கிரிக்கெட்டினை ஜெண்டில்மேன் கேம் என கூறுவதை கேள்விப்பட்டு இருப்போம். அதனை உறுதிப்படுத்துபோல பல ஆட்டங்களில் பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. ஆனால் பல இடங்களில் வீரர்களின் நடவடிக்கையும் நடுவர்களின் நடவடிக்கையும் இருந்துள்ளது. இதனை கிரிக்கெட் உலகில் விமர்சித்தும் வந்துள்ளனர். ஆனால் வீரர்கள் மற்றும் நடுவர்களின் தவறான நடவடிக்கையினால், முடிவினால் ஆட்டத்தை ஒரு இழந்திருக்கின்றது என்றால் அந்த முடிவினை மாற்றுவது முற்றிலும் இயலாத விஷயம். இப்படி இருக்கும்போது, கிரிக்கெட் உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும், அதிக பணம் புழங்கும் லீக் போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் நடுவர்களின் தவறான முடிவுகள் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. 


இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமாக உள்ள ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹஸ்ஸி இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் யூட்டூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தோனி குறித்தும், தோனி ஒரு போட்டியில் எவ்வாறு ஒரு அணி விளையாடவேண்டும் என வீரர்களிடன் சொன்னது குறித்தும் பேசியுள்ளார். இணையத்தில் வைராலாகி வருகின்றது. மைக்கேல் ஹஸ்ஸி கூறியது கிரிக்கெட் நிஜமாலுமே ஜெண்டில்மேன் கேம் தான் என பலரையும் கூறவைத்துள்ளது. 


அப்படி என்ன சொன்னார் தோனி?


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை அணி வீரர்களிடன் கேப்டனாக தோனி கூறியது, “ நாம் இந்த போட்டியில் வெல்வது குறித்தோ அல்லது தோற்பது குறித்தோ எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. ஆனால் இந்த போட்டியில் நமக்கு ஃபேர்ப்ளே விருது மிகவும் முக்கியம். எனவே அனைவரும் அதனை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளவும் என தெரிவித்தார். இது எனக்கு குழப்பமாக இருந்தது. ஆனால் போட்டி முடிந்து அறைக்கு சென்றபோது வீரர்கள் நிம்மதியாக கிரிக்கெட் விளையாடியதை உணர முடிந்தது” என கூறியுள்ளார். 






ஹஸ்ஸியின் இந்த பேச்சு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக எப்படியாவது வெற்றியைப் பெற்றுவிடவேண்டும் எனும் நோக்கில் பல அணிகள் முயற்சிக்கும்போது, தோனி மட்டும் வெற்றியை விடவும் நேர்மையாக விளையாடுவதுதான் முக்கியம் எனக் கூறி இளம் வீரர்களை வழிநடத்தியது அனைவரது பாரட்டையும் பெற்றுள்ளது.


கேப்டன் கூல் என வர்ணிக்கப்படும் தோனியை கொண்டாடும் ரசிகர்களிடத்தில் நேர்மையாக விளையாடு எனக் கூறியதற்காகவே தோனியை நூற்றாண்டு கடந்தும் கொண்டாடப்படவேண்டும் எனவும் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 


சென்னை அணி தனது அடுத்த ஐபிஎல் லீக் போட்டியில் வரும் 14ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை மும்பை அணியின் சொந்த மைதானமான வானகடேவில் சந்திக்கவுள்ளது.