DC vs GT LIVE SCORE: 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்!

DC Vs GT, IPL 2024: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.

மு.வா.ஜெகதீஸ் குமார் Last Updated: 24 Apr 2024 11:20 PM
DC vs GT LIVE SCORE: டெல்லி கேபிடல்ஸ் வெற்றி!

4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.

DC vs GT LIVE SCORE: 19 ஓவர்கள் முடிந்தது!

19 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது.

DC vs GT LIVE SCORE: டேவிட் மில்லர் அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த டேவிட் மில்லர் 23 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 55 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

DC vs GT LIVE SCORE: 17 ஓவர்கள் முடிந்தது!

17 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

DC vs GT LIVE SCORE: ராகுல் தெவாடியா அவுட்!

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ராகுல் தெவாடியா 4 ரன்கள் மட்டுமே எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

DC vs GT LIVE SCORE: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.

DC vs GT LIVE SCORE: ஷாருக்கான் அவுட்!

8 ரன்கள் மட்டுமே எடுத்து ஷாருக்கான் விக்கெட்டை பறிகொடுத்தார். 

DC vs GT LIVE SCORE: 14 ஓவர்கள் முடிந்தது!

14 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் அணி 139 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

DC vs GT LIVE SCORE: 13 ஓவர்கள் முடிந்தது!

13 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்துள்ளது.

DC vs GT LIVE SCORE: சாய் சுதர்சன் அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த சாய் சுதர்சன் 39 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 65 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

DC vs GT LIVE SCORE: 12 ஓவர்கள் முடிந்தது!

12 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

DC vs GT LIVE SCORE: 11 ஓவர்கள் முடிந்தது!

11 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.

DC vs GT LIVE SCORE: சாய் சுதர்சன் அரைசதம்!

அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 29 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட அரைசதம் விளாசி இருக்கிறார்.

DC vs GT LIVE SCORE: அஸ்மத்துல்லா உமர்சாய் அவுட்!

அஸ்மத்துல்லா உமர்சாய் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

DC vs GT LIVE SCORE: விருத்திமான் சாஹா அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த விருத்திமான் சாஹா 39 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

DC vs GT LIVE SCORE: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

DC vs GT LIVE SCORE: 8 ஓவர்கள் முடிந்தது!

8 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 79 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. களத்தில் சாஹா 37 ரன்களுடனும், சாய் சுதர்சன் 34 ரன்களுடனும் உள்ளனர். 

DC vs GT LIVE SCORE: 75 ரன்களை எட்டிய குஜராத்!

7.2 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 75 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர். 

DC vs GT LIVE SCORE: 7 ஓவர்கள் முடிந்தது!

7 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 71 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs GT LIVE SCORE: இலக்கை வெறிகொண்டு துரத்தும் குஜராத் டைட்டன்ஸ்; கட்டுப்படுத்துமா டெல்லி!

பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 67 ரன்கள் சேர்த்துள்ளது. 

DC vs GT LIVE SCORE: முதல் ஓவர் முடிந்தது!

முதல் ஓவர் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 9 ரன்கள் எடுத்துள்ளது.

DC vs GT LIVE SCORE: பேட்டிங்கை தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ்!

225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி உள்ளது குஜராத் டைட்டனஸ் அணி. அந்த வகையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கி உள்ளனர்.

DC vs GT LIVE SCORE: கடைசி ஓவரில் சிக்ஸர்களை பறக்கவிட்ட கேப்டன் ரிஷப்; குஜராத்துக்கு 225 ரன்கள் இலக்கு!

கடைசி ஓவரில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஹாட்ரிக் சிக்ஸருடன் மொத்தம் 4 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி பறக்கவிட்டார். இறுதியில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் சேர்த்தது. 

DC vs GT LIVE SCORE: 200 ரன்களைக் கடந்த டெல்லி!

19.2 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs GT LIVE SCORE: அதிரடி காட்டும் ஸ்டப்ஸ்!

19வது ஓவரில் இரண்டு பவுண்டரி இரண்டு சிக்ஸர் என அதிரடி காட்டி வருகின்றார். 

DC vs GT LIVE SCORE: அரைசதம் விளாசிய ரிஷப் பண்ட்!

நெருக்கடியான சூழலில் களமிறங்கிய ரிஷப் பண்ட் 34 பந்தில் தனது அரைசதத்தினை எட்டி பொறுப்பாக விளையாடி வருகின்றார். 

DC vs GT LIVE SCORE: சொந்த மண்ணில் கெத்து காட்டும் டெல்லி; மிரட்டும் அக்‌ஷர் - ரிசப் கூட்டணி!

17 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்தது. 17வது ஓவரின் கடைசிப் பந்தில் அக்‌ஷர் பட்டேல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

DC vs GT LIVE SCORE: 16 ஓவர்கள் முடிந்தது!

16 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs GT LIVE SCORE: அக்‌ஷர் பட்டேல் அரைசதம்!

நெருக்கடியான சூழலில் களமிறங்கிய அக்சர் பட்டேல் 37 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டினார். 

DC vs GT LIVE SCORE: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் சேர்த்துள்ளது. 

