ஐ.பி.எல் சீசன் 17:


ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 20) நடைபெறும் 35 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. அந்த வகையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. 


பிட்ச் ரிப்போர்ட்:


டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தை பொறுத்தவரை  மெதுவான பிட்சாக இருக்கிறது.  இங்கு ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்துவீசலாம். இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறுவார்கள். ஸ்டேடியன் சிறியது என்பதால் இங்கு பவுண்டரிகளும், சிக்ஸர்களும் எளிதாக அடிக்கலாம். அதற்கு, பேட்ஸ்மேன்கள் அவசரமின்றி பொறுமையாக செட்டில் ஆகி, அதன்பின் ரன் வேட்டை தொடங்கலாம். 


ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மொத்தம் 85 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 38 வெற்றிகளையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 46 வெற்றிகளையும் பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 167 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 152 ரன்களாகவும் உள்ளது.


இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 


ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 23 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், அதிகபட்சமாக ஹைதராபாத் அணி 12 போட்டிகளிலும், டெல்லி அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக 207 ரன்கள் உள்ளது. அதேநேரத்தில், டெல்லி அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 219 ரன்களை குவித்துள்ளது. 


டாஸ் வென்ற டெல்லி அணி:


இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் தொடர்ந்து அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்றைய போட்டியிலும் அதிரடி பேட்டிங்கை தொடங்கும் முனைப்பில் இருக்கிறது.


 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்):


அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்),  அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.


 


டெல்லி கேப்பிடல்ஸ் (பிளேயிங் லெவன்):


டேவிட் வார்னர், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் - கேப்டன்) , டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்