DC vs MI LIVE Score: டெல்லியிடம் வீழ்ந்த மும்பை; 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி!

IPL 2024 DC vs MI LIVE Score Updates: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 27 Apr 2024 07:54 PM
DC vs MI LIVE Score: டெல்லியிடம் வீழ்ந்த மும்பை; 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி!

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் சேர்த்தது. இதனால் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

DC vs MI LIVE Score: 25 ரன்கள் தேவை!

மும்பை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்படுகின்றது. 

DC vs MI LIVE Score: டிம் டேவிட் அவுட்!

18வது ஓவரில் இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசிய டிம் டேவிட் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

DC vs MI LIVE Score: 200 ரன்களைக் கடந்த மும்பை!

17.2 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் சேர்த்து இலக்கை அடைய போராடி வருகின்றது. 

DC vs MI LIVE Score: 17 ஓவர்கள் முடிவில் மும்பை!

17 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. மும்பை வெற்றி பெற கடைசி மூன்று ஓவர்களில் 64 ரன்கள் தேவைப்படுகின்றது. 

DC vs MI LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs MI LIVE Score: 11 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs MI LIVE Score: 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்!

ஹர்திக் பாண்டியா - திலக்வர்மா கூட்டணி 24 பந்தில் 50 ரன்கள் சேர்த்து மும்பை அணியை இலக்கை நோக்கி மெதுவாக நகர்த்தி வருகின்றனர். 

DC vs MI LIVE Score: 10 ஓவர்கள் முடிந்தது!

10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs MI LIVE Score: மிரட்டிவிட்ட பாண்டியா!

ஆட்டத்தின் 9வது ஓவரில் பாண்டியா ஹாட்ரிக் பவுண்டரியுடன் ஒரு சிக்ஸர் விளாசி அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் குவிக்க காரணமானார். 

DC vs MI LIVE Score: 100 ரன்களைக் கடந்த மும்பை!

9 ஓவர்கள் முடிவில் மும்பை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs MI LIVE Score: 90களைத் தொட்ட மும்பை!

8.3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார். 

DC vs MI LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகின்றது. 

DC vs MI LIVE Score: சூர்யகுமார் யாதவ் அவுட்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டினை சுமாரான ஷாட் ஆடி வெளியேறினார். இவர் 13 பந்தில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

DC vs MI LIVE Score: 50 ரன்களை எட்டிய மும்பை!

5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் சேர்த்துள்ளது. 

DC vs MI LIVE Score: இஷான் கிஷன் அவுட்!

ஆட்டத்தின் 5வது ஓவரில் மும்பை அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் தனது விக்கெட்டினை, முகேஷ் குமார் வீசிய பந்தினை தூக்கி அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

DC vs MI LIVE Score: 50 ரன்களை நெருங்கும் மும்பை!

4 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 45 ரன்கள் சேர்த்து நிதானமாக இலக்கைத் துரத்தி வருகின்றது. 

DC vs MI LIVE Score: ரோகித் சர்மா அவுட்!

ரோகித் சர்மா தனது விக்கெட்டினை ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் இழந்து வெளியேறினார். 

DC vs MI LIVE Score: பந்து வீச்சில் சொதப்பிய மும்பை; ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடி 257 ரன்கள் குவித்த டெல்லி!

டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் சேர்த்தது. ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவாகியுள்ளது. 

DC vs MI LIVE Score: 240 ரன்களில் டெல்லி!

19 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் குவித்துள்ளது. 

DC vs MI LIVE Score: ரிஷப் பண்ட் அவுட்!

ஆட்டத்தின் 19வது ஓவரில் ரிஷப் பண்ட் தனது விக்கெட்டினை பும்ரா பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 19 பந்தில் 29 ரன்கள் சேர்த்தார். 

DC vs MI LIVE Score: 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்!

ரிஷப் பண்ட் மற்றும் ஸ்டப்ஸ் கூட்டணி 25 பந்தில் 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 DC vs MI LIVE Score: 200 ரன்களைக் கடந்த டெல்லி!

