இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 எதிர்பார்த்ததை விட அதிகளவில் பரபரப்பை தருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பல இளம் வீரர்கள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிபடுத்துகின்றன. அதிரடி, அதிவேகம், சிறுத்தை பீல்டிங் என பலரும் பந்தயத்தில் கோதா கட்டி வரும் நிலையில், பல வீரர்கள் காயத்தினால் தொடரில் இருந்து விலகும் சோகம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. இதனால், காயத்தினால் விலகிய வீரர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. 

சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிகளவில் ட்ரெண்டான லக்னோ அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், சில நாட்களுக்கு முன்பு காயத்தினால் ஒரு சில போட்டிகளை தவறவிட்டுள்ளார். இவரது காயம் இன்னும் பெரியளவில் ஆக கூடாது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்தநிலையில், காயம் மற்றும் பிற காரணங்களால் ஐபிஎல் 2024ல் இருந்து விலகிய வீரர்கள் மற்றும் அவர்களுக்கு பதிலாக அணியின் இணைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை இங்கே பார்க்கலாம். 

எண் வெளியேறிய வீரர்கள் காரணம் மாற்றப்பட்ட வீரர்கள் அணி விவரம்
1 விஷ்ணு வினோத் முன்கை காயம் ஹர்விக் தேசாய் மும்பை இந்தியன்ஸ்
2 வனிந்து ஹசரங்க கால் காயம் விஜயகாந்த் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
3 சிவம் மாவி விலா அழுத்த முறிவு யாரும் அறிவிக்கப்பட வில்லை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
4 டேவிட் வில்லி தனிப்பட்ட காரணங்கள் மாட் ஹென்றி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
5 ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் என்ன காரணம் என்று தெரியவில்லை லூக் வூட் மும்பை இந்தியன்ஸ்
6 லுங்கி என்கிடி என்ன காரணம் என்று தெரியவில்லை ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் டெல்லி கேப்பிடல்ஸ்
7 ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்கள் லிசாட் வில்லியம்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ்
8

முகமது ஷமி

வலது குதிகால் பிரச்சனைக்கான அறுவை சிகிச்சை சந்தீப் வாரியர் குஜராத் டைட்டன்ஸ்
9 பிரசித் கிருஷ்ணா இடது ப்ராக்ஸிமல் குவாட்ரைசெப்ஸ் தசைநார் அறுவை சிகிச்சை கேசவ் மகாராஜ் ராஜஸ்தான் ராயல்ஸ்
10 மார்க் வூட் பணிச்சுமை காரணமாக இங்கிலாந்து அணி அனுப்பவில்லை ஷமர் ஜோசப் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
11 கஸ் அட்கின்சன் பணிச்சுமை காரணமாக இங்கிலாந்து அணி அனுப்பவில்லை துஷ்மந்த சமீர கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
12 ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்கள்  பில் சால்ட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
13 டெவோன் கான்வே  கட்டைவிரல் அறுவை சிகிச்சை காரணமாக விலகல் ( அணிக்கு திரும்பலாம்) யாரும் அறிவிக்கப்பட வில்லை சென்னை சூப்பர் கிங்ஸ்
14 தில்ஷான் மதுஷங்க தொடை காயம் குவேனா மபகா மும்பை இந்தியன்ஸ்
15 ராபின் மின்ஸ் பைக் விபத்து பி.ஆர்.சரத் குஜராத் டைட்டன்ஸ்
16 மதீஷ பத்திரன தொடை காயம் காரணமாக விலகல் (அணிக்கு திரும்பலாம்) யாரும் அறிவிக்கப்பட வில்லை சென்னை சூப்பர் கிங்ஸ்
17 ஆடம் ஜம்பா தனிப்பட்ட காரணங்கள்  தனுஷ் கோட்யான் ராஜஸ்தான் ராயல்ஸ்
18 முஜீப் உர் ரஹ்மான் வலது (கை) ஒரு சுளுக்கு காரணம் அல்லா கசன்ஃபர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்