லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி புது சாதனையை படைத்துள்ளார். கடைசி ஓவரில் 8ஆவது விக்கெட்டுக்கு  களமிறங்கிய தோனி தொடர்ந்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார். தொடர்ந்து அவர் எதிர்கொண்ட 3வது பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.  இதனால் ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களை கடந்த 7 வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் எம்.எஸ்.தோனி. இதுவரை ஐபிஎல் போட்டியில் மட்டும் தோனி 5004 ரன்கள் குவித்துள்ளார்.