16.1 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி வருகின்றது. 

DC vs MI LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது. 

DC vs MI LIVE Score: ஷாய் ஹோப் அவுட்!

டெல்லி அணியின் ஒன் - டவுன் பேட்ஸ்மேன் ஷாய் ஹோப் 17 பந்தில் 41 ரன்கள் குவித்த நிலையில் தனது விக்கெட்டினை லூகி வுட் பந்தில் இழந்து வெளியேறினார். 

DC vs MI LIVE Score: 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்!

ரிஷப் பண்ட் மற்றும் ஷாய் கோப் கூட்டணி 21 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியது. 

DC vs MI LIVE Score: 150 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றது. 

DC vs MI LIVE Score: 150 ரன்களைக் கடந்த டெல்லி!

12 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 DC vs MI LIVE Score: 10 ஓவர்கள் முடிந்தது!

10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 DC vs MI LIVE Score: களமிறங்கிய ரிஷப் பண்ட்!

இரண்டாவது விக்கெட்டினை டெல்லி அணி இழந்ததால், களத்தில் நான்காவது வீரராக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கியுள்ளார். 

IPL 2024 DC vs MI LIVE Score: போரல் அவுட்!

டெல்லி அணியின் தொடக்க வீரர் அபிஷேக் போரல் தனது விக்கெட்டினை 27 பந்தில் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இவர் முகமது நபி பந்தில் ஸ்டெம்பிங் முறையில் தனது விக்கெட்டினை இழந்தார். 

IPL 2024 DC vs MI LIVE Score: நிதானமாக ஆடும் டெல்லி!

9வது ஓவரில் டெல்லி அணி 8 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 124 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 DC vs MI LIVE Score: 8 ஓவர்கள் முடிந்தது!

8 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 115 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2024 DC vs MI LIVE Score: மெக்கர்க் அவுட் - நிம்மதியில் மும்பை இந்தியன்ஸ்!

அதிரடியாக ரன்கள் குவித்துவந்த மெக்கர்க் தனது விக்கெட்டினை ப்யூஸ் சாவ்லா பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 27 பந்தில் 84 ரன்கள் சேர்த்தார். இவர் மொத்தம் 11 பவுண்டரியும் 6 சிக்ஸரும் விளாசி இருந்தார். 

IPL 2024 DC vs MI LIVE Score: 7 ஓவர்கள் முடிந்தது!

7 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 DC vs MI LIVE Score: 100 ரன்களைக் கடந்த டெல்லி

6.4 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 102 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 DC vs MI LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் சேர்த்துள்ளது. பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் மட்டும் டெல்லி அணியால் ஒரு பவுண்டரி கூட விளாசமுடியவில்லை. 

IPL 2024 DC vs MI LIVE Score: 90 ரன்களை நெருங்கிய டெல்லி!

5 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் குவித்துள்ளது. 

IPL 2024 DC vs MI LIVE Score: வேகமாக உயரும் ரன்ரேட்!

டெல்லி அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது. டெல்லி அணியின் தற்போதைய ரன்ரேட்17.25ஆக உள்ளது. 

IPL 2024 DC vs MI LIVE Score: அதிவேக அரைசதம் விளாசிய மெக்கர்க்!

டெல்லி அணியின் தொடக்க வீரர் மெக்கர்க் 15 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். இவர் 9 பவுண்டரி மூன்று சிக்ஸர் விளாசியுள்ளார். 

IPL 2024 DC vs MI LIVE Score: மூன்று ஓவர்கள் முடிந்தது!

மூன்று ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றது. 

IPL 2024 DC vs MI LIVE Score: அதிரடி அரைசதம் விளாசிய டெல்லி!

2.4 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றது. 

DC vs MI LIVE Score: வெறியோடு ஆட்டத்தை தொடங்கிய டெல்லி; சுக்குநூறாகும் மும்பை பவுலிங்!

இரண்டு ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் குவித்துள்ளது. 

IPL 2024 DC vs MI LIVE Score: அதிரடி முதல் ஓவர்!

