ஐபிஎல் 2023 லீக் ஸ்டேஜின் இறுதி நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. எஞ்சியிருக்கும் ஒரு பிளே ஆஃப் இடத்திற்காக மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் போராட இருக்கின்றன. இன்று தெரிந்துவிடும் எந்த அணி 4வது அணியாக பிளே ஆஃப்க்குள் செல்லும் என்று... 


இன்றைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.  இந்த போட்டிகள் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்திலும், பெங்களூருவில் உள்ள சின்னசானி ஸ்டேடியம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. 


மும்பை அணியின் பிளே ஆஃப் கனவு: 


மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் 13 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணியின் நிகர ரன் ரேட் -0.128 ஆகும். ஆனால், பெங்களூரு அணி  +0.180 ஆக உள்ளது. 


இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு வழிகளில் பிளே ஆப்க்கு செல்லலாம். முதலில் மும்பை அணி சர்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்த வேண்டும். அதன்பிறகு குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தோற்க வேண்டும். 


இது நடக்காமல் மும்பை அணி ஹைதராபாத் அணிக்கு எதிராகவும், பெங்களூரு குஜராத் அணிக்கு எதிராகவும் வெற்றிபெற்றால் மும்பை அணியின் பிளே ஆஃப் கனவு கலைந்துவிடும். இன்றைய போட்டியில் பெங்களூர் விட குறைந்தது 78 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றிபெற வேண்டும். அதாவது, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி குறைந்தபட்சம் 79 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். 


ஆர்சிபியின் பிளே ஆஃப் கனவு: 


பெங்களூர் அணி, மும்பை அணி விளையாடும் போட்டி முடிவை காண மிகவும் ஆர்வமாய் இருக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற பெங்களூரு அணிக்கு ரன் ரேட் சாதகமாக இருந்தாலும், ஒரு தலைவலியும் அவர்களை சூழ்ந்தே உள்ளது.


ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றாலும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 6 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் தோல்வியடையாமல் இருக்க வேண்டும். இதற்கு காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான். இன்றைய போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு தோல்வியடைந்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப்க்குள் செல்ல வாய்ப்புள்ளது. தற்போது ராஜஸ்தான் அணி +0.148 ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இது மும்பை அணியின் ரன் ரேட்டை விட அதிகம். 


உள்ளே வருமா ராஜஸ்தான்..? 


மும்பை மற்றும் பெங்களூரு அணி தங்களது கடைசி லீக் போட்டியில் தோற்றால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. இரு அணிகளும் தோற்று குஜராத் டைட்டன்ஸ் அணி பெங்களூரு அணியை 6 ரன்கள் அல்லது அதற்கு மேல் வித்தியாசத்தில் வென்றிருந்தாலோ அல்லது (உதராணமாக) 19.3 ஓவர்களுக்குள் 180 ரன்களை பெங்களூரு அணி எடுக்கவில்லை என்றால் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப்க்குள் தகுதிபெறும்.