CSK vs RCB LIVE Score, IPL 2024: வெற்றியோடு தொடங்கிய சென்னை; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி அசத்தல்
CSK vs RCB LIVE Score, IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளையும் சுவாரஸ்யமான தகவல்களையும் ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
சென்னை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டினை இழந்து 150 ரன்களை எட்டியுள்ளது.
15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
14 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
18 பந்தில் 22 ரன்கள் சேர்த்த டேரில் மிட்ஷெல் தனது விக்கெட்டினை கிரீன் பந்தில் இழந்து வெளியேறினார்.
10.3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 100 ரன்களை எட்டியது.
சிறப்பாக விளையாடி வந்த ரஹானே தனது விக்கெட்டினை 27 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார்.
10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் சேர்த்துள்ளது.
ரச்சின் ரவிந்திரா 15 பந்தில் 37 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார்.
6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 62 ரன்கள் சேர்த்துள்ளது.
ரஹானே 6வது ஓவரில் அடித்த சிக்ஸர் மூலம் பெங்களூரு அணி 55 ரன்களை எட்டியுள்ளது.
5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது விக்கெட்டினை 15 ரன்களில் யாஷ் தயால் பந்தில் இழந்தார்.
மூன்று ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்துள்ளது.
இரண்டு ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் சேர்த்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் முதல் பந்தினை பவுண்டரிக்கு விளாசி தனது கேப்டன் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.
174 ரன்களை நோக்கி சென்னை அணி களமிறங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்துள்ளது.
19 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்துள்ளது.
18வது ஓவரில் பெங்களூரு அணி மூன்று சிக்ஸர்கள் விளாசியுள்ளது. 18 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் குவித்துள்ளது.
16 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 5 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது.
5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வரும் பெங்களூரு 14 ஓவர்கள் முடிவில் 90 ரன்கள் சேர்த்துள்ளது.
13 ஓவர்கள் முடிந்து நிலையில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் சேர்த்துள்ளது.
பெங்களூரு அணி 12 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த கேமரூன் கிரீன் தனது விக்கெட்டினை 22 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் முஸ்தபிகுர் பந்தில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலி தனது விக்கெட்டினை 20 பந்தில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
10 ஓவர்கள் முடிந்த போது பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்த சீசனின் முதல் சிக்ஸரை விராட் கோலி விளாசியுள்ளார்.
9 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் சேர்த்துள்ளது.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி 12 ஆயிரத்து மூன்று ரன்கள் சேர்த்துள்ளார்.
பெங்களூரு அணி 7.3 ஓவர்களில் 3 விக்கெட்டினை இழந்து 51 ரன்கள் சேர்த்துள்ளது.
பவர்ப்ளே முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் சேர்த்துள்ளது.
மேக்ஸ்வெல் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் தீபக் சஹார் பந்தில் இழந்து வெளியேறினார்.
ரஜித் படிதார் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் இழந்தார்.
பிளெசிஸ் 23 பந்தில் 35 ரன்கள் விளாசி தனது விக்கெட்டினை முஸ்தபிகுர் பந்தில் இழந்து வெளியேறினார்.
பெங்களூரு அணி 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்று ஓவர்களில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் சேர்த்துள்ளது.
டூ பிளெசிஸ் சிறப்பாக பவுண்டரிகளை விளாசி வருகின்றார். மூன்றாவது ஓவரில் இதுவரை 3 பவுண்டரி விளாசியுள்ளார்.
இரண்டாவது ஓவர் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவரில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்த சீசனின் முதல் பவுண்டரியை ஃபாப் டூ பிளெசிஸ் விளாசியுள்ளார்.
சென்னை அணி தனது முதல் பந்தினை வைய்டாக வீசியுள்ளார்.
சென்னை அணியின் தீபக் சஹார் முதல் ஓவரை வீசுகின்றார்.
பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இரு அணி வீரர்களும் களத்திற்கு வந்துவிட்டதால் தேசிய கீதம் பாடப்படுகின்றது.
