ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் 8வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அசாம் கவுஹாத்தியில் உள்ள மைதானத்தில் நடத்தப்பட்டது.  இதில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச முடிவு செய்தார். 


இதன் படி பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை, அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ப்ரப்சிம்ரன் தொடங்கினர். இருவரும் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடி வந்தனர். குறிப்பாக ப்ரப்சிம்ரன் மைதானத்தின் நாலாபுறாமும் பந்துகள் பவுண்டரி எல்லைகளை தொட்டபடின் இருந்தது. ராஜஸ்தான் அனியின் ஆஸ்தான பந்துவீச்சாளர்கள் எனப்படும் போல்ட், அஸ்வின், சஹால், ஹோல்டரின் ஓவர்களை ப்ரப்சிம்ரன் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அதகளப்படுத்தினார். 


இதனால் அணியின் ஸ்கோர் ஐந்து ஓவர்களிலேயெ ஐம்பதைக் கடந்தது. அதனைத் தொடர்ந்து ப்ரப்சிம்ரன் 28 பந்தில் 50 ரன்களை எட்டினார்.  இவர்கள் கூட்டணியை பிரிக்க ராஜஸ்தான் அணியினர் திட்டம் நீண்ட நேரம் எடுபடவில்லை. இறுதியில் பஞ்சாப் அணி 4விக்கெட்டுகளை இழந்து 197ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 56 பந்தில் 86 ரன்கள் குவித்து இருந்தார். ராஜஸ்தான் அணி சார்பில் அஸ்வின், சஹால் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஹோல்டர் இரண்டு விக்கெட்டுகள் விழ்த்தி இருந்தார்.


சஞ்சு சாம்சன் திட்டம்


மைதானத்தில் பணியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், புது பந்தினை எதிர்கொள்வது மிகவும் சிரமம் என்பதால், ராஜஸ்தான் அணியின் கேப்டன்  சஞ்சு சாம்சன் தொடக்க வீரர்களாக அஸ்வினையும் ஜெய்ஸ்வாலையும் அனுப்பினார். ஆனால் அவரது திட்டம் சரியாக நடைமுறையாவதற்கு முன்னதாகவே ராஜஸ்தான் அணி விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. 


பனிப்பொழிவை சரியாக பயன்படுத்திக் கொண்ட பஞ்சாப் அணியினர் சிரமமே இல்லாமல் விக்கெட்டுகள் வீழ்த்தினர்.  அணியின் நம்பிக்கை நாயகர்களான பட்லர் மற்றும் சாம்சன் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். 12 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்தது. 


ரன்ரேட் சீராக இருந்தாலும், வெற்றி இலக்கை எட்ட சிறந்த பாட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் நிலையான பார்ட்னர்ஷிப்பை அமைப்பதற்கு முன்னதாகவே ரியான் அவரைத் தொடர்ந்து படிக்கல் என இருவரும் தங்களது விக்கெட்டை இழக்க போட்டி ராஜஸ்தானுக்கு நெருக்கடியாக அமைந்தது. அதன் பின்னர் களத்தில் இருந்த ஹிட் மயர் உடன் இம்பேக்ட் ப்ளேயர் துருவ் ஜெரில் இணைந்தார். ஆனால் இருவருக்குமான பணி என்பது மிகவும் பெரிதாக இருந்தது.  இருவரும் இணைந்து 26 பந்தில் 61 ரன்கள் குவித்தனர். கடைசி 3 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அதில் 6 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. 


இறுதியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192  ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 5 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, பஞ்சாப் அணியின் சார்பில், நாதன் எல்லீஸ் 4 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.