ஐபிஎல் தொடரின் 35வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று இரவு மோத இருக்கின்றன. இந்த இரு அணிகள் மோதுவதை விட இந்த போட்டியில் சுப்மன் கில் மற்றும் அர்ஜூன் டெண்டுல்கர் அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்முறையாக நேருக்குநேர் சந்திக்க இருக்கின்றன. இதற்கு காரணம் சாரா டெண்டுல்கர்தான்.
கடந்த சில ஆண்டுகளாகவே சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரும், இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்லும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும், இருவர் தரப்பில் இருந்தும் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அர்ஜுன் டெண்டுல்கர் vs சுப்மன் கில்
கடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கர் ஒரே ஓவரில் 31 ரன்களை விட்டுகொடுத்தார். அதனால், இன்றைய குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறக்கப்படுவாரா என்ற கேள்வி உள்ளது. இருப்பினும், அர்ஜூன் டெண்டுல்கரின் மீதுள்ள நம்பிக்கையில் ரோகித் சர்மா இன்று மீண்டும் வாய்ப்பை பெறலாம் என்று நம்பலாம்.
இந்தநிலையில், மாமன் மற்றும் மச்சான் ஆகபோவதாக கூறி இணையத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். இவர்களை பற்றிய சில வேடிக்கையான மீம்ஸ் வீடியோக்கள்..