ஐபிஎல் தொடரில் இதுவரை டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டிகளின் விவரங்கள் மற்றும் அதன் முடிவுகளை இந்த தொகுப்பில் அறியலாம்.


டெல்லி - கொல்கத்தா மோதல்:


ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில், வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை, நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம். முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடந்து முடிந்த போட்டிகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


நேருக்கு நேர்:


ஐபிஎல் தொடர் அறிமுகமானது முதலே விளையாடி வரும் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள், இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 15 முறை டெல்லி அணியும், 16 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய 5 போட்டிகளில், மூன்றில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. அருண் ஜெட்லி மைதானத்தில் இதுவரை கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் 10 முறை மோதியுள்ளன. அதில், 5 முறை கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மைதானமான அருண் ஜெட்லி மைதானத்தில் இதுவரை 75 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, 32 வெற்றிகளையும், 41 தோல்விகளையும் சந்தித்துள்ளது.


ஸ்கோர் விவரங்கள்:


டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 210


கொல்கத்தா அணிக்கு எதிராக டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 228


டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 97


கொல்கத்தா அணிக்கு எதிராக டெல்லி அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்:  98


தனிநபர் சாதனைகள்:


டெல்லி அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த கொல்கத்தா வீரர்: நிதிஷ் ராணா, 369


கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த டெல்லி வீரர்: டேவிட் வார்னர், 399


டெல்லி அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த கொல்கத்தா வீரர்: சுனில் நரைன், 25


கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த டெல்லி வீரர்: குல்தீப் யாதவ், 8


அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் - வார்னர், 107* vs கொல்கத்தா


சிறந்த பந்துவீச்சு - வருண் சக்ரவர்த்தி - 5/20 vs டெல்லி


இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில்  டெல்லி அணி சார்பில் அக்‌ஷர் படேல் அதிகபட்சமாக 6 கேட்ச்களையும், கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் அதிகபட்சமாக 8 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.


நடப்பு தொடரில் இதுவரை:


கொல்கத்தா அணி நடப்பு தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. டெல்லி அணியோ இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது