KKR vs PBKS, 1 Innings Highlights: இறுதி ஓவரில் ருத்ரதாண்டவமாடிய ஷாரூக்கான்.. கொல்கத்தாவுக்கு 180 ரன்கள் இலக்கு..!

IPL 2023, KKR vs PBKS: 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்தது.

Continues below advertisement

KKR vs PBKS: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டி என்பதால் இந்த போட்டியின் மீது இரு அணி ரசிகர்களிக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங் செய்ய முடுவு செய்தார்.

Continues below advertisement

தடுமாறிய பஞ்சாப்

கடந்த 4 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவித்த பஞ்சாப் அணி இந்த முறையும் 200 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ப்ராப்சிம்ரன் தொடங்கினர். பஞ்சாப் அணிக்கு முதல் ஓவர் மட்டும் சிறப்பாக அமைந்தது. அதன் பின்னர் இரண்டாவது ஓவரின் இறுதிப் பந்தில் ப்ராப் சிம்ரன் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த பனுகா ராஜபக்ச ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறே, மிடில் ஆர்டரில் இறங்கி சிறப்பாக ரன்கள் குவிக்கும் லிவிங்ஸ்டன் பவர்ப்ளேவிற்குள் இறங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் அவரும் பவர்ப்ளேவின் இறுதியில் தனது விக்கெட்டை இழக்க, பஞ்சாப் அணி பவர்ப்ளே முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் சேர்த்து இருந்தது.  கொல்கத்தாவின் ஹர்ஷித் இரண்டு விக்கெட்டுகளையும் வருண் சக்ரவர்த்தி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர், 

நிதான ஆட்டம்

அதன் பின்னர் ஜிதேஷ் சர்மா ஷிகர் தவானுடன் இணைய இருவரும் நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் பஞ்சாப் அணி வழுவான நிலைக்குச் சென்றது. ஆனால் இவர்களது கூட்டணியை வருண் சக்ரவர்த்தி பிரித்தார். இவர்கள் இருவரும் தத்தளித்துக்கொண்டு இருந்த பஞ்சாப் அணியை மெல்ல மெல்ல மீட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கேப்டனிடம் சரணடைந்த கேப்டன்

அதன் பின்னர் பொறுப்புடன் ஆடிவந்த ஷிகர் தவான் 41 பந்தில் சிக்ஸர் விளாசி தனது அரைசதத்தினை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் அதிரடியாக விளையாட நினைத்த ஷிகர் தவான் கொல்கத்தா கேப்டன் ராணாவின் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் பஞ்சாப் அணி அடுத்ததுத்து விக்கெட்டுகளை இழந்ததால், 200 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்ய முடியவில்லை. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியின் சார்பில் ஷிகர் தவான் 57 ரன்களும், இறுதி ஓவரில் அதிரடியாக விளையாடிய ஷாருக் கான் 21 ரன்களும் ஜிதேஷ் சர்மா 21 ரன்களும் சேர்த்தனர். கொல்கத்தா அணியின் சார்பில் வருண் சக்ரவர்த்தி மூன்று விக்கெட்டுகளும் ஹர்ஷித் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

Continues below advertisement