IPL 2023 Playoffs Scenario: ஐபிஎல் தொடரில் தற்போது கிட்டத்தட்ட 70 சதவீத போட்டிகளை கடந்து விட்டது. ஆனால் களத்தில் உள்ள 10 அணிகளில் ஒரு அணி கூட இதுவரை ப்ளேஆஃப்க்கு தகுதி பெறவில்லை. அதேநேரத்தில் அனைத்து அணிகளும் ப்ளேஆஃப்க்கு தகுதி பெறும் வாய்ப்புடன் உள்ளது. இந்த நிலை இதுவரை முடிந்த 15 ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட நடைபெறவில்லை. இந்த நிலையால் 10 அணிகளும் கொஞ்சம் பகீர் மனநிலையுடன் தான் உள்ளது. அதே நேரத்தில் 10 அணிகளும் இனி எதிர்வரும் போட்டிகளில் வெல்ல தங்களை முழுமையாக தயார் படுத்திக்கொண்டுள்ளன. 


1. சென்னை சூப்பர் கிங்ஸ்


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 11 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் இந்த அணிக்கு மூன்று போட்டிகள் உள்ளது. அதில் டெல்லி அனியுடன் இரண்டு போட்டிகளும் கொல்கத்தாவுடன் ஒரு போட்டியும் உள்ளது. இதில் இரண்டு போட்டிகள் சென்னையிலும், ஒரு போட்டி டெல்லியிலும் நடைபெறவுள்ளது. இந்த மூன்று போட்டிகளில் சென்னை அணி மூன்றில் வெற்றி பெற்றால் கட்டாயம் ப்ளேஆஃப்க்குள் நுழைந்து விடும். 


2. டெல்லி கேப்பிடல்ஸ்


டெல்லி அணி தற்போது 10 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளிலும் டெல்லி அணி வெற்றி பெற்றால் ப்ளேஆஃப்க்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. டெல்லி அணிக்கு மீதமுள்ள நான்கு போட்டிகளில் சென்னை மற்றும் பஞ்சாப்புடன் தலா 2 போட்டிகளில் விளையாட வேண்டும். 


3. குஜராத் டைட்டன்ஸ்


11 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளுடன் உள்ள இந்த அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப்க்குள் நுழைந்து விடும். இந்த அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் உள்ளன. மும்பை , ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிராக மோதவுள்ளது. 


4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  


இந்த அணி நேற்று (மே, 8) பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற த்ரில் வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தற்போது 10 புள்ளிகளுடன் உள்ள இந்த அணி தனக்கு மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வென்றால் ப்ளேஆக்குள் நுழைந்து விடும். கொல்கத்தா அணி ராஜஸ்தான், சென்னை மற்றும் லக்னோ அணிகளுடன் தலா ஒரு முறை மோதவுள்ளது. 


5. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்


11 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த அணி மீதமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப்க்குள் நுழைந்து விடும். இந்த அணி ஹைதராபாத் , மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 


6. மும்பை இந்தியன்ஸ் 


10 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ள மும்பை அணி மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் நிச்சயம் ப்ளேஆஃப்க்குள் நுழைந்து விட முடியும். ஆனால் அந்த அணிக்கு மிகவும் சவாலான அணிகளுடன் தான் இனி மோதலே. அதாவது பெங்களூரு, குஜராத், லக்னோ மற்றும் ஹைதராபாத் அணியுடன் தான் மோதலே. இந்த நான்கு போட்டிகளும் மும்பை அணிக்கு சவாலானதாக இருக்கும். 


7. பஞ்சாப் கிங்ஸ்


11 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்த அணி தனக்கு மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் நிச்சயம் ப்ளேஆஃப்க்குள் நுழையும். இந்த அணி டெல்லியுடன் இரண்டு முறையும் ராஜஸ்தானுடன் ஒரு முறையும் மோதவுள்ளது. 


8. ராஜஸ்தான் ராயல்ஸ் 


11 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் மீதமுள்ளன. இந்த மூன்று போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் ப்ளேஆஃப்க்குள் நுழைந்து விடும். இந்த அணி கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுடன் மோதவுள்ளது. 


9. ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு


இந்த முறையாவது கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள பெங்களூரு அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இந்த அணி தனக்கு மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் நிச்சயம் ப்ளேஆஃப்க்குள் நுழைந்து விடும். இந்த அணி இனி மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத் மற்றும் குஜராத் அணியுடன் மோதவுள்ளது. 


10. சன் ரைசர்ஸ் ஹைதராபாத்


10 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி. இனி தனக்கு மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப்க்கு தகுதி பெறும். இந்த அணி லக்னோ, குஜராத், பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுடன் மோதவுள்ளது. 


ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளுக்கும் ப்ளேஆஃப்க்கு தகுதி பெறக்கூடிய நிலையில் இருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.