CSK vs SRH LIVE Score: சென்னையை வீழ்த்திய ஹைதராபாத்; புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேற்றம்!
IPL 2024 CSK vs SRH LIVE Score Updates: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
கடைசி மூன்று ஓவர்களில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இறுதியில் ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
15 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்துள்ளது.
அரைசதம் கடந்ததும் அடுத்த பந்தில் தனது விக்கெட்டினை மார்க்ரம் இழந்து வெளியேறினார்.
35 பந்தில் தனது ஐந்தாவது அரைசதத்தினை விளாசினார் மார்க்ரம்.
12 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட்டினை இழந்து 112 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்க வீரர் ஹெட் 24 பந்தில் 31 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை தீக்ஷனா பந்தில் இழந்து வெள்யேறினார்.
மார்க்ரம் - ஹெட் கூட்டணி 39 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்துள்ளனர்.
9 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 101 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8.4 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 98 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 90 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது. ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 84 பந்துகளில் 88 ரன்கள் தேவை என்ற நிலையில் விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 64 ரன்கள் சேர்த்துள்ளது.
ஹைதராபாத் அணி 4 ஓவரிகள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 57 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணி 3.3 ஓவர்கள் முடிவில் 51 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதரபாத் அணி 3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 46 ரன்கள் சேர்த்துள்ளது.
சிக்ஸர் மன்னன் அபிஷேக் சர்மா 12 பந்தில் 37 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இவர் மூன்று பவுண்டரி நான்கு சிக்ஸர் விளாசினார்.
போட்டியின் இரண்டாவது ஓவரில் அபிஷேக் சர்மா 26 ரன்கள் குவித்தார். இரண்டு ஓவர்களில் ஹைதராபாத் அணி 35 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 8 ரன்கள் சேர்த்துள்ளது.
ஹைதராபாத் அணியின் இம்பேக்ட் ப்ளேயராக ஹெட் களமிறங்கியுள்ளார். நடராஜன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
166 ரன்கள் இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது.
20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் ஹைதராபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
19 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 152 ரன்கள் சேர்த்துள்ளது.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹானே 35 ரன்களில் அவுட்டானார்.
அதிரடியாக விளையாடி வந்த ஷிவம் துபே விக்கெட்டை பறிகொடுத்தார். 24 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 45 ரன்கள் விளாசினார்.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.
12 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 105 ரன்களை எடுத்து விளையாடிவருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. களத்தில் ஷிவம் துபே மற்றும் ரஹானே ஆடிவருகின்றனர்.
10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டினை இழந்து 80 ரன்கள் சேர்த்துள்ளது. ஷிவம் துபே இதுவரை 10 பந்துகளைச் சந்தித்து இரண்டு பவுண்டரி இரண்டு சிக்ஸர் விளாசி 25 ரன்கள் குவித்துள்ளார்.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் தனது விக்கெட்டினை 21 பந்தில் 26 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
சென்னை அணி சிறப்பாக விளையாடி 7வது ஓவரின் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 54 ரன்கள் சேர்த்துள்ளது.
பவர்ப்ளே முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 48 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 33 ரன்கள் சேர்த்துள்ளது.
5வது ஓவரின் இரண்டாவது பந்தினை சிக்ஸருக்கு விரட்டி இந்த போட்டியின் சிக்ஸர் கணக்கைத் தொடங்கியுள்ளார் ரஹானே.
4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 26 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக பவுண்டரி விளாசி வந்த ரச்சின் ரவீந்திரா தனது விக்கெட்டினை 12 ரன்களில் புவனேஷ்வர் பந்தில் இழந்து வெளியேறினார்.
மூன்று ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்துள்ளது.
இரண்டு ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஓவரில் விக்கெட்டினை இழக்காமல் 7 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் முதல் பவுண்டரியை முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ரச்சின் ரவீந்திரா விளாசியுள்ளார்.
ஹைதரபாத் அணிக்கு எதிராக சென்னை அணி தனது பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): அபிஷேக் சர்மா, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(கேப்டன்), ஜெய்தேவ் உனட்கட், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பத்திரானா காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
உலகம் முழுவதும் நடைபெறும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் அதிக மக்களால் பார்க்கப்படும் லீக் போட்டி அதிக பணம் புழங்கும் லீக் போட்டி என்றால் அது ஐபிஎல் மட்டும் தான். கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டியின் லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று அதாவது ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது.
இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வியும் இரண்டு வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி தனது கடைசி போட்டியை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடி தோல்வியைச் சந்தித்திருந்தது. அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகளும் சென்னை அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் விளையாடியது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியை விசாகப்பட்டினத்தில் விளையாடியது. இந்நிலையில் சென்னை அணி இன்று ஹைதராபாத் அணிக்கு சொந்தமான மைதானமான ராஜீவ்காந்தி மைதானத்தில் விளையாடவுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் மூன்று லீக் போட்டிகளில் விளையாடி இரண்டு தோல்விகளைச் சந்தித்து, ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இதுவரை 19 முறை ஐபிஎல் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 14 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்தாண்டு நடந்த போட்டியில் சென்னை அணியே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
ராஜீவ் காந்தி மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்ற மைதானமாக இருக்கும். நடப்பு சீசனில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 277 ரன்களையும், இரண்டாவதாக பேட் செய்த மும்பை அணி 246 ரன்களையும் குவித்தது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த களத்தில் இன்றைக்கு ஒரு விருந்து ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. சொந்த மைதானத்தில் விளையாடுவது ஹைதராபாத் அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -