இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வருகின்ற ஐபிஎல் 16 வது சீசன் முதல் இம்பாக்ட் பிளேயர் விதிக்கான புதிய விதிகள் அமல்படுத்தப்பட இருக்கின்றன. 


உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக்கான ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 31-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த சீசனின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 


அம்பயர் புதிய சிக்னல்: 


ஐபிஎல் 2023 ல் சில புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இம்பாக்ட் பிளேயரை பயன்படுத்தவும்  ஒரு விதி உள்ளது. இது தவிர, ஒவ்வொரு அணிக்கும் விளையாடும் லெவன் உட்பட 5 மாற்று வீரர்களின் விருப்பமாக தேர்ந்தெடுக்கலாம். 14வது ஓவர்கள் முடிவதற்குள்  நடுவர் தனது கைகளை குறுக்காக மடக்கி சிக்னல் தருவார். அப்போது கேப்டன் தனக்கு விருப்பமான 5 மாற்று வீரர்களில் ஒருவரை களமிறக்கலாம். 






SA20 லீக்கில் பயன்படுத்தப்பட்ட இம்பாக்ட் ப்ளேயர்: 


இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த SA20 லீக்கில் இம்பாக்ட் பிளேயர் விதி பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், இந்த விதி இந்தியன் பிரீமியர் லீக் 2023 இல் செயல்படுத்தப்பட இருக்கிறது. இன்னிங்ஸின் 14 ஓவர்கள் முடிவதற்குள், விளையாடும் லெவனில் இருந்து ஒரு வீரரை கேப்டன் வெளியேற்றிவிட்டு 5 வீரர்களில் யாராவது ஒருவரை அணியில் எடுக்கலாம். 14 ஓவர்களுக்குப் பிறகு இந்த விதி பொருந்தாது. ஆனால் போட்டி குறைவான ஓவர்கள் மற்றும் போட்டி 10 ஓவர்களுக்கு குறைவாக இருந்தால், இந்த விதி அமல்படுத்தப்படாது. இந்த விதியை அமல்படுத்த, குறைந்தபட்சம் 11 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தை வைத்திருப்பது அவசியம். ஒரு இம்பெக்ட் வீரராக, பந்து மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் திறன் கொண்ட வீரருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 


ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை வென்றது:


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியினர் 2-1 என கைப்பற்றியுள்ளனர். (நேற்று) புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் தீர்க்கமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா அற்புதமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.