அதிக விக்கெட்டுகள் எடுத்த சி.எஸ்.கே வீரர்கள்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளதுஅந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறதுஅதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சி.எஸ்.கே வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்:

மற்ற மைதானங்களில் நடைபெறும் போட்டிகளை விட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் அந்த அணி வீரர்களை உற்சாகப்படுத்தும். அதன்படி, இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சென்னை அணி வீரராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். அதன்படி, இதுவரை 48 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியிருக்கிறார். டிஜே பிராவோ இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மூன்றாம் இடத்தில் இருப்பவர் ஆல்பி மோர்கலல். அவர் சி.எஸ்.கே அணிக்காக சென்னையில் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரவீந்திய ஜடேஜா 30 விக்கெட்டுகளுடன் 4 வது இடத்திலும், டக் பொலிங்கர் 20 விக்கெட்டுகளுடன் 5 வது இடத்திலும் உள்ளார்.

 

பட்டியல் இதோ:

             

                                                  பந்து வீச்சாளர்கள் 

                                              விக்கெட்டுகள் 

                                                                   அஸ்வின்                                                            48
                                                                  டிஜே பிராவோ                                                                                                                      44
                                                                 ஆல்பி மோர்கல்                                                                                                                          35

                                                                  ஜடேஜா

                                                          30

                                                                 டக் பொலிங்கர்                                                          

                                                          20