சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளதுஅந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறதுஅதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் ஹோம் மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அதிக ரன்கள் குவித்த சி.எஸ்.கே. வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்:

அதிக ரன்கள் குவித்த சி.எஸ்.கே வீரர்கள்:

இந்த பட்டியில் முதல் இடத்தில் இருப்பவர் குட்டி தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா. அந்தவகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் 1506 ரன்களை குவித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர் 1445 ரன்களை குவித்து உள்ளார். 

             

                                                பேட்ஸ்மேன்கள்

                                              மொத்த ரன்கள்

                                                          சுரேஸ் ரெய்னா                                                       1506
                                                          எம்.எஸ்.தோனி                                                        1445
                                                              ஹைஸ்ஸி                                                         848

                                                     ஃபாஃப் டு பிளெசிஸ்

                                                       553

                                                           எஸ்.பத்ரினாத்

                                                     438