DC vs SRH LIVE Score: வெற்றி முனைப்பில் ஹைதராபாத்; கடைசி நேரத்தில் சொதப்பும் டெல்லி!
IPL 2024 DC vs SRH LIVE Score Updates: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அசத்தாலக பந்து வீசி நடராஜன் ஒரே ஓவரில் மூன்று விகெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
அன்ரிச் நார்ட்ஜே டக் அவுட் முறையில் வெளியேறினார்.
6 ரன்கள் மட்டுமே எடுத்து அக்ஸர் படேல் விக்கெட்டை பறிகொடுத்தார். இவரது விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார்.
18 ஓவர்கள் முடிந்த நிலையில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது டெல்லி அணி.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி அணி 179 ரன்கள் எடுத்துள்ளது.
49 பந்துகளுக்கு பின்னர் டெல்லி அணி சிக்ஸர் அடித்துள்ளது.
லலித் யாதவ் 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
14 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி அணி 157 ரன்கள் எடுத்துள்ளது 5 விக்கெட் இழப்பிற்கு.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
12 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
11 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அபிஷேக் போரல் 42 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களை குவித்துள்ளது.
அதிரடியாக விளையாடி வந்த டெல்லி அணி வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 18 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் என மொத்தம் 65 ரன்கள் எடுத்தார்.
இந்த சீசனில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி அணி 88 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.
ப்ரேஸர் - மெக்கர்க் , போரல் ஜோடி அதிரடியாக விளையாடி டெல்லி அணிக்கு ரன்களை சேர்த்துவருகின்றனர்.
4 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது டெல்லி அணி.
மெகா இலக்கை நோக்கி களம் இறங்கிய டெல்லி அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்கிறது.
20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது.
19 ஓவர்கள் முடிந்த நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 250 ரன்கள் எடுத்துள்ளது.
18 ஓவர்கள் முடிந்த நிலையில் ஹைதராபாத் அணி 230 ரன்களுடன் விளையாடி வருகிறது.
அதிரடியாக விளையாடி வந்த நிதிஷ் ரெட்டி 37 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.
14 ஓவர்கள் முடிந்த நிலையில் 194 ரன்களுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
12 ஓவர்கள் முடிந்த நிலையில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.
11 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 162 ரன்கள் எடுத்துள்ளது.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணியின் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தி உள்ளார்.
ஹைதராபாத் அணி வீரார் கிளாசென் அக்ஸர் படேல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதிரடியாக விளையாடி வந்த ட்ராவிஸ் ஹெட் குல்தீப் யாதவின் மாயாஜால சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
8.4 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 151 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 138 ரன்கள் எடுத்துள்ளது.
7 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.
குல்தீப் யாதவின் அசத்தல் பந்து வீச்சில் மார்க்ரம் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி ஹைதராபாத் அணி 125 ரன்களை குவித்துள்ளது.
ட்ராவிஸ் ஹெட் அடுத்தடுத்து பவுண்டரி விளாசி வருகிறார்.
ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேகமாக 100 ரன்களை கடந்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது ஹைதராபாத் அணி.
ட்ராவிஸ் ஹெட் அதிவேக அரைசதம் விளாசி இருக்கிறார்.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்துள்ளது. அந்தவகையில் ட்ராவிஸ் ஹெட் 61 ரன்களும் , அபிஷேக் சர்மா 21 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.
ட்ராவிஸ் ஹெட் வெறும் 16 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார். அந்தவகையில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 52 ரன்கள் எடுத்துள்ளார்.
16 பந்துகளில் அரைசதம் கடந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி ஹைதராபாத் அணி 40 ரன்கள் எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் அடுத்தடுத்து சிக்ஸர் விளாசி வருகிறார்.
முதல் ஓவர் முடிந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.
கலீல் அகமது வீசிய முதல் ஓவரை ட்ராவிஸ் ஹெட் நொறுக்கி வருகிறார்.
கலீல் அகமது வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் பறக்க விட்டார் ட்ராவிஸ் ஹெட்.
டெல்லி அணியின் பந்து வீச்சாளர் கலீல் அகமது முதல் ஓவரை வீசி வருகிறார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கியுள்ளனர்.
காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடமல் இருந்து டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் இன்றைய போட்டியில் களம் இறங்குகிறார்.
கடந்த 18 மாதங்களுக்கு பின்னர் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் அருண் ஜெட்லி மைதானத்தில் களம் இறங்கியுள்ளார்.
அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர் ), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.
டேவிட் வார்னர், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ரிஷப் பண்ட் (w/c), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
Background
ஐபிஎல் தொடர் 2024:
ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 35 வது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 20) நடைபெறுகிறது. இதில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகளில் மற்ற அணிகள் எல்லாம் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடிய சூழலில் இன்றைய போட்டியில் டெல்லி அணி முதல் முறையாக தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது.
டெல்லி - ஹைதராபாத்:
முன்னதாக ஐ.பி.எல் வரலாற்றில் அருண் ஜெட்லி மைதானத்தில் 85 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 38 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 46 முறை இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 23 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், அதிகபட்சமாக ஹைதராபாத் அணி 12 போட்டிகளிலும், டெல்லி அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக 207 ரன்கள் உள்ளது. அதேநேரத்தில், டெல்லி அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 219 ரன்களை குவித்துள்ளது.
புள்ளிப்பட்டியலில் இரு அணிகளும் எப்படி..?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் 4 வெற்றி மற்றும் 2 இல் தோல்வியடைந்துள்ளது. அந்த அணி 8 புள்ளிகளுடன் தற்போது புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று 4ல் தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி மொத்தம் 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்):
அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.
டெல்லி கேப்பிடல்ஸ் (பிளேயிங் லெவன்):
டேவிட் வார்னர், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் - கேப்டன்) , டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -