IPL 2024 Points Table: ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் அபார வெற்றி பெற்றன.

பெங்களூர் அணி அபார வெற்றி:

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகளமாக நடைபெற்று வருகிறது, தற்போது வரை 46 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. வார இறுதியான நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. முதலில் அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 200 ரன்கள் குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி,  ஜாக்சின் சதம் மற்றும் கோலியின் அரைசதத்தால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் அந்த அண் பெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும்.

வெற்றி பாதைக்கு திரும்பிய சென்னை:

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 212 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 98 ரன்கள் சேர்த்தார். இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி, இரண்டு தொடர் தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.  இந்த வெற்றியின் மூலம், நடப்பு தொடரில் ஏற்கனவே ஐதராபாத்திடம் பெற்ற தோல்விக்கு சென்னை அணி பழிவாங்கியுள்ளது.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் விவரங்கள்:

 

எண்அணிபோட்டிகள்வெற்றிதோல்விபுள்ளிகள்
1 ராஜஸ்தான் ராயல்ஸ்98116
2கொல்கத்தா நைட் ரைடர்ஸ்85210
3சென்னை சூப்பர் கிங்ஸ்95410
4சன்ரைசர்ஸ் ஐதராபாத்95410
5லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்95410
6டெல்லி கேபிடல்ஸ்105510
7குஜராத் டைட்டன்ஸ்10468
8பஞ்சாப் கிங்ஸ்9366
9மும்பை இந்தியன்ஸ்9366
10ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்10376

இன்றைய போட்டி:

இன்று நடைபெறும் தொடரின் 47வது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி ஆகிய அணிகள் மோத உள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் தனது இடத்தை மேலும் இறுகப்பற்றிக் கொள்ளும். 6வது இடத்தில் உள்ள டெல்லி அணி வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறக்கூடும்.  நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், கொல்கத்தா அணி  106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் டெல்லி அணி இன்று களம் காண உள்ளது. ஐபில் போட்டிகளின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

அதிக ரன் சேர்த்த வீரர்கள்:

  • விராட் கோலி - 500 ரன்கள்
  • ருதுராஜ் கெய்க்வாட் - 447 ரன்கள் 
  • சாய் சுதர்ஷன் - 418 ரன்கள்
  • சஞ்சு சாம்சன் - 385 ரன்கள்
  • கே.எல். ராகுல் - 378 ரன்கள்

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்:

  • ஜஸ்பிரித் பும்ரா - 14 விக்கெட்டுகள்
  • முஸ்தபிசுர் ரஹ்மான் - 14 விக்கெட்டுகள்
  • ஹர்ஷல் படேல் - 14 விக்கெட்டுகள்
  • மதிஷா பதிரனா - 13 விக்கெட்டுகள்
  • நடராஜன் - 13 விக்கெட்டுகள்