DC vs GT LIVE SCORE: 120 ரன்களில் டெல்லி!

14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 120 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs GT LIVE SCORE: 111 ரன்களில் டெல்லி!

13 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs GT LIVE SCORE: ரிஷப் பண்ட் - அக்‌ஷர் பட்டேல் அட்டகாசமான பார்ட்னர்ஷிப்!

44 பந்துகளில் ரிஷப் பண்ட் மற்றும் அக்‌ஷர் பட்டேல் கூட்டணி 67 ரன்கள் சேர்த்து பொறுப்பாக விளையாடி வருகின்றது. 

DC vs GT LIVE SCORE: 12 ஓவர்கள் முடிந்தது!

12 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs GT LIVE SCORE: 100 ரன்களை எட்டிய டெல்லி!

நிதானமாகவும் அதேநேரத்தில் அதிரடியாகவும் விளையாடி வரும் டெல்லி அணி 11.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்துள்ளது. 

DC vs GT LIVE SCORE: அதிரடிக்கு கியரை மாற்றும் டெல்லி; கட்டுப்படுத்த போராடும் குஜராத்!

பவர்ப்ளேவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வந்த டெல்லி கேபிடல்ஸ், 11 ஓவர்கள் முடிவில் 93 ரன்கள் சேர்த்து சரிவில் இருந்து மீண்டு வருகின்றது. 

DC vs GT LIVE SCORE: 10 ஓவர்கள் முடிந்தது!

10 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது.

DC vs GT LIVE SCORE: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.

DC vs GT LIVE SCORE: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.

DC vs GT LIVE SCORE: 49 ரன்களில் டெல்லி!

7 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs GT LIVE SCORE: சுமாரான பவர்ப்ளே!

டெல்லி அணி பவர்ப்ளே முடிவில் மூன்றூ விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் சேர்த்து, மிகவும் சுமாராக பவர்ப்ளேவில் விளையாடியுள்ளது. 

DC vs GT LIVE SCORE: 5 ஓவர்கள் முடிந்தது!

5 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs GT LIVE SCORE: நூர் கையில் அகப்பட்ட ப்ரித்வி ஷா - அவுட்!

டெல்லி அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா ஆட்டத்தின் 4வது ஓவரிலேயே தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

DC vs GT LIVE SCORE: மெக்கர்கர்க் அவுட்!

டெல்லி அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மெக்கர்கர்க் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 14 பந்தில் 23 ரன்கள் சேர்த்தார். 

DC vs GT LIVE SCORE: சிறப்பான ரன்ரேட்!

மூன்று ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் சேர்த்து 11 ரன்கள் ரன்ரேட்டில் விளையாடி வருகின்றது. 

DC vs GT LIVE SCORE: 3 ஓவர்கள் முடிந்தது!

3 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 34 ரன்களை குவித்துள்ளது. களத்தில் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் மற்றும் ப்ரித்வி ஷா நிற்கின்றனர்.

DC vs GT LIVE SCORE: இரண்டு ஓவர்கள் முடிந்தது!

இரண்டு ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

DC vs GT LIVE SCORE: நிதான தொடக்கத்தில் டெல்லி!

குஜராத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் அணி நிதான ஆட்டத்தையே தொடங்கியுள்ளது. 

Background

ஐ.பி.எல் சீசன் 17:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே 39 லீக் போட்டிகள் நடைபெற்ற முடிந்துள்ள நிலையில்  இன்று ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.


டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்:


டெல்லி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் மூன்றில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவது கட்டாயம். நடப்பு தொடரில் ஏற்கனவே குஜாராத் உடன் மோதிய போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. அதே உத்வேகத்தில் இன்றைய போட்டியிலும் அந்த அணி களமிறங்கி உள்ளது.


குஜராத் அணியோ இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் நான்கில் வென்று, புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் நீடிக்கிறது. தொடர் வெற்றிகளை பெற முடியாமல் அந்த அணி தடுமாறி வருகிறது. பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவது  இந்த அணிக்கும் கட்டாயம்.


நடப்பு தொடரில் டெல்லிகு எதிரான முதல் போட்டியில் 17.3 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே எடுத்து குஜராத் டைட்டன்ஸ் மோசமான தோல்வியை பதிவு செய்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் நிச்சயம் டெல்லி அணியை வீழ்த்தும் முனைப்பில் களம் இறங்குவதால் போட்டி விறுவிறுப்புடன் இருக்கும்.  


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் குஜராத் மற்றும் டெல்லி தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. குஜராத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் டெல்லி அணி அதிகபட்சமாக 162 ரன்களையும், குறைந்தபட்சமாக 92 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், டெல்லி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் குஜராத் அணி அதிகபட்சமாக 171 ரன்களையும், குறைந்தபட்சமாக 89 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


டெல்லி கேபிடல்ஸ் (பிளேயிங் லெவன்): 


பிருத்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர் - கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்



குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்): 



விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர் ), சுப்மான் கில்(கேப்டன்), டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, மோகித் சர்மா, சந்தீப் வாரியர்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.