பிளேயிங் லெவன்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), கர்ன் சர்மா, அல்சாரி ஜோசப், மயங்க் டகர், முகமது சிராஜ்
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே
நான் சென்னை அணியின் கேப்டனானது எனது பாக்கியமாகப் பார்க்கின்றேன். கடந்த வாரம்தான் அணி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து இதைச் சொன்னார்கள், ஆனால் தோனி கடந்த ஆண்டே சொல்லி இருந்தார் என ருதுராஜ் தெரிவித்தார்.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
விராட் கோலி களத்திற்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காணப்படுகின்றனர்.
போட்டிக்கு முன்னதாக தோனி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
தோனி சரியாக 295 நாட்களுக்குப் பின்னர் கிரிக்கெட் விளையாடவுள்ளார். இதற்காகத்தான் அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெசிஸும் களத்திற்கு வந்துள்ளனர்.
இந்தியா இதுவரை படைத்த சாதனைகளை ஐபிஎல் தொடக்க விழாவில் பட்டியலிட்டு அதற்கு பெருமை சேர்த்துவருகின்றனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் இசைப்புயல் ரகுமான் பாடல் பாடி ரசிகர்களை ஆரவாரப்படுத்தி வருகின்றார்.
சேப்பாக்கம் மைதானத்தில் ரகுமான் பாடி வருகின்றார்.
சேப்பாக்கம் மைதானத்தில் பாலிவுட் பாடகர் சோனு நிகம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றார்.
சென்னை சேப்பாக்கம் மைதானம் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து வருகின்றது.
தொடக்க விழாவிற்கு தேசியக் கொடியுடன் அக்ஷய் குமார் ஆகாயத்தில் இருந்து மைதானத்திற்கு வந்தார்.
அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் திருவிழா தொடங்கியது.
பெங்களூரு அணி இம்முறை கோப்பையை வெல்லும் என பெங்களூரு மகளிர் அணியின் வீரர் எல்லீஸ் பெர்ரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு அணி இம்முறை கோப்பையை வெல்லும் என பெங்களூரு மகளிர் அணியின் வீரர் எல்லீஸ் பெர்ரி தெரிவித்துள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் ஐ.பி.எல் முதல் போட்டியைக்காண சென்னை சேப்பாக்கம் மைதானம் நோக்கி ரசிகர்கள் படை எடுத்து வருகின்றனர்.
Background
இந்தியன் பிரிமியர் லீக்கின் 17வது சீசன் இன்று முதல் தொடங்குகின்றது. முதல் போட்டியில் ஐந்து முறை கோப்பையை வென்று நடப்புச் சாம்பியனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
17வது சீசனின் முதல் போட்டி இது என்பதால் தொடக்க விழாவுடன் இந்த சீசன் மிகவும் கோலாகளமாக தொடங்கவுள்ளது. குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி தொடக்க விழாவில் இடம் பெற்றுள்ளது. நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர் பட்டாளம் கோடிக்கணக்கில் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டனாக இருந்த தோனிதான். வயது மூப்பு காரணமாக தோனி இந்த சீசனுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில், தோனியிடம் இருந்த கேப்டன் பொறுப்பு சென்னை அணியின் இளம் தொடக்க வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் வசம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தோனி ரசிகர்களுக்கு வருத்தத்தினைக் கொடுத்தாலும், தோனி ரசிகர்கள் அனைவரும் ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மட்டும் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது. சென்னையும் பெங்களூரும் சேப்பாக்கத்தில் 8 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளது. இதில் சென்னை 7 போட்டிகளிலும், பெங்களூரு 1 போட்டியிலும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் சென்னை அணியின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்துள்ளது.
சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி இந்த சீசனில் ஒரு வீரராக களமிறங்குகின்றார் என்பதால் தோனி விக்கெட் கீப்பிங் செய்வாரா அல்லது இம்பேக்ட் ப்ளேயர் விதியைப் பயன்படுத்தி பேட்டிங் மட்டும் செய்வாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.
சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகள் வைத்துள்ள ரசிகர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவசமாக பயணிக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி ரசிகர்கள் இலவசமாக போட்டி நடைபெறும் தினத்தில் பேருந்துகளில் பயணம் செய்துகொள்ளலாம்.
17வது ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியைப் பெற இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம். இந்த மைதானத்தில் சேஸ் செய்வது சிரமம் என்பதால் இரு அணிகளும் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யத்தான் முடிவு செய்யும் என எதிர்பார்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -