதம் விசாகப்பட்டினம் டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான டாடா இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 போட்டியின் போது டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி போட்டியை முடிக்காததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


குறைந்தபட்ச ஓவர் ரேட் குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின்படி இந்த சீசனில் அவரது அணி செய்த முதல் குற்றமாக இது என்பதால், பன்ட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது” என தெரிவித்திருந்தது. 


மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ரிஷப் பண்ட்:


கடந்த பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறைந்த ரன்களில் அவுட்டான ரிஷப் பண்ட் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ஆக்ரோஷமான இன்னிங்ஸை விளையாடி பார்முக்கு திரும்பினார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் சிறப்பான அடித்தளத்தை பின்னாடி வந்த பண்ட் பட்டையை கிளப்பினார். 


வெறும் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 51 ரன்களை விளாசிய பண்ட், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எட்ட செய்தார். 






ஐபிஎல் நிர்வாகம்அபராதம் விதித்தபோதிலும், விபத்திற்கு பிறகு ரிஷப் பண்ட் ஃபார்மிற்கு திரும்பியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தருணத்தை கொடுத்தது. மேலும், இவரது தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


டெல்லி கேப்பிடல்ஸ் அணி அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஏப்ரல் 3ஆம் தேதி சந்திக்கிறது.