முதல் ஓவர் முடிவில் டெல்லி அணி 19 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2024 DC vs MI LIVE Score: ஆரம்பமே பவுண்டரி மழை!

ஆட்டத்தின் முதல் மூன்று பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி மிரட்டலாக தொடங்கியுள்ளது. 

IPL 2024 DC vs MI LIVE Score: தொடங்கிய ஆட்டம்!

மும்பை அணிக்கு எதிராக டெல்லி அணி தனது பேட்டிங்கினைத் தொடங்கியுள்ளது. 

DC vs MI LIVE Score: மும்பையை பழி தீர்க்குமா டெல்லி கேப்பிடல்ஸ்? டாஸ் வென்ற மும்பை பந்து வீச முடிவு!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

Background

DC Vs MI, IPL 2024: மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகளும் தலா ஒருமுறை நேருக்கு நேர் சந்தித்து, தொடரின் பாதி போட்டிகள் முடிந்துள்ளன. தற்போது இரண்டாவது சுற்று லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடபெறும் நிலையில், முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும்  மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.


டெல்லி - மும்பை பலப்பரீட்சை:


டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. டெல்லி அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் நான்கில் வென்று, புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய போட்டியில் அதிரடியாக வென்ற டெல்லி அணி, இன்றைய போட்டியிலும் வென்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேற தீவிரம் காட்டுகிறது. அதோடு, நடப்பு தொடரில் ஏற்கனவே மும்பை அணியிடம் பெற்ற தோல்விக்கு, பழிவாங்கவும் டெல்லி களமிறங்குகிறது. அதேநேரம்,   மும்பை அணியோ விளையாடிய 8 போட்டிகளில் 3 வெற்ற்களுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இருப்பினும், நடப்பு தொடரில் ஏற்கனவே டெல்லி அணியை வீழ்த்திய உத்வேகத்தில் மும்பை அணி இன்று களமிறங்குகிறது.  எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது டெல்லி அணிக்கு பெரும் பலமாக உள்ளது. பிரித்வி ஷா, மெக்கார்க், ரிஷப் பண்ட் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அக்‌ஷர் படேலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தி வருகிறார். டேவிட் வார்னரும் ரன் சேர்க்க தொடங்கினால், டெல்லி அணி மேலும் வலுவாக திகழக் கூடும். மறுபுறம் மும்பை அணியில் ரோகித் சர்மா நடப்பாண்டில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஒரு போட்டியில் அடித்தால் மற்றொரு போட்டியில் சொதப்புகின்றனர். பந்துவீச்சிலும் பும்ராவை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குகின்றனர். இதனால், டெல்லி அணியை வீழ்த்த மும்பை அணி கடுமையாக போராட வேண்டி இருக்கும். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற, மீதமுள்ள போட்டிகளில் பெரும்பாலும் வெற்றி பெற வேண்டியது இரு அணிகளுக்கும் அவசியமாகும். 


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 34 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 19 முறையும், டெல்லி அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன.  மும்பை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் டெல்லி அணி அதிகபட்சமாக 213 ரன்களையும், குறைந்தபட்சமாக 66 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், டெல்லி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் மும்பை அணி அதிகபட்சமாக 234 ரன்களையும், குறைந்தபட்சமாக 92 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


மைதானம் எப்படி?


டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் உள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உதவியாக உள்ளது,  இருப்பினும், ஷார்ட் பவுண்டரிகள் பேட்ஸ்மேன்களுக்கு அதிரடியாக ரன்களை குவிக்க வாய்ப்பளிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு, டாஸ் வென்ற பிறகு முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுப்பது சிறந்த முடிவாக இருக்கும்.


உத்தேச அணி விவரங்கள்:


மும்பை: ரோகித் சர்மா, இஷான் கிஷான் , சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹால் வதேரா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரிட் பும்ரா


டெல்லி: பிருத்வி ஷா, ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், கலீல் அகமது, அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார்


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.