CSK vs PBKS LIVE Score: எடுபடாத சென்னை பவுலிங்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!
IPL 2024 CSK vs PBKS LIVE Score: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
சென்னை அணி பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியது.
16.4 ஓவர்களில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ஆட்டத்தின் 15வது ஓவரில் ஒரு ரன்கூட கொடுக்காமல் சிறப்பாக பந்து வீசி பஞ்சாப் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார்.
சிறப்பாக விளையாடி வந்த ரூஸோ 23 பந்தில் 43 ரன்கள் சேர்த்து ஷர்துல் தாக்கூர் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
ஆட்டத்தின் 12வது ஓவரின் முதல் பந்தில் பஞ்சாப் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எட்டியுள்ளது.
11 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்து சிறப்பாக இலக்கைத் துரத்தி வருகின்றது.
பஞ்சாப் அணி 9.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை எட்டியுள்ளது.
சிவம் துபே வீசிய ஆட்டத்தின் 10வது ஓவரில் பேர்ஸ்டோவ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 30 பந்தில் 46 ரன்கள் சேர்த்திருந்தார்.
8 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 73 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது. பஞ்சாப் வெற்றி பெற 12 ஓவர்களில் 90 ரன்கள் தேவைப்படுகின்றது.
7 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 62 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரப்சிம்ரன் தனது விக்கெட்டினை ஆட்டத்தின் 4வது ஓவரின் முதல் பந்தில் இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை க்ளீசன் கைப்பற்றினார்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் சேர்த்தது. இதனால் பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொயின் அலி ஆட்டத்தின் 19வது ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
48 பந்துகளில் சென்னை அணியின் கேப்டன் 62 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
17 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் 44 பந்தில் 55 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார்.
சென்னை அணியின் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய ரிஸ்வி தனது விக்கெட்டினை 16வது ஓவரை வீசிய ரபாடா பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 23 பந்தில் 21 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
14 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. கெய்க்வாட் 33 பந்தில் 36 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றார்.
12 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆட்டத்தின் 10வது ஓவரில் ஜடேஜா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 4 பந்தில் இரண்டு ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் சஹார் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
சென்னை அணியின் ஆஸ்தான பேட்ஸ்மேன்களில் ஒருவரான சிவம் துபே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இவரது விக்கெட்டினை ஹர்ப்ரீத் பிரார் கைப்பற்றினர்.
சென்னை அணி சார்பாக மூன்றாவது வீரராக சிவம் துபே களமிறங்கியுள்ளார்.
24 பந்தில் 29 ரன்கள் சேர்த்த ரஹானே ஹர்ப்ரீத் பிரார் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். பஞ்சாப் அணி ஆட்டத்தின் 9வது ஓவரில் முதல் விக்கெட்டினை கைப்பற்றியுள்ளது.
8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
6வது ஓவரின் கடைசி 4 பந்துகளை ரஹானே பவுண்டரிக்கு விளாசி அணியின் ஸ்கோர் மளமளவென உயர காரணமாக இருந்தார். இந்த ஓவரை பஞ்சாப் கேப்டன் சாம் கரன் வீசினார்.
ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் சென்னை அணியின் ரஹானே கொடுத்த கேட்ச் வாய்ப்பினை பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா தவறவிட்டார். இந்த பந்து பவுண்டரிக்குச் சென்றது.
5வது ஓவரில் சென்னை அணி மூன்று பவுண்டரிகளை விளாசி அதிரடிக்கு கியரை மாற்றியுள்ளது. இதன் மூலம் சென்னை அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நான்கு ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 23 ரனள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
மூன்று ஓவர்கள் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இரண்டு ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் சேர்த்துள்ளது.
இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தை கெய்க்வாட் பவுண்டரிக்கு விளாசினார்.
பஞ்சாப் அணி தனது முதல் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது. இந்த ஓவரை ரபாடா வீசினார்.
சென்னை அணியின் இன்னிங்ஸை ரஹானே மற்றும் கெய்க்வாட் தொடங்கியுள்ளனர்.
பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி களமிறங்கியுள்ளது.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் 10 போட்டிகளில் 9 போட்டிகளில் டாஸை இழந்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன்(கேட்ச்), ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா(வ), அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ரிச்சர்ட் க்ளீசன், முஸ்தாபிசுர் ரஹ்மான்.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி சென்னை அணிக்கு எதிராக பந்து வீச முடிவு செய்துள்ளது.
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இதுவரை 28 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக சென்னை அணி 15 முறையும், பஞ்சாப் 13 முறையும் வெற்றிபெற்றுள்ளது.
சென்னை பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண சென்னை அணி ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.
Background
நடப்பு ஐபிஎல் தொடரில் சொந்த மண்ணில் கலக்கலாக வெற்றிகளைக் குவித்து வரும் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று அதேபோல், தொடக்கத்தில் தோல்விகளைச் சந்தித்தாலும் பலமான அணிகளுக்கு எதிராக அதிரடியாக விளையாடி வெற்றியை தன்வசப்படுத்தும் அணி என்றால் அதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பெயர் கட்டாயம் இருக்கும். இந்நிலையில் இரு அணிகளும் இன்று அதாவது மே மாதம் முதல் தேதியில் மோதிக்கொள்ளவுள்ளது.
இரு அணிகளும் நடப்புத் தொடரில் முதல் முறையாக மோதிக்கொள்ளவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்புத் தொடரில் இதுவரை மொத்தம் 9 போட்டிகளில் விளையாடி அதில் 5 போட்டிகளில் வெற்றியும் நான்கு போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும்.
அதேபோல் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி தனக்கு மீதமுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டும்தான் தனது ப்ளேஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். பஞ்சாப் அணியைப் பொறுத்தவரையில் தரமான அணியாக இருந்தாலும் களத்தில் எதாவது சொதப்பலாக அமைந்து வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியை தழுவும் நிலைக்கு ஆளாகியுள்ளது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் அதன் ப்ளேஆஃப் சுற்று வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் இல்லை என்றால், பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுடன் கடைசி மூன்று இடத்திற்கு போராடவேண்டிய நிலை ஏற்படும்.
சொந்த மண்ணில் களமிறங்கும் சென்னை
சென்னை அணிக்கு இன்றைய போட்டியில் உள்ள சாதகமான விஷயங்களில் ஒன்று அதன் சொந்த மைதானத்தில் தனது ரசிகர்கள் பட்டாளத்திற்கு மத்தியில் களமிறங்குவதும் கடந்த போட்டியில் பலமான பேட்டிங் வரிசை கொண்ட ஹைதராபாத் அணியை வீழ்த்தியதும்தான். இப்படியான நிலையில் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி தனது வெற்றியை எட்ட அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் மைதானத்தில் கூடியுள்ளனர்.
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இதுவரை 28 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக சென்னை அணி 15 முறையும், பஞ்சாப் 13 முறையும் வெற்றிபெற்றுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -