இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) முதல் செட் போட்டிகள் முடிவடைந்தன. இதில் 10 அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. இந்த தொடரில் பெரும்பாலும் கவனம் ஈர்த்த விதி 'இம்பாக்ட் பிளேயர்' விதி ஆகும். டாஸ்க்குப் பிறகு, அணிகள் ஐந்து மாற்று வீரர்களைக் குறிப்பிடலாம். இம்பாக்ட் பிளேயர் என்பது போட்டியின் எந்த நிலையிலும் போட்டியில் உள்ள 11 வீரர்களில் உள்ள எந்த வீரரையும் மாற்ற முடியும் என்பது தான். 

 

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை அதாவது நேற்று (ஏப்ரல், 2) ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் (MI) க்கு எதிராக  எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி  மட்டுமே தங்களது அணி சார்பில் இன்னும் இம்பேக்ட் ப்ளேயரை பயன்படுத்தவில்லை.


IPL 2023 இல் தாக்க வீரர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்ற விபரங்கள் 


துஷார் தேஷ்பாண்டே : வலது கை வேகப்பந்து வீச்சாளரான துஷார் தேஷ்பாண்டே ஐபிஎல் வரலாற்றில் களமிறக்கப்பட்ட முதல் இம்பேக்ட் ப்ளேயர் ஆவார்.  மார்ச் 31 அன்று குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் அம்பதி ராயுடுவுக்குப் பதிலாக அவர் விளையாடினார். ஆனால் இந்த போட்டியில் இவர் 3.2 ஓவர்கள் வீசி 51 ரன்கள் வாரிக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றினார். 


சாய் சுதர்சன் :  சிஎஸ்கே அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டஸ்மேன் கேன் வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து இதனால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். அதனால் இம்பேக்ட் ப்ளேயராக சாய் சுதர்சன் களமிறங்கினார்.  3-வது இடத்தில் பேட்டிங் செய்த சுதர்சன் 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்தார். 


வெங்கடேஷ் ஐயர் : பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கான ஆரம்ப ஆடும் லெவன் அணியில் வெங்கடேஷ் ஐயர் இடம் பெறவில்லை. அதன் பின்னர் வ்வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக இம்பேக்ட் ப்ளெயராக களமிறங்கினார். அவர் 28 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து இருந்தார். 


ரிஷி தவான் : அனுபவமிக்க ஆல்-ரவுண்டரான பஞ்சாப் அணியின்  ரிஷி தவான் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜபக்சவுக்கு பதிலாக களமிறக்கபப்ட்டார்.  அவர் வீசிய ஒரே ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டதால் அந்த போட்டியில் மேற்கொண்டு அவர் எந்த ஓவரும் வீசவில்லை. 


கிருஷ்ணப்பா கௌதம் : டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இம்பாக்ட் பிளேயர் விதியை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியது. ஆயுஷ் படோனி ஆட்டமிழந்த உடனேயே கிருஷ்ணப்பா கௌதம் இம்பாக்ட் பிளேயராக வந்தார். கௌதம் தான் எதிர்கொண்ட ஒரே பந்தில் சேத்தன் சகாரியா பந்தில் சிக்ஸர் அடித்தார்.


அமன் கான்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் அமன் ஹக்கீம் கானை ஒரு இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்தியது. அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவுக்கு பதிலாக களமிறங்கினார் . ஆனால் அது  டெல்லி அணிக்கு சாதகமாக அமையவில்லை. அவர் நான்கு ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவேஷ் கான் அவரை அவுட்டாக்கினார்.


அப்துல் சமத் : ராஜஸ்தான் ராயல்ஸுக்கு  எதிரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  போட்டியில் ஃபசல்ஹாக் ஃபரூக்கிக்கு பதிலாக அப்துல் சமத் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கினார். சமத்  இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்தார், ஆனால் அது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்க்கு போட்டியை வெல்ல போதுமானதாக இல்லை.


நவ்தீப் சைனி : ஹைதராபாத்துக்கு  எதிரான போட்டியில் ராஜஸ்தானின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலினுக்கு பதிலாக  இம்பாக்ட் பிளேயராக நவ்தீப் சைனி வந்தார். வேகப்பந்து வீச்சாளர் இரண்டு ஓவர்களில் 34 ரன்களை வாரி வழங்கினார், ஆனால்  அந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அதற்கு சைனி சரியான பங்களிப்பை வழங்கவில்லை. 


ஜேசன் பெஹ்ரென்டார்ஃப் : பெங்களூரு அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி  சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜோசன் பெஹ்ரெண்டார்ஃப் இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்தியது. பெஹ்ரென்டார்ஃப் மூன்று ஓவர்களில் 37 ரன்களை வாரிக்கொடுத்ததால் மும்பை அணிக்கு எந்தவிதமான இம்பேக்ட்டும் ஏற்படுடவில்லை.