ஐபிஎல் 16வது சீசனின் 15வது போட்டியில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 


அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 23 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து தடுமாறியது.  அதன்பிறகு களமிறங்கிய ஸ்டாய்னஸ் 30 பந்தில் 65 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை இழக்க, அடுத்த ஓவரிலேயே கேப்டன் கே.எல். ராகுல் தனது விக்கெட்டை இழந்தார். 


இதனால், லக்னோ அணி 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற தொடங்கியது. அதன் பின்னர் களத்திற்கு வந்த பூரன் கிடைத்த அனைத்து பந்துகளை எல்லைக்கு பறக்கவிட்டார். இவர் 15 பந்துகளில் அரைசதம் கடக்க, பெங்களூரு அணியின் வெற்றி வாய்ப்பு மங்க தொடங்கியது. 


லக்னோ அணிக்கு 24 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடியாக ஆடி வந்த பூரான் 19 பந்தில் 62 ரன்கள் சேர்த்து அவுட்டானார். அப்போது கடைசி இரண்டு ஓவர்களில் லக்னோ அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது.  களத்தில் இருந்த இம்பேக்ட் ப்ளேயர் பதோனி சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஹிட்-விக்கெட் முறையில் வெளியேற, கடைசி ஓவரில் லக்னோ அணிக்கு 5 ரன்கள் தேவையாக இருந்தது.


கடைசி ஓவரின் முதல் பந்தில் உனத்கட் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தில் ஹர்ஷல் பட்டேல் வீசிய ஃபுல்டஸ் பந்தில் மார்க்வுட் க்ளீன் போல்ட்டாகி வெளியேறினார். மூன்றாவது பந்தில் இரண்டு ரன்னும், நான்காவது பந்தில் ஒரு ரன் லக்னோ அணி சார்பில் எடுக்கப்பட்டது. இதன் மூலம் போட்டி டிரா ஆனாது.  ஐந்தாவது பந்தில் லக்னோ அணி ஒரு விக்கெட்டை இழக்க, ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என இருந்தது. அந்த பந்தில் லக்னோ அணி ஒரு ரன் பைஸ் முறையில் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. 






எப்படியும் பெங்களூரு அணி வெற்றி பெற்றுவிடும் என்று அந்த ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆர்சிபி ரசிகர்களுக்கு ஏமாற்றமே அடைந்தது. மறுபுறம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் இந்த வெற்றிக்கு பிறகு மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டார். வெற்றிக்குபிறகு மிகவும் சந்தோஷத்தில் குதித்த அவர், ஒன்றாக அமர்ந்திருந்த அணியின் ஊழியர்கள் மற்றும் வீரர்களை கட்டிப்பிடுத்தார். அப்போது அந்த வெற்றியின் மகிழ்ச்சியுடன் ஆக்ரோஷமும் காம்பீர் கண்களில் தெரிந்தது. 


தொடர்ந்து, காம்பீர் பெங்களூரு வீரர்களுடன் கைகுலுக்கிவிட்டு, ஸ்டாண்டில் இருந்த ரசிகர்களை பார்த்து வாயில் விரலை வைத்து சைகை செய்தார். இதனால், ஆத்திரமடைந்த பெங்களூரூ ரசிகர்கள் கவுதம் காம்பீரை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், காம்பீர் காட்டிய அந்த சைகை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையேயான நெருங்கிய நட்பு நாம் அனைவரும் அறிந்ததே. இருவரும் டெல்லியை சேர்ந்தவர்கள். சில சமயம் ஐபிஎல்லில் இருவரும் மோதிக் கொண்டனர். லக்னோவின் வெற்றியை விட, சொந்த மண்ணில் விராட் மற்றும் அவரது அணி தோல்வியடைந்த மகிழ்ச்சியே அதிகம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். கம்பீர் மற்றும் விராட் இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.






பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை தொடர்ந்து புள்ளி பட்டியலில் லக்னோ அணி மீண்டும் முதலிடம் பிடித்தது. 


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்:  கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, அமித் மிஸ்ரா, ரவி பிஷ்னோய், ஏ கான், ஜெய்தேவ் உனட்கட் மற்றும் மார்க் வுட்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன்:  ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, மஹிபால் லோமரோர், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), எஸ் அகமது, ஏ ராவத், எச் பட்டேல், டேவிட் வில்லி, முகமது சிராஜ் மற்றும் வெய்ன் பார்னெல்.