ஐபிஎல் 2021ம் தொடருக்கு பிறகு முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) கேப்டனாக விராட் கோலி இன்று களமிறங்குகிறார். 


ஐபிஎல் தொடரின் 27வது போட்டியில் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி எதிர்கொள்கிறது, மொஹாலியில் உள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கியது.


கடந்த 2022ம் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கோலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியிலிருது விலகினார். இதையடுத்து, கேப்டன் பதவியை ஏற்க தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டு பிளிசியை ஆர்சிபி நிர்வாகம் கடந்த ஆண்டு ஏலத்தில் எடுத்தது. இந்தநிலையில்,  விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக டு பிளிசி பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடவில்லை. இதன் காரணமாக ஓராண்டு பிறகு பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி இன்று மீண்டும் களமிறங்கியுள்ளார். 


சென்னை அணிக்கு எதிரான போட்டியின்போது விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டனாக டு பிளிசி களமிறங்கவில்லை. இருப்பினும், இம்பாக்ட் வீரராக மட்டும் களமிறங்குவார் என விராட் கோலி தெரிவித்தார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் டாஸ் வென்ற  பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரன் பந்துவீசை தேர்வு செய்தார். 


ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, கடந்த 2013ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கோலி தலைமையில் இதுவரை 140 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி 64 வெற்றிகள், 69 தோல்விகளை பெற்றுள்ளது. 


RCB பிளேயிங் XI: 


விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, சுயாஷ் பிரபுதேசாய், ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னெல், முகமது சிராஜ்


பஞ்சாப் கிங்ஸ்: அதர்வா டைட், மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் சிங் பாட்டியா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்


RCB முழு அணி:


விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்) மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், அனுஜ் ராவத், டேவிட் வில்லி, ஆகாஷ் தீப், கர்ன் சர்மா, சுயாஷ் பிரபுதேசாய், மனோஜ் பந்தேஜ், மைக்கேல் பிரேஸ்வெல், ஃபின் ஆலன், சித்தார்த் கவுல், சோனு யாதவ், ராஜன் குமார், அவினாஷ் சிங், ஹிமான்ஷு சர்மா